Actor Karthi: இன்றுடன் நிறைவடையும் கார்த்தி 27 சூட்டிங்.. எங்க நடக்குது தெரியுமா?

சென்னை: நடிகர் கார்த்தியின் அடுத்தடுத்த படத் தேர்வுகள் மிரட்டலாக அமைந்து வருகின்றன. ஒரு சில படங்கள் சொதப்பினாலும் அவரது கேரியரில் அதிகமான வெற்றிப்படங்களே உள்ளன. அந்த வகையில் கார்த்தி ரிஜெக்ட் செய்த ஒரு படத்தில் தான் நடித்து மொக்கை வாங்கிய அனுபவத்தை சமீபத்தில் ஒரு படவிழாவில் ஆர்யா பகிர்ந்துக் கொண்டார். அதுமுதல் இனிமேல் கார்த்தி ரிஜெக்ட் செய்த படங்களை கமிட் செய்வதில்லை என்று தான் உறுதியுடன் செயல்பட்டு வருவதாகவும் அவர் கூறியிருந்தார். கார்த்தியின் அடுத்தடுத்த படங்கள் வெற்றிப்படங்களாக மாஸ் காட்டிய நிலையில், கடந்த ஆண்டில் வெளியான ஜப்பான் படம் சொதப்பலாக அமைந்தது.

இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து கார்த்தி 26 மற்றும் கார்த்தி 27 ஆகிய படங்களில் நலன் குமாரசாமி மற்றும் 96 பட இயக்குநர் பிரேம்குமார் ஆகியோருடன் இணைந்து நடித்து வருகிறார் கார்த்தி. இதில் கார்த்தி 27 படத்தினை அவரது அண்ணனும் பிரபல நடிகருமான சூர்யா, தன்னுடைய 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்திற்காக தயாரித்து வருகிறார். இந்தப் படத்தின் சூட்டிங் தற்போது நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது. படத்தில் சுவாதி கொண்டே, ஸ்ரீதிவ்யா, அரவிந்த்சாமி, ராஜ்கிரண் ஆகியோர் லீட் கேரக்டர்களில் நடித்து வருகின்றனர். படம் ஆகஸ்ட்,, செப்டம்பரில் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Actor Karthis portiions in Karthi 27 movie ends today in Vellore

நடிகர் கார்த்தி: நடிகர் கார்த்தியின் அடுத்தடுத்த படங்களின் வெற்றிகள் அவரது ரசிகர்களை வெகுவாக உற்சாகப்படுத்தி வருகின்றன. அவ்வப்போது சில சொதப்பல்கள் அமைந்தாலும் பெரும்பாலும் வெற்றிப்பட நாயகனாகவே கோலிவுட்டில் வலம்வந்துக் கொண்டிருக்கிறார் கார்த்தி. அந்த வகையில் கடந்த ஆண்டில் பொன்னியின் செல்வன் 2 படம் அவருக்கு சிறப்பாக அமைந்தது. ஆனால் ராஜூ முருகன் இயக்கத்தில் வெளியான ஜப்பான் படம் சொதப்பியது. முன்னதாக கார்த்தி நடிப்பில் விருமன், சர்தார் படங்கள் பெரிய அளவில் ஹிட் கொடுத்திருந்தன. இந்நிலையில் தற்போது ஜப்பான் படத்தின் தோல்வியை ஈடுகட்ட சிறப்பாக உழைத்து வருகிறார் கார்த்தி.

கார்த்தி 27 படம்: தற்போது நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி 26 மற்றும் பிரேம்குமார் இயக்கத்தில் கார்த்தி 27 ஆகிய படங்களில் நடித்து வருகிறார் கார்த்தி. இந்தப் படங்களை தொடர்ந்து சர்தார் 2 படத்திலும் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தின் பூஜை முன்னதாகவே போடப்பட்டு, தற்போது படத்தின் பிரீ புரொடக்ஷன்ஸ் வேலைகள் ஜரூராக நடந்து வருகிறது. இந்நிலையில் தற்போது 96 பட இயக்குநர் பிரேம்குமார் இயக்கத்தில் கார்த்தி நடித்துவரும் படத்தின் சூட்டிங்கில் அவரது காட்சிகள் இன்றைய தினம் நிறைவடையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. கும்பகோணம், காரைக்குடி போன்ற இடங்களில் நடந்த இந்தப் படத்தின் சூட்டிங் தற்போது வேலூரில் நடந்து வருகிறது.

இன்றுடன் கார்த்தி போர்ஷன்கள் நிறைவு: வேலூரில் நடந்துவரும் இந்த சூட்டிங்கில் அரவிந்த் சாமியும் தற்போது இணைந்து நடித்து வருகிறார். இன்றைய தினத்துடன் கார்த்தியின் போர்ஷன்கள் அனைத்தும் நிறைவடையவுள்ளதாகவும் ஆனாலும் படத்தின் சில பேட்ச் வேலைகள் இன்னும் இரு வாரங்களுக்கு நீடிக்கும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.கார்த்தி இல்லாமல் இந்த சூட்டிங் சென்னை மற்றும் கும்பகோணம் ஆகிய இடங்களில் நடக்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. தேவை ஏற்பட்டால் கார்த்தியும் இந்த சூட்டிங்கில் இணைவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படத்தை தொடர்ந்து சர்தார் படத்தின் சூட்டிங்கில் கார்த்தி இணையவுள்ளார்.

விரைவில் டைட்டில் அறிவிப்பு: இன்னும் டைட்டில் அறிவிக்கப்படாத இந்தப் படத்திற்கு மெய்யழகன் என்று டைட்டில் வைக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்தில் அரவிந்த் சாமி வில்லனாக நடித்து வருகிறார். தங்கை கேரக்டரில் நடிகை ஸ்ரீதிவ்யா நடித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்தில் சுவாதி கொண்டே நாயகியாக நடித்துவரும் நிலையில் பேமிலி சென்டிமெண்டை மையமாக கொண்டு இந்தப் படத்தின் கதைக்களம் அமைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனிடையே நலன் குமாரசாமியின் கார்த்தி26 படத்தையும் அடுத்ததாக கார்த்தி முடித்துக் கொடுக்கவுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X