Actor Karthi: சர்தார் 2 சூட்டிங் அப்டேட்.. இந்த முறை யுவனுடன் இணையும் கார்த்தி!
சென்னை: நடிகர் கார்த்தி நடிப்பில் கடந்த ஆண்டு தீபாவளி கொண்டாட்டமாக வெளியான சர்தார் படத்தை ரசிகர்கள் வெற்றிப்படமாக்கினார்கள்.
இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் உருவாகவுள்ளதாக முன்னதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது அந்தப் படத்தின் சூட்டிங் அப்டேட் வெளியாகியுள்ளது.

இந்தப் படத்தின் முதல் பாகத்திற்கு ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்திருந்த நிலையில் இரண்டாவது பாகத்தில் அவர் கமிட்டாகவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகர் கார்த்தி: நடிகர் கார்த்தி இரட்டை வேடங்களில் கலக்கிய சர்தார் படம் கடந்த ஆண்டு தீபாவளி கொண்டாட்டமாக வெளியானது. இயக்குநர் பிஎஸ் மித்ரன் டைரக்ஷனில் வெளியான இநத்ப் படம் மிகப்பெரிய பாராட்டுக்களையும் வசூலையும் குவித்து வெற்றிப்படமானது. இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார். பாடல்கள் மற்றும் பிஜிஎம்மும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான இந்தப் படத்தில் ராஷி கண்ணா, லைலா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்திருந்தனர்.
சர்தார் 2 குறித்து கார்த்தி பதிவு: ஸ்பை திரில்லர் ஜானரில் உருவாகியிருந்த இந்தப் படம் சர்வதேச அளவில் 85 கோடி ரூபாய்களை வசூலித்தது. கடந்த மாதத்தில் இந்தப் படம் வெளியாகி ஒரு ஆண்டு பூர்த்தி செய்ததை படக்குழுவினர் கொண்டாடி மகிழ்ந்தனர். இதையொட்டி தன்னுடைய எக்ஸ் தளத்தில் மகிழ்ச்சியை பகிர்ந்த நடிகர் கார்த்தி, படக்குழுவினருக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டதுடன் இரண்டாவது பாகத்தின் வேலைகள் விரைவில் துவங்கவுள்ளதாக தெரிவித்திருந்தார்.
சர்தார் 2 சூட்டிங் அப்டேட்: இந்நிலையில் இந்தப் படத்தின் சூட்டிங் குறித்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. சமீபத்தில் கார்த்தி -ராஜமுருகன் கூட்டணியில் வெளியான ஜப்பான் படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில் நலன் குமாரசாமி மற்றும் பிரேம்குமார் கூட்டணியில் அடுத்தடுத்து கார்த்தி இணையவுள்ளார். இந்தப் படங்களை நிறைவு செய்துவிட்டு சர்தார் 2 படத்தின் சூட்டிங்கில் கார்த்தி நடிக்கவுள்ளதாகவும் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் சூட்டிங் துவங்கவுள்ளதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
சர்தார் 2வில் இணையும் யுவன்: சர்தார் படத்தில் ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்த நிலையில் அடுத்த பாகத்தில் அவருக்கு பதிலாக யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே இந்தப் படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகளை பிஎஸ் மித்ரன் நிறைவு செய்துள்ளதாகவும் படத்தின் ஒளிப்பதிவாளராக ஜார்ஜ் சி வில்லியம்ஸ் கமிட்டாகியுள்ளதாகவும் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகியுள்ளன.
கைதி 2 எப்போது?: கார்த்தியின் கேரியரில் மிகப்பெரிய ஹிட்களை கொடுத்துள்ள கைதி, சர்தார் படங்களின் இரண்டாவது பாகங்கள் உருவாகவுள்ளது அவரது ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது. தற்போது தலைவர் 171 படத்தின் வேலைகளில் பிசியாகியுள்ள லோகேஷ் கனகராஜ் கைதி 2 படத்தை எப்போது துவங்குவார் என்பது குறித்து தகவல்கள் இல்லாத நிலையில், சர்தார் 2 படத்தின் அப்டேட் தற்போது தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











