கூவத்தூரில் நடிகைகளை கூட்டி வந்து.. ஒரு கோடி தர்றேன்.. முக்கிய பிரபலம் ஓபன் டாக்
சென்னை: காமெடி நடிகர், இசையமைப்பாளர், பாடகர், அரசியல்வாதி என பன்முகத்திறமை கொண்டவர் கருணாஸ். முழு நேர அரசியல்வாதியாக இருக்கும் இவர் சமீபத்தில் விஜய்யின் அரசியல் என்ட்ரி குறித்து கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார். இதைத்தொடர்ந்து நீண்டகாலமாக பேசி வரும் கூவத்தூர் விவகாரம் குறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில் கருணாஸ் மனம் திறந்து பேசியிருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதில், முன்னாள் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக சாடி பேசியிருக்கிறார்.
நந்தா படத்தில் லொடுக்கு பாண்டியாக வந்து கலகலப்பை ஏற்படுத்தியவர் கருணாஸ். இதைத்தொடர்ந்து அஜித், விஜய் படங்களில் காமெடி கதாப்பாத்திரங்களில் நடித்து தனக்கென்று தனித்த அடையாளத்தை பிடித்துள்ளார். இதைத்தொடர்ந்து திண்டுக்கல் சாரதி படத்தின் மூலம் ஹீரோவாக நடித்தார். இப்படம் அவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. இப்படத்திற்கு பல படங்களில் நடித்திருந்தார். பெயர் சொல்லும் அளவிற்கு வெற்றியை பெறவில்லை. பிறகு சினிமாவிற்கு பிரேக் விட்டு திடீரென அரசியலில் குதித்தார் கருணாஸ். இவர் முக்குலத்தோர் புலிப்படை என்ற அரசியல் கட்சியின் தலைவராகவும் உள்ளார். பின்னர், 2016ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் திருவாடனை தொகுதியில் எம்எல்ஏ ஆனார்.

கூவத்தூர் விவகாரம்: 2016ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்தார். அதன் பிறகு பல குளறுபடிகள் நடந்தன. அதிமுகவில் அடுத்த முதல்வர் யார் என்ற போட்டியும் நடைபெற்றது. இதில், கூவத்தூர் விவகாரம் பூதாகரமாக வெடித்தது. எம்எல்ஏக்களை கூவத்தூரில் அடைத்து வைத்திருந்ததாகவும் அதற்கு நடிகர் கருணாஸ் தான் ஆலோசனை கூறியதாகவும் கிசுகிசுக்கப்பட்டது. மேலும் கூடுதலாக நடிகைகள் மற்றும் பெண்களை கூவத்தூருக்கு அழைத்து வந்து கூத்து அடித்ததாகவும் கிசுகிசுக்கப்பட்டது. இதில் கருணாஸ் பெயர் தான் முதல் ஆளாக அடிபட்டது. கடந்தாண்டு அதிமுக நிர்வாகி ஒருவர் பேசியதை கேட்டு திரை பிரபலங்களும் கொந்தளித்தார்கள்.
கருணாஸ் விளக்கம்: இந்நிலையில் நடிகர் கருணாஸ் சமீபத்தில் அளித்த பேட்டியில், கூவத்தூர் விவகாரத்திற்கு பதிலடி கொடுத்திருக்கிறார். அதில், ஜெயலலிதாவின் இறப்பிற்கு பிறகு எடப்பாடி பழனிசாமி பதவி சுகத்திற்காக தமிழ்நாட்டு உரிமைகளை அடமானம் வைத்தார். கூவத்தூரை பற்றி எல்லோரும் பேசுகிறார்கள். அங்கு நான் மட்டுமா இருந்தேன். எடப்பாடி பழனிசாமி இருந்தார். அமைச்சரின் சகாக்கள் எத்தனை பேர் இருந்தார்கள், சசிகலை எத்தனை முறை வந்து பார்த்துவிட்டு சென்றார். டிடிவி தினகரன் வந்தாரு. போலீஸ் அதிகாரிகள் எதற்கு காவலில் இருந்தாங்க. 127 எம்எல்ஏக்கள் இருந்த இடத்தில் கருணாஸ் என்பவன் சினிமா நடிகன். எல்லோருக்கும் தெரிந்த முகம். மற்றாென்று சாதி கட்சி வச்சிருக்கிறான். என் மேல இருக்கும் சாதிய வன்மத்தில் பேசிக்கொண்டு இருப்பதை பார்க்கிறேன். நான் சாதி பார்த்து பழகவில்லை. என் வீட்டில் வேலை பார்ப்பவர்களை சாதி பார்த்து வைக்கவில்லை என கருணாஸ் ஆதங்கத்துடன் பேசினார்.
ரூ.1 கோடி தர்றேன்: நான் யார் என்று எனக்கு தெரியும். என் மீது இருக்கும் வன்மத்தால் கூவத்தூருக்கு நடிகையை கூட்டிட்டு போனாங்க. ரெக்கார்டு டான்ஸ் ஆடுனாங்க சொல்றாங்க. பெரிய பெரிய அதிகாரிகளை மீறி எப்படி கூட்டிட்டு போக முடியும். சரி நடந்ததாகவே இருக்கட்டும். நீங்க சொல்றமாதிரி ஒரு ரெக்கார்டை காட்டுங்க. ரூ.1 கோடி தர்றேன். அந்த மாதிரி ஒரு வீடியோவை வெளியிடுங்க. நான் செய்தது தவறு என ஒப்புக்கொள்கிறேன். கூவத்தூரில் இருந்த எடப்பாடியாக இருக்கட்டும். எம்எல்ஏ, அமைச்சர்கள், இப்போது பதவி இழந்த பிரபலங்களாக இருக்கட்டும் காட்டுங்க. என்னை மட்டும் மாட்டுவிடுவதில் என்ன நியாயம். உண்மையில் சூடு சொரணை இருப்பவர்களாக இருந்தால் கேட்க வேண்டுமா இல்லையா என கடுமையாக கருணாஸ் பேசியுள்ளார்.

மானம் கெட்டு போகவில்லை: ஜெயலலிதா இறந்த பிறகு அந்த கட்சியில் இருந்து விலக சொல்லி பாஜக அழைத்தது. எடப்பாடியே என்னிடம் பேரம் பேசினார். எதற்கும் என் பதவியை விட்டு விலகவில்லை. பல கோடிகள் கொடுப்பதாகக் கூட பாஜக சொன்னது. அப்படி ஒன்றும் மானம் கெட்டு எங்கேயும் போகலை. கூவத்தூரில் என்னை மட்டும் கார்னர் செய்வதை ஏற்க முடியாது. 2ஆம் நம்பர் வேலை செய்றவன், 2 நம்பர் வேலை செய்வதைத்தான் மக்களுக்கு பிடிக்கும் அதைத்தான் ரசிப்பார்கள். அப்படித்தான் கூவத்தூர் விஷயமும் என கருணாஸ் சொல்லி முடித்தார்.


Click it and Unblock the Notifications











