தலையில் தொப்பியுடன் வெளிநாட்டில் செம கூலாக போஸ் கொடுத்த கதிர்
சென்னை: பரியேறும் பெருமாள் படத்தில் நடித்து மிகச் சிறந்த நடிகராக பல விருதுகளை தட்டிச் சென்றார் நடிகர் கதிர்.
மலையாளத்தில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற இஷ்க் திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் தற்போது நடித்து வருகிறார்
தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் கதிர் இப்போது தலையில் தொப்பியுடன் கூலிங்கிளாஸ் அணிந்தவாறு செம ஸ்டைலிஷாக வெளிநாட்டில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தற்போது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்

அனைவரது கவனத்தையும் பெற்றது
இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி பிரகாஷ் குமார் தயாரிப்பில் வெளியான மதயானைக்கூட்டம் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகர் கதிர் அடுத்தடுத்து நடிக்கும் திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கதிர் நடிப்பில் வெளியான பரியேறும் பெருமாள் இந்திய அளவில் அனைவரது கவனத்தையும் பெற்றது

சாதி ரீதியிலான ஏற்றத்தாழ்வுகளை
மேலும் பரியேறும் பெருமாள் சர்வதேச அளவில் பல விருதுகளையும் குவித்து வருகிறது. சமுதாயத்தில் இன்றளவும் இருக்கக்கூடிய சாதி ரீதியிலான ஏற்றத்தாழ்வுகளை வன்முறை இல்லாமல் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கூறிய பரியேறும் பெருமாள் கதிர் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது

தமிழில் ரீமேக்
தெறி, மெர்சல் ஆகிய படங்களை தொடர்ந்து விஜய்,அட்லி கூட்டணியில் வெளியான பிகில் படத்தில் இரண்டாவது கதாநாயகனாக நடித்து பாராட்டுகளை பெற்றவர் கதிர். கமர்சியல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வரவேற்பை பெறும் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் கதிர்கள் இப்போது மலையாளத்தில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற இஷ்க் திரைப்படத்தை தமிழில் ரீமேக் செய்து நடித்து வருகிறார். த்ரில்லர் கதை களத்தில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்ப கட்டத்தில் உள்ளது.

இரு மொழிகளிலும்
அறிமுக இயக்குனர் ஜாக் ஹரிஷ் இயக்கத்தில் திரில்லர் கதை களத்தில் தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளிலும் புதிய திரைப்படம் ஒன்று தயாராகி வருகிறது. தமிழில் இந்த படத்திற்கு யூகி எனவும் மலையாளத்தில் அத்ரிஷ்யம் எனவும் டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. தமிழில் கதிர், நரேன் மற்றும் நட்ராஜ் ஆகிய மூவரும் நடிக்கின்றனர் மேலும் கதாநாயகிகளாக கயல் ஆனந்தி, குக் வித் கோமாளி பவித்ரா, பிகில் ரெபா ஆகியோர் நடிக்கின்றனர்.

தலையில் தொப்பியுடன் ஸ்டைலிஷாக
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி இணையதளத்தை மிரட்டியது. இவ்வாறு தொடர்ந்து நல்ல நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் கதிர் தமிழ் சினிமாவில் நம்பிக்கை நட்சத்திரமாக உள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் வெளிநாடு சென்ற இடத்தில் தலையில் தொப்பியுடன் கூலிங் கிளாஸ் போட்டுக்கொண்டு செம ஸ்டைலிஷாக போஸ் கொடுத்து புகைப்படங்களை இப்பொழுது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்


Click it and Unblock the Notifications











