மண்வெட்டியுடன் ஸ்டைலாக ஒர்க் அவுட்… பிகில் நடிகரின் ட்விட்டர் போஸ்ட் !

சென்னை : நடிகர் கதிர் கையில் மண்வெட்டியுடன் ஸ்டைலான ஒரு புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

பெரும்பாலான நடிகர்கள் வீட்டிலே தனது நேரத்தை கழிக்கின்றனர். இன்னும் சிலர் என்ன செய்வது என தெரியாமல் முழித்துக்கொண்டிருக்கின்றனர்.

நடிகர்கள் நடிப்பதற்கு நல்ல நடிப்பாற்றல் மட்டும் இருந்தால் பத்தாது, அதற்க்கு நல்ல ஆரோக்கியமான உடலமைப்பும் தேவை அதற்காக அவர்கள் தினமும் உடற்பயிற்சியையும் மேற்கொள்கின்றனர்.

நடிகர் கதிர் அவர்களும் ஒரு பிட்னெஸ் ஃப்ரீக் தான் தினமும் தவறாமல் உடற்பயிற்சியை மேற்கொள்வது அவரது வழக்கம் . ஆனால் இந்த லாக்டவுனில் இப்போது அனைத்து உடற்பயிற்சி கூடங்களும் தற்காலிகமாக மூடியிருக்கும் வேளையில் என்ன செய்வது என தெரியாமல் இருந்தார்.

 என் ஒர்க் அவுட் இது தான்

என் ஒர்க் அவுட் இது தான்

விவசாயிகளின் வாழ்க்கை முறை இப்போது நகர வாசிகளுக்கும் வாழ்க்கை முறையாக மாறிவிட்டது என கையில் மண்வெட்டியுடன் தலையில் ஸ்டைலான முண்டாசு கட்டியபடி உடற்பயிற்சி செய்யும் கெட்டப்பில் ஒரு போட்டோவை பகிர்ந்து தனது குவாரன்டைன் ஒர்க் அவுட் இது தான் "என்ன சொல்றது போங்க" என்று பகிர்ந்துள்ளார். அதற்கு அவரது ரசிகர்கள் விவசாயி மகன் எனவும், மற்றொருவர் கையுறையுடன் விவசாயி மண்வெட்டி பிடிக்கிறத இப்போதான் பார்க்கிறேன் என கிண்டலாகவும் பேசி வருகின்றனர் சில நெட்டிசன்கள்.

 கதிர் தீவிர விஜய் ரசிகர்

கதிர் தீவிர விஜய் ரசிகர்

நடிகர் கதிர் ஒரு தீவிரமான விஜய் ரசிகர் மற்றும் ஒரு நல்ல திறமையான நடிகரும் கூட அதை அவர் தனது முதல் படத்திலேயே நிரூபித்திருப்பார் இதுவரை எந்த ஒரு கிசு கிசிலும் சிக்காமல் தான் உண்டு தனது வேலையுண்டு என்று நடிப்பதை மட்டுமே தனது முழு கவனமாக கொண்டுள்ளார். இந்நிலையில் இவர் விஜயின் பிகில் படத்தில் நடிக்க வந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டார்.

 தேங்க்ஸ் அட்லீ

தேங்க்ஸ் அட்லீ

விஜயுடன் ஒரு காட்சியாவது நடித்துவிட வேண்டும் என ஏங்கி கொண்டிருந்த கதிருக்கு அட்லீ கொடுத்த வாய்ப்பு சொல்லில் அடங்காதது. மேலும் பிகில் படம் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்தது. இதில் கதிர் ஒரு கால் பந்து விளையாட்டு வீரராக சிறப்பாக நடித்திருந்தது அவருக்கு நல்ல பெயர் வாங்கிக்கொடுத்தது. அதுவரை சிறிய படங்களில் மட்டுமே நடித்து வந்த கதிர் பிகில் படத்தில் வாய்ப்பளித்தற்காக அந்த படத்தின் இயக்குனர் அட்லீக்கு தனது நன்றியையும் தெரிவித்திருந்தார்.

 சர்பத் டிசம்பரில் வெளியாகும்

சர்பத் டிசம்பரில் வெளியாகும்

சமீபத்தில் நடித்த பிகில், சத்ரு, ஜடா போன்ற படங்களை தொடர்ந்து அவர் நடித்து கொண்டிருக்கும் படம் சர்பத். இந்த படத்தின் டீஸர் சில மாதங்களுக்கு முன் வெளியானது. அதில் இவர் நடிகர் சூரியுடன் அடிக்கும் லூட்டி ரசிக்கும்படி இருந்தது. இயக்குனர் பிரபாகரன் இயக்கியுள்ள இந்தப்படம் வரும் டிசம்பரில் வெளியிட முடிவு செய்துள்ளனர்.

 நல்ல கருத்துக்கள்

நல்ல கருத்துக்கள்

கதிர் வித்யாசமான படங்களை தேர்ந்து எடுத்து நடித்து கொண்டு இருக்கிறார். நல்ல சமூக கருத்துக்களை அவ்வபோது பதிவிட்டு நாட்டம் காட்டி வருகிறார். சினிமா என்ற தொழில் சார்ந்து மட்டும் இல்லாமல் மற்ற பொதுவான விஷயங்களில் ஈடுபடுவது கதிருக்கு பிடிக்கும். இந்த லாக் டவுன் முடிந்தவுடன் நிறைய நடிக்க வேண்டும் என்பது அவருடைய ரசிகர்களின் ஆசையாக உள்ளது. கதிர் ஒரு திறமையான நடிகர் அவருக்கு நிறைய பட வாய்ப்புகள் வர வேண்டும் அனைத்தும் அவர் தனதுதிறமையை நிரூபித்து மெம்மேலும் வளர வேண்டும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X