கருப்பு வெள்ளையில் கலக்கல் போட்டோஷுட்... வித்தியாசமான கெட்டப்பில் பிகில் நடிகர்

சென்னை : நடிகர் கதிர் மதயானைக்கூட்டம் படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமாகி தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

இவரது பரியேறும் பெருமாள், பிகில் படங்கள் ரசிகர்களிடையே இவருக்கு சிறப்பான வரவேற்பை பெற்றுத் தந்தன.

தற்போது புதிய போட்டோஷுட்டை நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் கதிர்.

நடிகர் கதிர்

நடிகர் கதிர்

நடிகர் கதிர் மதயானைக்கூட்டம் படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமாகி, பரியேறும் பெருமாள், பிகில் உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் தோன்றி ரசிகர்களை கவர்ந்தார். கிருமி, சத்ரூ உள்ளிட்ட படங்களிலும் கவனத்தை கவர்ந்த இவர், தற்போது தேர்ந்தெடுத்த கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

யூகி படத்தில் கதிர்

யூகி படத்தில் கதிர்

தொடர்ந்து சமூக வலைதளங்களிலும் பிசியாக செயல்பட்டுவரும் கதிர், அடுத்தடுத்த பிராஜக்ட்களில் பிசியாக நடித்து வருகிறார். தற்போது யூகி என்ற படத்தில் லீட் ரோலில் நடித்து வருகிறார். இவருடன் நடராஜன், நரேன், ஆனந்தி, பவித்ரா லஷ்மி உள்ளிட்டவர்களும் நடித்து வருகின்றனர்.

புதிய போட்டோஷுட்

புதிய போட்டோஷுட்

சமீபத்தில் இதன் மோஷன் போஸ்டர் வெளியாகி கவனத்தை கவர்ந்தது. இந்நிலையில் தற்போது தனது புதிய போட்டோஷுட்டை எடுத்துள்ளார் கதிர். கருப்பு வெள்ளையில் வெளியாகியுள்ள இதன் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்துள்ளன.

டெரர் லுக்கில் கதிர்

டெரர் லுக்கில் கதிர்

இந்தப் புகைப்படங்களில் டெரராக காட்சியளிக்கிறார் கதிர். தலையில் அதிகமான முடியுடன், தாடி மீசையுடன் வித்தியாசமான போஸ்களை தந்துள்ளார். தற்போது ட்ரெண்டாக உள்ள லுக்கை இந்த போட்டோஷுட்டில் வெளிப்படுத்தியுள்ளார். புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு லுக்கை வெளிப்படுத்தியுள்ளன.

ஏற்றத்தை கொடுத்த பிகில் படம்

ஏற்றத்தை கொடுத்த பிகில் படம்

பரியேறும் பெருமாள் படத்தின்மூலம் வித்தியாசமான கேரக்டரை ஏற்று நடித்து அதிர்வலைகளை ஏற்படுத்திய கதிர், அடுத்ததாக பிகில் படத்தில் விஜய்யின் நண்பராக சிறப்பான கேரக்டரை செய்து ரசிகர்களுக்கும் நண்பரானார். இந்த கேரக்டர் அவரது கேரியரில் முக்கியமாக அமைந்துள்ளது.

தேர்ந்தெடுத்த கேரக்டர்கள்

தேர்ந்தெடுத்த கேரக்டர்கள்

இந்நிலையில் தன்னுடைய சிறப்பான ரோல்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அவ்வப்போது போட்டோஷுட்களை நடத்தி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். மேலும் தன்னுடைய படங்கள் குறித்த அப்டேட்டுகளையும் ட்விட்டர் பக்கங்களில் வெளியிடுகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X