Kavin: திரையரங்கில் படம் பார்க்க வந்த ஸ்டார் ஹீரோ.. ரசிகர்கள் அன்பால் கண்கலங்கிய கவின்!
சென்னை: நடிகர் கவின் நடிப்பில் இன்றைய தினம் வெளியாகி உள்ளது ஸ்டார் படம். இந்தப் படத்தில் கவினுடன் அதிதி போஹங்கர்,பிரீத்தி முகுந்தன், லால் உள்ளிட்ட நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்தப் படத்தை இயக்கியுள்ளார் இளன். யுவன் சங்கர் ராஜா இசை படத்திற்கு மிகப்பெரிய பலத்தை கொடுத்துள்ளது.
முன்னதாக வெளியான ஸ்டார் படத்தின் டிரைலர் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பை கொடுத்த நிலையில் இந்த படத்திற்கு படக் குழுவினர் கொடுத்த பிரமோஷன்களும் மிகப்பெரிய ஹைப்பை கொடுத்து இருந்தன. இதையடுத்து ஆன்லைன் புக்கிங்கில் படம் மாஸ் காட்டியது. வழக்கமான கதைக்களத்தையே கையில் எடுத்துள்ள இளன், தன்னுடைய திரைக்கதையால் படத்திற்கு சிறப்பை சேர்த்துள்ளார்.

ஸ்டார் படம்: நடிகர் கவினின் டாடா படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்ற சூழலில் தற்போது அவரது நடிப்பில் வெளியாகியுள்ளது இளன் இயக்கத்தில் உருவாகியுள்ளது ஸ்டார். படத்திற்கு இசையமைத்து உள்ளார் யுவன் சங்கர் ராஜா. இன்றைய தினம் இந்த படம் சர்வதேச அளவில் ரிலீசாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்து பாசிட்டிவ் கமெண்ட்ஸ்களை பெற்று வருகிறது. ஸ்டார் படத்தில் கவின். லால் ப்ரீத்தி முகுந்தன், அதிதி போஹங்கர் ஆகியோர் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். படத்தின் இசை, ட்ரெய்லர் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக வெளியாகி ரசிகர்களை சிறப்பாக கவர்ந்து படத்திற்கான எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.
திரையரங்கில் படம்பார்த்த கவின்: இந்நிலையில் இந்த படம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகிறது. படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்து வரும் சூழலில் சென்னை வெற்றி திரையரங்கில் படக்குழுவினருடன் இணைந்து ரசிகர்களுடன் சேர்ந்து நடிகர் கவின் ஸ்டார் படத்தை பார்த்துள்ளார. டாடா மற்றும் லிப்ட் என அடுத்தடுத்த படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்துள்ளார் கவின். தன்னுடைய இயல்பான நடிப்பால் அவர் ரசிகர்களை கட்டிப்போட்டுள்ள சூழலில் இன்றைய தினம் வெற்றி திரையரங்கில் அவர் ரசிகர்களுடன் இணைந்து படம் பார்த்துள்ளார். இதையடுத்து மிகப்பெரிய வரவேற்பை கவினுக்கு ரசிகர்கள் கொடுத்துள்ளனர்.
கண்கலங்கிய கவின்: அவர் மாடியில் இருந்து இறங்கி வருவதற்குள் அவரை ரசிகர்கள் உற்சாகத்துடன் நெருக்கி அடித்ததை பார்க்க முடிந்தது. மகிழ்ச்சி அதிகமாக இருந்தாலும் இப்படி நெருக்கி அடித்ததால் கவின் முழி பிதுங்கியதையும் பார்க்க முடிந்தது. இதனால் பல ஆண்டுகளாக ஹீரோ கனவுடன் வலம்வந்த கவின், ஒரு கட்டத்தில் உடைந்து கண்கலங்கியதையும் பார்க்க முடிந்தது. இதே கதைக்களத்தையே இயக்குநர் இளன், ஸ்டார் படத்திலும் காட்டியுள்ளார். படத்தில் ஹீரோவாக முயற்சி செய்யும் கவின், தடைகளை கடந்து ஹீரோவானாரா இல்லையா என்பதுதான் ஸ்டார் படத்தின் ஒன்லைன்.
சிறப்பான கவின் நடிப்பு: அஜித்தின் முகவரி உள்ளிட்ட பல படங்கள் இதே டைப்பில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த சூழலில் திரைக்கதையால் படத்தை சிறப்பாக்கியுள்ளார் இயக்குநர். மேலும் ரசிகர்களை கவறும் வகையில் காமெடி, ஆக்சன், எமோஷனல் என கலந்து கட்டி கொடுத்துள்ளார். முன்னதாக இளன் இயக்கத்தில் வெளியான பியார் பிரேமா காதல் மிகப்பெரிய அளவில் ஹிட்டடித்தது. இந்நிலையில் ஸ்டார் படமும் ரசிகர்களை கவர்ந்துள்ளது. ஏற்கனவே பல படங்களில் பார்த்த கதையாக இருந்தாலும் கவினும் ஸ்டார் படத்தை தன்னுடைய நடிப்பால் சிறப்பாக்கியுள்ளதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.


Click it and Unblock the Notifications











