Actor Kavin: வரிசை கட்டும் கவினின் அடுத்தடுத்த படங்கள்.. கோலிவுட்டின் அடுத்த நம்பிக்கை நட்சத்திரம்!

சென்னை: நடிகர் கவினின் டாடா படத்தை தொடர்ந்து கோலிவுட்டில் அவரது மார்க்கெட் அதிகரித்து காணப்படுகிறது.

முன்னதாக கவினின் நடிப்பில் வெளியான லிஃப்ட் படமும் அவருக்கு சிறப்பாக கைக்கொடுத்த நிலையில் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார்.

Actor Kavins lineups makes everyone impressive

அடுத்ததாக கவின் 04 படத்தில் நடித்து வரும் கவின் நடிப்பில் கவின் 5 படத்திற்கு ஸ்டார் என்று பெயரிடப்பட்டுள்ளது.

நடிகர் கவின்: நடிகர் கவின் நடிப்பில் வெளியான லிஃப்ட் படம் மிகப்பெரிய விமர்சனங்களை பெற்று அவருக்கு சரியான அங்கீகாரத்தை கொடுத்தது. பிக்பாஸ் நிகழ்ச்சிமூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ள கவினுக்கு சமீபத்தில் வெளியான டாடா படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. சந்தர்ப்பத்தால் தன்னுடைய காதல் மனைவியை பிரியும் நாயகன், தன்னுடைய குழந்தையை வளர்ப்பதற்காக படும் பாட்டினை இந்தப் படம் காட்சிப் படுத்தியிருந்தது.

டாடா படம்: படத்தில் கவினின் இயல்பான நடிப்பு மிகப்பெரிய பலத்தை கொடுத்து படத்தின் வெற்றியை உறுதி செய்தது. தொடர்ந்து இந்தப் படத்தின் வெற்றி அடுத்தடுத்த படங்களின் வாய்ப்புகளை கவினுக்கு பரிசளித்து வருகிறது. சைலண்டாக அந்தப் படங்களை சரியான புரிதலுடன் நடித்து வருகிறார் கவின். கோலிவுட்டின் அடுத்த பிராமிசிங் நடிகர் என்ற பெயரை பெற்றுள்ள கவின் நடிப்பில் அடுத்ததாக கவின் 4 படம் உருவாகி வருகிறது

கவின் அடுத்தடுத்த படங்கள்: கவின் 4 படத்தை சதீஷ் இயக்கிவரும் சூழலில் படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். ரொமான்டிக் மியூசிகல் ஜானரில் உருவாகிவரும் இந்தப் படத்தினை ரோமியோ பிக்சர்ஸ் சார்பில் ராகுல் தயாரித்து வருகிறார். இந்தப் படத்தை தொடர்ந்து கவினின் 5வது படத்திற்கு ஸ்டார் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தை எலன் இயக்கிவரும் சூழலில் படத்திற்கு யுவன் இசையமைத்து வருகிறார். முன்னதாக யுவனின் வெறித்தனமாக ஃபேன் என்று ஒரு பேட்டியில் கவின் கூறிய நிலையில் இந்தப் படத்தின்மூலம் அவருடன் இணைந்துள்ளார் கவின்.

நெல்சன் தயாரிப்பில் கவின்: அடுத்ததாக தன்னுடைய 6வது படத்திலும் தற்போது கமிட்டாகியுள்ளார்.இந்தப் படத்தை நெல்சன் தயாரிக்கவுள்ள நிலையில் அனிருத் இசையில் நெல்சனின் உதவி இயக்குநர் சிவபாலன் இந்தப் படத்தை இயக்கவுள்ளார். படத்தில் கவினுக்கு பிரியங்கா மோகன் ஜோடியாகியுள்ள நிலையில் லீட் கேரக்டரில் எஸ்ஜே சூர்யா நடிக்க கமிட்டாகியுள்ளார். பிரம்மாண்ட கூட்டணியில் உருவாகவுள்ள இந்தப் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் கவின்?: அடுத்ததாக விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்திலும் கவின் கமிட்டாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்திலும் அடுத்தப் படத்தில் கவின் இணையவுள்ளதாகவும் இதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படம் குறித்தும் விரைவில் அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X