Actor Kavin: ஒருநாள் நான் வாழ்வேன்.. கவினின் ஸ்டார் படத்தின் மேக்கிங்!
சென்னை: நடிகர் கவின் கோலிவுட்டில் அடுத்தடுத்த வெற்றிகளை கொடுத்து கவனிக்கப்படும் நடிகராக மாறியுள்ளார். இவரது நடிப்பில் முன்னதாக வெளியான லிப்ட், டாடா படங்கள் இவரது அந்தஸ்தை உயர்த்தியுள்ளன. தற்போது அடுத்தடுத்து 3 படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். அதில் முன்னதாக ஸ்டார் படம் ரிலீசுக்கு சிறப்பான வகையில் தயாராகி வருகிறது. இந்தப் படம் பியார் பிரேமா காதல் படத்தை இயக்கிய இளன் இயக்கத்தில் உருவாகியுள்ளது. பியார் பிரேமா காதல் படத்தில் சூப்பர்ஹிட் பாடல்களை ரசிகர்களுக்கு பரிசளித்த யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்திற்கும் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் இந்தப் படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்தப் படத்தை இயக்கியுள்ள இயக்குநர் இளன் படத்தின் பாடல்களையும் எழுதியுள்ள நிலையில், இந்த வீடியோவின் பின்னணியாக பாடல் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை ஈர்த்துள்ளது. ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மெண்ட் மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தின் இந்த மேக்கிங் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள நடிகர் கவின், ஒருநாள் நான் வாழ்வேன் என்று கேப்ஷனில் குறிப்பிட்டுள்ளதும் ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளது.

நடிகர் கவின்: நடிகர் கவினின் லிப்ட் மற்றும் டாடா படங்கள் அவருக்கு மிகப்பெரிய அளவில் ரீச்சை கொடுத்துள்ளன. இந்தப் படங்களை தொடர்ந்து அடுத்தடுத்து சிறப்பான இயக்குநர்களின் இயக்கத்தில் இணைந்து அவர் நடித்து வருகிறார். இந்தப் படங்கள் ஒவ்வொன்றாக ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. அந்த வரிசையில் முதலில் அவரது ஸ்டார் படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. பியார் பிரேமா காதல் என்ற வெற்றிப் படத்தை யுவன் சங்கர் ராஜாவுடன் கூட்டணி அமைத்து இளன் இயக்கியிருந்தார். இளம் ரசிகர்களின் அதிகப்படியான வரவேற்பை பெற்று இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தற்போது இளன் இயக்கத்தில் ஸ்டார் படம் உருவாகியுள்ளது.
ஸ்டார் படம்: ஸ்டார் படத்தின் சூட்டிங் நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. விரைவில் படம் ரிலீசாகவுள்ள நிலையில் படத்தின் மேக்கிங் வீடியோவை தற்போது படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோவில் மிகவும் ஸ்டைலிஷ்ஷாக காணப்படுகிறார் கவின். மேலும் ஹீரோயின், நடன இயக்குநர், இயக்குநர், கேமராமேன் என அனைத்து தரப்பினருடனும் எப்படியெல்லாம் ஒருங்கிணைந்து அவர் செயல்படுகிறார் என்பதையும் இந்த வீடியோவில் பார்க்க முடிகிறது. இயல்பான அவரது நடிப்பை இந்தப் படத்திலும் எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
மேக்கிங் வீடியோ: கடந்த ஆண்டில் துவங்கிய இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவடைந்துள்ள நிலையில், யுவன் சங்கர் ராஜாவின் பிறந்தநாளையொட்டி முன்னதாக படத்தின் பிரமோவை படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர். தொடர்ந்து படத்தின் கேரக்டர்கள் அறிமுகம் மற்றும் பாடலும் வெளியிடப்பட்டது. இந்தப் பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில் இந்தப் படத்தின் மேக்கிங் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இதன் கிளிம்ப்ஸ் வீடியோ நேற்றைய தினம் வெளியாகியிருந்தது. இந்தப் படத்தில் லால், அதிதி போஹாங்கர், பிரீத்தி முகுந்தன், கீதா கைலாசம் ஆகியோர் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர்.
https://twitter.com/Kavin_m_0431/status/1758469604521681376
மனதை ஈர்த்த பாடல்: இந்த மேக்கிங்குடன் இணைந்து பாடலும் தற்போது வெளியாகியுள்ளது. படத்தின் இயக்குநர் இளன் இந்தப் பாடலை எழுதியுள்ள நிலையில் யுவன் சங்கர் ராஜா பாடலுக்கு தன்னுடைய குரலால் உயிர் கொடுத்துள்ளார். ஸ்டார் படத்தை தொடர்ந்து அடுத்ததாக ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில் நடன இயக்குநர் சதீஷ் இயக்கத்தில் அடுத்தப்படத்தில் நடித்து வருகிறார் கவின். தொடர்ந்து நெல்சன் திலீப்குமார் தயாரிப்பிலும் நடிக்க கமிட்டாகியுள்ளார். இந்தப் படங்களை தொடர்ந்து இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ்ரூட் தயாரிப்பு நிறுவனம் சார்பிலும் அடுத்தப்படத்தில் நடிக்கவுள்ளார் கவின். அறிமுக இயக்குநர் இயக்கவுள்ள இந்தப்படமும் ரசிகர்களிடையே அதிகமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











