ரூ. 1500க்காக குரூப் டான்ஸராக இருந்த பிரபல நடிகர்.. போட்டோக்களை ஷேர் செய்து பிளாஷ்பேக்!
சென்னை: பிரபல நடிகர் ஒருவர் தான் குரூப் டான்ஸராக இருந்த போட்டோக்களை வெளியிட்டு தனது பிளாஷ் பேக்கை சொல்லியுள்ளார்.
நடிகர் கிருஷ்ணா அஞ்சலி படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டாக பல படங்களில் நடித்துள்ளார் கிருஷ்ணா.
நடிகர் கிருஷ்ணா இயக்குநர் விஷ்ணுவர்தனின் சகோதரர் ஆவார். கற்றது களவு, கழுகு, யாமிருக்க பயமேன், வானவராயன் வல்லவராயன் உள்ளட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

பிக்காசோ படம்
அவரது நடப்பாண்டில் கடைசியாக கடந்த ஆண்டு கழுகு 2 என்ற படம் வெளியானது. அதனை தொடர்ந்து கிரகணம், திருக்குறள், பிக்காசோ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் திருக்குறள் படத்தின் போஸ்ட் புரடெக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

டீன் ஏஜ் பையனாக
இந்நிலையில் நடிகர் கிருஷ்ணா தான் குரூப் டான்ஸராக இருந்த போட்டோவை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். அதில் டீன் ஏஜ் பையனாக க்யூட்டாக உள்ளார் கிருஷ்ணா. ஆண்கள் பெண்கள் என ஆடும் மேடை நிகழ்ச்சியில் பங்கேற்று நடனமாடுகிறார்.

1500 ரூபாய் வாங்கினேன்
இந்த போட்டோவை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ள கிருஷ்ணா, குரூப் டான்ஸராக இருந்து பணம் சம்பாதித்தேன் என்னை கண்டு பிடியுங்கள் என தெரிவித்துள்ளார். மேலும், இந்த நிகழ்ச்சிக்காக நான் 1500 ரூபாய் பணம் பெற்றது நினைவில் உள்ளது.

அழகா இருக்கீங்க
நான் பல நடிகர்களுக்கு நடனத்தின் போது குரூப் டான்ஸராக இருந்தேன், இரவு நிகழ்ச்சிகளிலும்தான்.. விரைவில் அந்த போட்டோக்களை ஷேர் செய்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் ரொம்ப அழகா இருக்கீங்க சூப்பர் என தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











