போதைப்பொருள் வழக்கு.. ஜாமீனில் வெளிவந்த பிறகு கிருஷ்ணா வெளியிட்ட முதல் ட்வீட்.. என்னன்னு பாருங்க!

சென்னை: மணிரத்னம் இயக்கத்தில் குழந்தை நட்சத்திரமாக அஞ்சலி படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமான கிருஷ்ணா, 2008ம் ஆண்டு வெளியான அலிபாபா படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். 2012ம் ஆண்டு வெளியான கழுகு திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை தேடித்தந்தது. சமீபத்தில், போதைப் பொருள் பயன்படுத்திய வழ்க்கில் நடிகர் ஸ்ரீகாந்தை தொடர்ந்து நடிகர் கிருஷ்ணாவும் கைது செய்யப்பட்டார்.

நடிகர் கிருஷ்ணா தனக்கு உடல்நல பாதிப்பு இருப்பதாகவும், சில மாத்திரைகளை உட்கொண்டு வருகிறேன், போதைப் பொருள் எல்லாம் எடுத்துக் கொள்ளும் அளவுக்கு என்னுடைய உடலில் சக்தி இல்லை என சொன்ன பிறகும் வாட்ஸ் அப் சாட் மூலமாக அவர் சிக்கிய நிலையில், போலீசார் கைது செய்தனர்.

Actor Krishna congratulated GV Prakash Kumar s Rebel movie director after arrest in drug case

அதன் பின்னர், ஜாமீன் பெற்று வெளியே வந்த நடிகர் கிருஷ்ணா தற்போது முதன்முறையாக ட்விட்டரில் ஒரு வாழ்த்து ட்வீட் போட்டுள்ளது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

ரிபெல் படத்துக்கு அங்கீகாரம்: கடந்த 2024ம் ஆண்டு ஜி.வி. பிரகாஷ், மமிதா பைஜு நடிப்பில் வெளியான ரிபெல் திரைப்படம் தியேட்டரில் பெரிதாக ஓடவில்லை என்றாலும், அந்த படத்தின் கதை பெரும் விவாதத்தை கிளப்பியது. மூணாறில் இருந்து கேரளாவுக்குச் சென்று கல்லூரியில் படிக்கும் மாணவர்களை கேரள மாணவர்கள் மற்றும் சில அரசியல் தலைவர்கள் ஒடுக்க நினைப்பதும், அதனை எதிர்த்து தமிழ் மாணவர்கள் நடத்திய போராட்டத்தை மையப்படுத்தி இந்த படத்தை இயக்குநர் நிகேஷ் இயக்கியிருந்தார். இந்நிலையில், அந்த படத்துக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது.

கிருஷ்ணா போட்ட பாராட்டு ட்வீட்: சிறந்த அறிமுக இயக்குநர் பிரிவில் சைமா 2025 விருது விழாவில் போட்டியிட நிகேஷ் தேர்வு செய்யப்பட்ட சந்தோஷமான செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் கிருஷ்ணா ஷேர் செய்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இது வெறும் ஆரம்பம் தான், நீ போக வேண்டிய தூரம் இன்னமும் நிறைய உள்ளது, வாழ்த்துகள் டா என பாராட்டியுள்ளார்.

போதைப்பொருள் வழக்கில் கைது: கடந்த ஆண்டு வெளியான ஜோஷ்வா மற்றும் தி பாய்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகர் கிருஷ்ணாவுக்கும் போதைப் பொருள் விவகாரத்தில் தொடர்பு இருப்பதாக கைது செய்யப்பட்ட நடிகர் ஸ்ரீகாந்த் அளித்த தகவலின் அடிப்படையில் கிருஷ்ணாவை போலீசார் தேடி அவரது வீட்டுக்குச் சென்றனர். ஆனால், அங்கே அவர் இல்லை. அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்ட நிலையில், தனது வழக்கறிஞருடன் கிருஷ்ணா காவல் நிலையத்தில் ஆஜரானார். ரத்த பரிசோதனை மற்றும் வீட்டை சோதனையிட்ட போது கூட கிருஷ்ணா சிக்கவில்லை. ஆனால், வாட்ஸப்பில் டெலிட் செய்யப்பட்ட தகவல்களை சைபர் கிரைம் தோண்டி எடுத்துப் பார்த்ததில், அவருக்கும் போதைப் பொருள் கும்பலுக்கும் தொடர்பு இருப்பது உறுதியான நிலையில், கிருஷ்ணாவை போலீசார் கைது செய்தனர். ஜாமீனில் வெளிவந்த பின்னர், சோஷியல் மீடியா பக்கம் கூட வராத நடிகர் கிருஷ்ணா தற்போது ரிபெல் பட இயக்குநருக்கு வாழ்த்து சொல்லியிருக்கிறார்.

ஸ்ரீகாந்த் படம் வருது: ஜி.வி. பிரகாஷ் உடன் இணைந்து ஸ்ரீகாந்த் நடித்துள்ள பிளாக்மெயில் திரைப்படமும் விரைவில் திரைக்கு வருகிறது. சமீபத்தில், நடைபெற்ற விழாவில் நடிகர் ஸ்ரீகாந்த் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், சில படங்களிலும் ஸ்ரீகாந்த் நடித்துள்ளார். ஆனால், கிருஷ்ணாவுக்கு கடந்த ஒரு வருடமாக பெரிதாக எந்தவொரு படங்களும் இல்லை என்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X