கிருஷ்ணாவுக்கு உடம்புல இவ்ளோ பிரச்னை இருக்கா?.. விசாரணையில் வெளியான தகவல்கள்.. அடுத்த மூவ் என்ன?
சென்னை: தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழியில் பிரபலமான இயக்குநராக வலம் வருபவர் விஷ்ணுவர்தன். இவர் தமிழில் அஜித்தை வைத்து பில்லா, ஆரம்பம் என இரண்டு ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார். இவரது சகோதரர் கிருஷ்ணா தமிழ் சினிமாவில் நடிகராக இருக்கிறார். ஹீரோவாக தொடர்ந்து நடித்த அவருக்கு பெரிதாக வெற்றி எதுவும் கிடைக்கவில்லை. இந்தச் சூழலில் சமீபத்தில் போதை பொருள் வழக்கில் அவர் பெயர் அடிபட்டது.
கோலிவுட்டில் ஃபேமஸான இயக்குநர் விஷ்ணுவர்தன். அவரது சகோதர் கிருஷ்ணாவும் கோலிவுட்டில் ஃபேமஸான நடிகர்தான். மணிரத்னம் இயக்கிய அஞ்சலி திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக தனது நடிப்பு பயணத்தை ஆரம்பித்த அவர் தொடர்ந்து இருவர், டெரரிஸ்ட் போன்ற படங்களில் நடித்தார். வளர்ந்த பிறகு விஜய் நடித்த உதயா திரைப்படத்தில் சப்போர்ட்டிங் ரோலிலும் நடித்தார். சூழல் இப்படி இருக்க அவருக்கு ஹீரோவாகும் வாய்ப்பு கிடைத்தது.
ஹீரோ கிருஷ்ணா: அதன்படி அலிபாபா என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமானார் அவர். ஆனால் அந்தப் படம் படுதோல்வியை சந்தித்தது. தொடர்ந்து கற்றது களவு என்ற படத்தில் நடித்த அவருக்கு கழுகு திரைப்படம் நல்ல அடையாளத்தை கொடுத்தது. அதில் அவரது நடிப்பும், படத்தில் இடம்பெற்ற பாடல்களும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுக்கொடுத்தது. இதன் காரணமாக கண்டிப்பாக பெரிய நடிகராக வலம் வருவார் என்றெல்லாம் ஆரூடம் கூறப்பட்டது. ஆனால் அவருக்கு பெரிய வெற்றி இதுவரை கிடைக்கவில்லை.

போதை பொருள் வழக்கு: சூழல் இப்படி இருக்க தடை செய்யப்பட்ட கொக்கைன் போதை பொருளை பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். அதிமுகவின் முன்னாள் நிர்வாகி பிரசாத் என்பவரை அடிதடி வழக்கில் கைது செய்த காவல்துறையினர் அவரது வாட்ஸ் அப் உரையாடலை ஆய்வு செய்தபோது பிரதீப் என்ற போதை பொருள் வியாபாரியுடன் செய்த உரையாடல் தெரியவந்தது. அதனையடுத்து பிரதீப்பை விசாரித்தனர் காவல் துறையினர்.
ஸ்ரீகாந்த் கதை: பிரதீப் கொடுத்த வாக்குமூலத்தில், "தீங்கிரை என்ற படத்தை பிரசாத் நடிகர் ஸ்ரீகாந்த்தை வைத்து தயாரித்துவருகிறார். ஸ்ரீகாந்த்துக்கு கொக்கைன் வேண்டுமென்று சொல்லி என்னிடமிருந்து வாங்கி சென்றிருக்கிறார். ஸ்ரீகாந்த்தும் இன்னொரு நடிகரும் கொக்கைன் பயன்படுத்தியதை நானே பார்த்திருக்கீறேன்" என குறிப்பிட்டிருந்தார். அதனையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் ஸ்ரீ போதை பொருள் பயன்படுத்தியது உறுதியானதால் அவர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.
கிருஷ்ணா தலைமறைவு: பிரதீப் சொன்ன இன்னொரு நடிக்ர் கிருஷ்ணா என்பது தெரியவந்தது. அதனையடுத்து அவரை விசாரணைக்கு ஆஜராகுமாறு காவல் துறையினர் சம்மன் அனுப்பினார்கள். ஆனால் அவர் ஆஜராகவில்லை. அதுமட்டுமின்றி அவர் தலைமறைவிட்டதாகவும் ஒரு தகவல் பரவியது. சூழல் இப்படி இருக்க அவரை தேடும் பணியில் ஈடுபட்டிருந்த தனிப்படை இன்று கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டது.
கிருஷ்ணாவின் வாக்குமூலம்: அந்த விசாரணையில் அவர் கொடுத்த வாக்குமூலம் தெரியவந்திருக்கிறது. அவர் தனது வாக்குமூலத்தில், "எனக்கு இரைப்பை அலர்ஜி இருப்பதன் காரணமாக நான் போதை பொருள் பயன்படுத்துவதற்கு வாய்ப்பே இல்லை. இதய துடிப்பு வேகமாக இருப்பதற்காக சிகிச்சை எடுத்து வருகிறேன். பிரதீப் குமாருக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஸ்ரீகாந்த் உடன் மட்டும்தான் எனக்கு நட்பு. பிரசாத்திடமிருந்து நான் போதை பொருள் வாங்கி செல்வதாக தவறாக பிரதீப் கூறியிருக்கிறார்" என குறிப்பிட்டிருக்கிறார்.
இதனையடுத்து காவல் துறையினர் கிருஷ்ணா போதை பொருள் பயன்படுத்தினாரா இல்லையால் என்பது குறித்து மருத்துவ பரிசோதனை செய்ய முடிவெடுத்திருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











