twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அப்பாவி தோற்றத்தில் 'அசுரன்'... இதுதான் 'கர்ணன்' தனுஷ் லுக்... வெளியிட்டார் லால்

    By
    |

    சென்னை: கர்ணன் படத்தில் தனுஷின் தோற்றம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

    'அசுரன்' படத்தை அடுத்து தனுஷ் நடித்துள்ள பாட்டாஸ் படம் 16 ஆம் தேதி வெளியாகிறது. இதையடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்து, பரியேறும் பெருமாள் பட இயக்குனர் மாரி செல்வராஜின் படத்தில் நடித்து வருகிறார்.

    கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயண் இசை அமைக்கிறார். மலையாள நடிகை ரஜிஷா விஜயன், தனுஷ் ஜோடியாக நடிக்கிறார். மலையாள நடிகர் லால், நட்டி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

     சசிகுமார்- ஜோதிகா படத்தில்... காமெடி தாண்டி வேற லெவல் சூரி... ஆச்சரியப்படும் படக்குழு சசிகுமார்- ஜோதிகா படத்தில்... காமெடி தாண்டி வேற லெவல் சூரி... ஆச்சரியப்படும் படக்குழு

    பிரமாண்ட செட்

    பிரமாண்ட செட்

    இந்தப் படத்திலும் தனுஷ் நெல்லை வழக்கில் பேசி நடிக்கிறார். திருநெல்வேலி அருகே பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு ஷூட்டிங் நடந்து வருகிறது. படத்துக்கு, 'கர்ணன்' என டைட்டில் வைத்துள்ளனர்.

    தொழிலாளர்கள்

    தொழிலாளர்கள்

    இந்தப் படத்தின் கதை, மாஞ்சோலை தொழிலாளர்கள் பற்றியது என்று கூறப்படுகிறது. இதில் உள்ளூர் இளைஞர்களையும் நடிக்க வைக்க முடிவு செய்த இயக்குனர் ஆடிஷன் நடத்தி சிலரை தேர்வு செய்துள்ளார்.

    தலைப்புக்கு எதிர்ப்பு

    இதற்கிடையே, கர்ணன் படத் தலைப்புக்கு எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. இதுகுறித்து நடிகர் திலகம் சிவாஜி சமூகநலப் பேரவையின் தலைவர் கே.சந்திரசேகரன், தயாரிப்பாளர் தாணுவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

    அப்பாவி தனுஷ்

    அப்பாவி தனுஷ்

    இந்நிலையில், இந்தப் படத்தில் தனுஷின் தோற்றத்தை நடிகர் லால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்தப் புகைப்படத்தில் தனுஷ் அப்பாவியாக, லாலின் அருகில் நிற்கிறார். யேமன், கர்ணன் என்று கேப்ஷன் கொடுத்துள்ளார் லால். இந்த போட்டோ வைரலாகி வருகிறது.

    English summary
    Malayalam actor Lal shared the character names and looks of Dhanush and him from the film Karnan.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X