Legend Saravanan: அடுத்தப் படத்தோட சூட்டிங்.. லெஜெண்ட் சரவணன் சொன்ன அப்டேட்!
சென்னை: தி லெஜெண்ட் படம் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர் லெஜெண்ட் சரவணன். முதல் படத்திலேயே பிரபல இயக்குநர்கள் ஜேடி -ஜெர்ரி இயக்கம், ஹாரிஸ் ஜெயராஜ் இசை, வேல்ராஜ் ஒளிப்பதிவு என முன்னணி கலைஞர்களை துணையாக கொண்டு தி லெஜெண்ட் என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்திருந்தார் லெஜெண்ட் சரவணன். முன்னதாக தன்னுடைய கடையின் விளம்பரங்களுக்காக ஹன்சிகா, மற்றும் தமன்னா ஆகியோருடன் இணைந்து இவர் நடித்திருந்தார். இந்த விளம்பரங்கள் விமர்சனங்களை ஏற்படுத்திய போதிலும் கடைக்கு அதிகமான விளம்பரத்தை கொடுத்தன,
இந்த விளம்பரங்கள் கொடுத்த தெம்பில் தன்னுடைய கனவான நடிப்பை தி லெஜெண்ட் படம் மூலம் செயல்படுத்தினார் லெஜெண்ட் சரவணன். இந்த படம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வெற்றிப் படமாக மாறியது. ரசிகர்களை அதிகமாக கவர்ந்து அதிகமான வியூஸ்களை பெற்றன. இந்நிலையில் தன்னுடைய அடுத்த படத்தை துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜெண்ட் சரவணன் நடிக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்பார்க்கலாம். இந்நிலையில் இந்தப் படத்தின் சூட்டிங் குறித்த அறிவிப்பை அவர் தனது சமூக வலைதளப்பக்கத்தில் அறிவித்துள்ளார்.

நடிகர் லெஜெண்ட் சரவணன்: பிரபல தொழில் அதிபரான லெஜெண்ட் சரவணன் தன்னுடைய கடையின் விளம்பரங்களில் ஹன்சிகா, தமன்னா என முன்னணி நடிகைகளுடன் இணைந்து நடித்திருந்தார். இந்த விளம்பரங்கள் நெகட்டிவ்வான விமர்சனங்களை பெற்ற போதிலும் கடைக்கு நல்ல வகையில் விளம்பரத்தை ஏற்படுத்திக் கொடுத்தன. இந்த விளம்பரங்களை அடுத்து லெஜெண்ட் சரவணன் தி லெஜெண்ட் என்ற படத்தில் நடித்திருந்தார். தன்னுடைய அறிமுக படத்தையே வெற்றி படமாகவும் மாற்றியிருந்தார். இந்த படத்தில் சரவணனுக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தாலா நடித்திருந்தார்.
அதிரடி போட்டோஷுட்: மேலும் படத்தில் விவேக், ரோபோ சங்கர், தேவதர்ஷினி உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்திருந்தனர். இந்த படத்தின் மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்திருந்தார் சரவணன். முதல் படத்தில் அவரது லுக் ஓரளவுக்கு ரசிகர்களை கவர்ந்த நிலையில் தன்னுடைய கெட்டப்பை மாற்றி அதிரடியாக போட்டோ ஷூட்களை எடுத்து சமூக வலைத்தளங்களில் அடுத்தடுத்து வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் கோட் சூட்டில் இவர் வெளியிட்டு இருந்த புகைப்படங்கள் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து உள்ளன. படம் திரையில் ஏராளமான ரசிகர்களை கவர்ந்த நிலையில் ஓடிடியிலும் வெளியாகி அதிகமான வியூஸ்களை பெற்றுள்ளது.

ஏப்ரலில் சூட்டிங்: இந்நிலையில் அடுத்ததாக எதிர்நீச்சல் உள்ளிட்ட படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜெண்ட் சரவணன் நடிக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த படம் குறித்து அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகி வரும் சூழலில் படத்தின் சூட்டிங் குறித்து தற்போது லெஜெண்ட் சரவணன் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் அப்டேட் தெரிவித்துள்ளார். தன்னுடைய நெருங்கிய உறவினர் திருமணத்தில் பங்கேற்றுள்ள அவர் வரும் ஏப்ரல் மாதத்தில் தன்னுடைய அடுத்த படத்தின் சூட்டிங் துவங்க உள்ளதாக அப்டேட் தெரிவித்துள்ளார். விரைவில் இந்த படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.

தி லெஜெண்ட் படம்: நடிகர் லெஜெண்ட் சரவணன் நடிப்பு மற்றும் தயாரிப்பில் கடந்த 2022ம் ஆண்டில் வெளியானது தி லெஜெண்ட் படம். இந்தப் படம் கலவையான எதிர்பார்ப்புகளுடன்தான் வெளியானது. ஆனாலும் இந்தப் படத்தின் வெற்றிக்கு லெஜெண்ட் சரவணனின் தன்னம்பிக்கை அதிகளவில் உதவி செய்தது. தன்னம்பிக்கையுடன் முன்னணி தொழில் நுட்ப கலைஞர்களின் துணையுடன் இந்தப் படத்தில் அவர் களமிறங்கி வெற்றிக் கண்டுள்ளார். தன்னுடைய முதல் படத்தையே தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என பான் இந்தியா படமாக அவர் வெளியிட்டிருந்தார்.


Click it and Unblock the Notifications











