Legend Saravanan: துவங்கியது லெஜெண்ட் சரவணன் பட வேலைகள்.. போட்டோஷுட்டிற்கு ரெடியாகும் டீம்!
சென்னை: தி லெஜெண்ட் படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக என்ட்ரி கொடுத்தவர் லெஜெண்ட் சரவணன். சினிமாவில் அதிகமான ஆர்வம் கொண்ட இவர் முன்னதாக தன்னுடைய கடையின் விளம்பரங்களில் ஹன்சிகா, தமன்னா போன்ற முன்னணி நடிகைகளுடன் இணைந்து நடித்து அதன் மூலம் பிரபலமானார். தொடர்ந்து தி லெஜெண்ட் படம் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்திருந்தார். இந்தப்படத்தை ஜேடி ஜெர்ரி இயக்கியிருந்தனர். இந்தப்படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார். முன்னணி தொழில்நுட்ப கலைஞர்களுடன் இந்த படத்தில் களம் இறங்கி இருந்தார் லெஜெண்ட் சரவணன்.
படத்தில் அவருக்கு ஜோடியாக பாலிவுட் நாயகி ஊர்வசி ரவுத்தாலா நடித்திருந்தார். மேலும் படத்தில் விஜயகுமார், ரோபோ சங்கர், விவேக், மயில்சாமி, யோகி பாபு என நட்சத்திர பட்டாளங்களே நடித்திருந்தனர். முதல் படத்தையே பான் இந்தியா படமாக தைரியமாக வெளியிட்டார் லெஜெண்ட் சரவணன். மேலும் இந்த படத்தின் ரிலீசின்போது ஸ்பெஷல் காட்சிகளும் நான்கு மணி காட்சிகளாக திரையிடப்பட்டு ரசிகர்களை கவர்ந்தன. சமீபத்தில் இந்தப்படம் ஓடிடியில் வெளியாகி அதிகமான வியூஸ்களை பெற்றன. இதனிடையே தன்னுடைய இரண்டாவது படத்திற்கு தயாராகி வருகிறார் சரவணன்.

நடிகர் லெஜெண்ட் சரவணன்: பிரபல தொழிலதிபர் லெஜெண்ட் சரவணன் சினிமா மீது கொண்ட ஆசையால் தன்னுடைய கடை விளம்பரங்களில் ஹன்சிகா மற்றும் தமன்னா என முன்னணி நடிகைகளுடன் இணைந்து ஆட்டம் போட்டிருந்தார். இவரது இந்த விளம்பரங்கள் நெகட்டிவ் விமர்சனங்களை பெற்ற போதிலும் கடைக்கு மிகப்பெரிய விளம்பரத்தை கொடுத்திருந்தன. இந்நிலையில் தி லெஜெண்ட் படம் மூலம் கோலிவுட்டிலும் ஹீரோவாக என்ட்ரி கொடுத்தார். முன்னதாக சரவணனின் விளம்பரப் படங்களை இயக்கியிருந்த ஜேடி மற்றும் ஜெர்ரி இந்த படத்தையும் இயக்கினர். படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார்.
தி லெஜெண்ட் படம்: படத்தில் விஜயகுமார், ரோபோ சங்கர், விவேக், மயில்சாமி, யோகி பாபு என நட்சத்திர பட்டாளங்களே நடித்திருந்தனர். படத்தில் லெஜெண்ட் சரவணனுக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தாலா இணைந்து நடித்திருந்தார். தன்னுடைய முதல் படத்தையே பான் இந்தியா படமாக வெளியிட்டு அசத்தினார். மேலும் ரிலீசின்போது 4 மணி சிறப்பு காட்சிகளும் இவரது படத்திற்கு கிடைத்தன. இந்நிலையில் இந்தப்படம் தற்போது ஓடிடியிலும் ரிலீசாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து அதிக வியூசையும் பெற்று வருகிறது. தற்போது தன்னுடைய அடுத்த படத்திற்காக தயாராகி வருகிறார் லெஜெண்ட் சரவணன்.
லெஜெண்ட் சரவணனின் 2வது படம்: முன்னதாக கோட் சூட்டில் இவர் அடுத்தடுத்த போட்டோ சூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார் தி லெஜெண்ட் படம் மிகப் பெரிய பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அடுத்ததாக பிரபல இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் சரவணன் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. எதிர்நீச்சல் உள்ளிட்ட படங்களை இயக்கி கோலிவுட்டில் முன்னணி இயக்குநராக வலம்வரும் துரை செந்தில்குமார், லெஜெண்ட் சரவணனின் அடுத்தப்படத்திற்கான போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளை தற்போது மேற்கொண்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.
போட்டோ ஷுட்டிற்கு தயாராகும் சரவணன்: விரைவில் படம் குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் போட்டோ சூட் வரும் 22 ஆம் தேதி சென்னையில் நடக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. கோகுலம் ஸ்டுடியோவில் இந்த போட்டோ சூட் நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது சூரி லீட் கேரக்டரில் நடித்து வரும் கருடன் படத்தை இயக்கி முடித்துள்ளார் துரை செந்தில்குமார். அடுத்ததாக வெற்றிமாறன் கதையில் லாரன்ஸ் லீட் கேரக்டரில் நடிக்க அதிகாரம் படத்தையும் இயக்க உள்ளார். தொடர்ந்து நயன்தாராவின் நயன்தாரா 81 படத்திலும் கமிட் ஆகியுள்ளார். இதனிடையே லெஜெண்ட் சரவணனின் இரண்டாவது படத்தையும் இயக்க உள்ளார். முதல் படத்திலேயே ஏராளமான ரசிகர்களை கவர்ந்து தி லெஜெண்ட் படத்தை வெற்றிப்படமாக மாற்றினார் சரவணன். இந்நிலையில் அவரது இரண்டாவது படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications











