த்ரிஷாவுடன் நடுக்கடலில் மாதவன்.. கன்னத்தில் கை வைத்த நயன்தாரா.. விக்னேஷ் சிவனின் எமோஷனல் வாழ்த்து!
சென்னை: தமிழ் சினிமாவின் எவர்கிரீன் சாக்லேட் பாய் நடிகர் மாதவன் இன்று தனது 56-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். திரைத்துறையினரும், ரசிகர்களும் அவருக்கு சமூக வலைதளங்களில் தங்களது வாழ்த்துகளைக் குவித்து வரும் வேளையில், பிரபல இயக்குநரும் நடிகை நயன்தாராவின் கணவருமான விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள ஒரு ஸ்பெஷல் பிறந்தநாள் வாழ்த்துப் பதிவு இணையத்தில் செம வைரலாகி வருகிறது.
கடலின் நடுவே நட்சத்திர பட்டாளம்: விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ள அந்தப் புகைப்படத்தில், நடிகர் மாதவனுடன் இணைந்து முன்னணி நடிகைகளான த்ரிஷா, நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோர் ஒரு சொகுசு படகில் ஜாலியாகப் பயணம் செய்வது போல போஸ் கொடுத்துள்ளனர். துபாய் நகர பின்னணியில் எடுக்கப்பட்ட இந்த புகைப்படம் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளது.

மாதவனை வாழ்த்தி விக்னேஷ் சிவன்: அந்த பதிவில் அறிவுக்கூர்மை, கலைநயம், பன்முகப் புலமை, ஆழ்ந்த கல்விச் செல்வம், வசீகரம், ஊக்கமளிக்கும் ஆளுமை மற்றும் வெற்றி ஆகியவற்றை ஒருங்கே கொண்ட ஒரு சிறந்த மனிதருக்கு - வியக்கத்தக்க வெற்றிகளாலும், அளவற்ற மகிழ்ச்சியாலும் மட்டுமே நிறைந்த ஒரு ஆண்டு அமைய வாழ்த்துகிறேன் என பதிவிட்டுள்ளார்.
மாதவனின் பிறந்த நாள்: 90-களில் பெண்களின் கனவு நாயகனாக வலம் வந்த மாதவன், தற்போது கதைகளைத் தேர்வு செய்து நடிக்கும் சிறந்த குணச்சித்திர மற்றும் வில்லன் நடிகராக பாலிவுட் வரை மிரட்டி வருகிறார். கடந்த ஆண்டு ஜோதிகாவுடன் இவர் சேர்ந்து நடித்த 'ஷைத்தான்' படத்தில் சைத்தானாகவே மிரட்டி வில்லித்தனத்தை வெளிப்படுத்தி இருந்தார். இதனைத் தொடர்ந்து தமிழில் சித்தார்த், நயன்தாவுடன் இணைந்து 'டெஸ்ட்' படத்தில் நடித்தார். அதோ பாலிவுட்டில் ஆயிரம் கோடி வசூலை அள்ளிய துரந்தர், துரந்தர் 2 படத்திலும் அஜய் சன்யால் என்ற ரோலில் நடித்து ஒட்டுமொத்த கதையின் நாயகனாக இருந்தார்.இன்று பிறந்த நாள் கொண்டாடும் மாதவனுக்கு ரசிகர்கள்,நண்பர்கள், பிரபலங்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications