சூர்யாவை பாராட்டிய மாதவன்... எதுக்குன்னு பாருங்க!
மும்பை : நடிகர் சூர்யா நடிப்பு ப்ளஸ் தயாரிப்பில் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றுள்ள படம் ஜெய் பீம்.
இந்தப் படத்திற்காக தமிழக முதல்வர் உள்ளிட்ட பலரும் சூர்யாவிற்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் நடிகர் மாதவனும் சூர்யா மற்றும் ஜெய் பீம் குழுவினருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

ஜெய் பீம் படம்
நடிகர் சூர்யாவின் நடிப்பு மற்றும் தயாரிப்பில் கடந்த 2ம் தேதி தீபாவளியையொட்டி அமேசான் ப்ரைமில் வெளியான படம் ஜெய் பீம். ஒடுக்கப்பட்டவர்களுக்காக குரல் கொடுக்கும் வழக்கறிஞர் வேடத்தில் இந்தப் படத்தில் சூர்யா நடித்துள்ளார். அத்துடன் முதல் முறையாக அவர் வழக்கறிஞர் கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார்.

உண்மை சம்பவங்கள்
படத்தில் சூர்யாவுடன் லிஜோ மோல் ஜோஷ் மற்றும் மணிகண்டன் லீட் கதாபாத்திரங்களில் நடித்திருந்த நிலையில், இவர்களது கேரக்டர்களும் படத்திற்கு வலு சேர்த்திருந்தன. உண்மை சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்டிருந்த இந்தப் படத்திற்கு பலதரப்பட்டவர்களும் தொடர்ந்து வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

குவியும் பாராட்டுக்கள்
தமிழக முதல்வர் முக ஸ்டாலின், உலகநாயகன் கமல் உள்ளிட்டவர்களும் படம் தங்களுக்குள் ஏற்படுத்திய பாதிப்பு குறித்து பாராட்டு தெரிவித்துள்ளனர். தொடர்ந்து படத்திற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இந்நிலையில் இந்தப் படம் ஐஎம்டிபி இணையத்தில் தொடர்ந்து தற்போது முதலிடத்தில் உள்ளது.

ஐஎம்டிபியில் முதலிடம்
250 படங்களுடன் எடுக்கப்பட்டுள்ள இந்தப் பட்டியலில் 9.6 ரேட்டிங்குடன் ஜெய் பீம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. முதலிடத்தில் இருந்த ஷஷாஙக் ரிடெம்ப்ஷன் படத்தை 9.3 ரேட்டிங்குடன் இரணட்வது இடத்திற்கு தள்ளியுள்ளது ஜெய் பீம். பிரபலமான காட் பாதர் படம் 9.2 புள்ளிகளுடன் 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

மாதவன் பாராட்டு
ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்நிலையில் இந்தப் படம் ஷஷாங்க் ரிடெம்ப்ஷன் படத்தை பின்னுக்கு தள்ளி ஐஎம்டிபி பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது குறித்து நடிகர் மாதவன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

தகுதியான படம்
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் இந்தப் படம் ஐஎம்டிபி இணையத்தில் முதலிடத்தை பெறுவதற்கு மிகவும் தகுதியானது தான் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் நடிகர் சூர்யா மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துக்களையும் அவர் பகிர்ந்துள்ளார்.


Click it and Unblock the Notifications











