ஸ்டைலா..கலக்கலா..இளநீர் வெட்டிய மாதவன்...கண் இமைக்காமல் ரசித்து பார்த்த ரசிகை !

மும்பை : தமிழ் மற்றும் ஹிந்தி படங்களில் தொடர்ந்து நடித்து அனைவரையும் ஈர்த்து வரும் நடிகர் மாதவன் இப்பொழுது வெப் சீரிஸ்களில் நடிக்க உள்ளார்.

கவுரங் தோஷி வெளியிட உள்ள இரண்டு வெப் சீரிஸ்களில் செவன்த் சென்ஸ் என்ற வெப் சீரிஸில் மாதவன் லீட் ரோலில் நடிக்க உள்ளதாக சமீபத்தில் செய்திகள் வெளிவந்துள்ளன.

இந்த நிலையில் தற்போது உள்ள லாக் டவுன் சூழலில் நடிகர் மாதவன் ஒரு இளநீரை அற்புதமாக வெட்டி காட்டி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறார்.

பெண்களின் மனதை

பெண்களின் மனதை

ஹிந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்துக் கொண்டிருந்த மாதவன் தமிழில் அலைபாயுதே என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் செய்யப்பட்டு தமிழ் மக்களுக்கு மிகவும் பரிச்சயமானார். ஹீரோவாக நடித்த முதல் படத்திலேயே பல பெண்களின் மனதை கொள்ளை கொண்டு கனவு நாயகனாக வலம் வந்த மாதவன் இன்றளவும் பல கோடி ரசிகர்களின் இதயங்களில் உள்ளார்.

சூப்பரான கம்பேக்

சூப்பரான கம்பேக்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்து இறுதிச்சுற்று திரைப்படம் மிகப் பெரிய வெற்றி அடைந்து இவருக்கு சூப்பரான கம்பேக் கொடுத்தது. மிகவும் வித்தியாசமான தோற்றத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் தோன்றிய மாதவனை அதுவரை சாப்டான கதாபாத்திரங்களும் காதல் கதைகளும் பார்த்து வந்த ரசிகர்களுக்கு இந்தப்படம் மிகப்பெரிய அதிர்ச்சியாக அமைந்தது.

பாக்ஸராக நடித்துள்ளார்

பாக்ஸராக நடித்துள்ளார்

மிக நீண்ட முடியுடன் கட்டுடல் பாடியுடன் பாக்ஸருக்கான அனைத்து குணங்களையும் தயார்படுத்தி இறுதிச்சுற்று என்ற படத்தில் நடித்திருந்த இவருக்கு இந்தப் படம் ஒரு மிகச் சிறந்த கம்பேக்காக அமைந்திருந்தது. மாதவன் முதன்முதலில் பாக்ஸராக நடித்துள்ள இந்த படம் இவரின் கெரியரில் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தி இதுவரை இருந்துவந்த சாக்லேட் பாய் இமேஜை உடைத்து பலரின் பாராட்டுகளையும் பெற்றது.

போலீஸ் கதாபாத்திரத்தில்

போலீஸ் கதாபாத்திரத்தில்

இவ்வாறு கம்பேக் கொடுத்த மாதவன் முதல் முறையாக விஜய் சேதுபதியுடன் இணைந்து விக்ரம் வேதா என்ற படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் மிரட்டி எடுத்து இருந்தார். போலீஸ் மற்றும் ரவுடி என இரு வித்தியாசமான கதாபாத்திரங்களுக்கு இடையே நடக்கும் சுவாரஸ்யமான மோதல்களை ரசிக்கும்படி உருவாகியிருந்த விக்ரம் வேதா திரைப்படம் அனைத்து மக்களையும் ரசிக்க வைத்து தற்போது பாலிவுட்டிலும் இந்தப்படத்தை ரீமேக் செய்யப்படுவதாக பேச்சுக்கள் அடிபடுகின்றன.

செவன்த் சென்ஸ்

செவன்த் சென்ஸ்

தனது வித்தியாசமான நடிப்பால் தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வரும் மாதவன் கவுரங் தோஷி வெளியிட உள்ள இரண்டு வெப் சீரிஸ்களில் "செவன்த் சென்ஸ்" என்ற வெப் சீரிஸில் லீட் ரோலில் நடிக்க உள்ளதாக இப்போது செய்திகள் வெளிவந்துள்ளது. மேலும் இதன் படப்பிடிப்புகள் லாக்டவுன் முடிந்தவுடன் வெளிநாடுகளில் பெரும்பாலான காட்சிகள் படம் பிடிக்க உள்ளதாக அப்படக்குழு தெரிவித்துள்ளது.

ரசித்து ருசித்து

ரசித்து ருசித்து

படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களில் பிசியாக நடித்துக் கொண்டு வரும் மாதவன் இந்த லாக்டவுனில் தனது மாமா கொடுத்தனுப்பிய இளநீர் ஒன்றை ஸ்டைலாக, கலக்கலாக, கச்சிதமாக வெட்டி அதை ரசித்து ருசித்து குடித்த அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்பொழுது பதிவிட்டுள்ளார்.

உங்களை பார்ப்பதில்

உங்களை பார்ப்பதில்

மேலும் இந்த வீடியோவை பார்த்த மாதவனின் தீவிர ரசிகை ஒருவர், என்னால் உங்களை பார்ப்பதில் இருந்து என் கண்களை எடுக்க முடியவில்லை என்றும் கண்களை இமைக்காமல் ரசித்து பார்க்கிறேன் என்றும் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X