Actor Madhavan: அதிர்ஷ்டசாலி ஆகும் மாதவன்.. அட கதையை அவரே எழுதியிருக்காரா!
சென்னை: நடிகர் மாதவன் அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இயக்குநராகவும் மாறி மாஸ் காட்டியுள்ளார்.
தற்போது மித்ரன் ஜவஹருடன் இணைந்து மாதவன் அடுத்தப் படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தின் சூட்டிங் தற்போது ஸ்காட்லாந்தில் நடந்து வருகிறது. இந்தப் படம் ரொமாண்டிக் காமெடி ஜானரில் உருவாகி வருகிறது.
நடிகர் மாதவன்: நடிகர் மாதவன் அடுத்தடுத்து வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார். முன்னணி இயக்குநர்களுடன் கைக்கோர்த்து படங்களை கொடுத்துவரும் மாதவன் சமீபத்தில் இயக்குநராகவும் தன்னை சிறப்பாக வெளிப்படுத்தியிருந்தார். அடுத்தடுத்து தமிழ் படங்களிலும் கமிட்டாகிவரும் மாதவன் அடுத்ததாக திருச்சிற்றம்பலம் படத்தின் இயக்குர் மித்ரன் ஜவஹருடன் இணைந்துள்ளார். இந்தப் படத்திற்கு அதிர்ஷ்டசாலி என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
மித்ரன் ஆர் ஜவஹருடன் இணைந்த மாதவன்: இந்தப் படத்தின்மூலம் மித்ரன் ஆர் ஜவஹருடன் மாதவன் முதல்முறையாக இணைந்துள்ளார். இந்தப் படம் காமெடி மற்றும் ரொமாண்டிக் ஜானரில் உருவாகி வருகிறது. படத்தில் மாதவனுக்கு ஜோடியாக கன்னட நடிகை ஷர்மிளா மாண்ட்ரே இணைந்துள்ளார். படத்தில் எழுத்தாளர் ஜெயமோகனும் முக்கியமான கேரக்டரில் நடிக்க கமிட்டாகியுள்ளார். தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஸ்காட்லாந்தில் துவங்கி நடந்து வருகிறது.
ஸ்காட்லாந்தில் படப்பிடிப்பு துவக்கம்: படத்தில் ராதிகா சரத்குமாருக்கும் முக்கியமான கேரக்டர் வழங்கப்பட்டுள்ளது. மேலும் படத்தின் மற்ற நடிகர்கள், நடிகைகள் விவரம் விரைவில் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது. இதனிடையே ஸ்காட்லாந்தின் ஃபோர்த் பிரிட்ஜில் இருந்து ஒரு வீடியோவை மாதவன் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். புதிய தமிழ் படத்தின் துவக்கம், அதிர்ஷ்டசாலி.. ஸ்காட்லாந்து என்று அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். படம் குறித்து நடிகை ராதிகாவும் இன்ஸ்டாகிராமில் மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார்.
மேடிக்கு ராதிகா வாழ்த்து: நடிகர் மேடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ள ராதிகா, இன்று முதல் படப்பிடிப்பு துவங்கவுள்ளதாகவும் அப்டேட் தெரிவித்துள்ளார். இதனிடையே இந்தப் படத்தின் கதையை நடிகர் மாதவனே எழுதியுள்ளார். இந்தப் படத்தையும் தன்னுடைய முந்தைய படமான திருச்சிற்றம்பலம் போலவே மனித உணர்வுகளுக்கு அதிகமான கவனம் கொடுத்து இயக்க திட்டமிட்டுள்ளார் மித்ரன் ஜவஹர். தனுஷ் -நித்யா மேனன் லீட் கேரக்டர்களில் நடித்திருந்த திருச்சிற்றம்பலம் படம் 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.
அதிர்ஷ்டசாலியான மாதவன்: ரொமாண்டிக் ஹீரோ என்று பெயரெடுத்த மாதவன், சமீபகாலங்களில் ஆக்ஷன் படங்களிலும் சிறப்பாக நடித்து வருகிறார். இந்நிலையில் மீண்டும் அவரது ரொமாண்டிக் பக்கத்தை வெளிக் கொண்டுவரும் முயற்சியில் தற்போது மித்ரன் ஜவஹர் ஈடுபட்டுள்ளார். அவரது முயற்சி கண்டிப்பாக சக்சஸ் ஆகும் என்று எதிர்பார்க்கலாம். இந்தப் படம் மேடிக்கு அதிர்ஷ்டத்தையும் நல்ல வரவேற்பையும் பெற்றுத் தரும் என்றும் எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











