அலைப்பாயுதே படத்துல ட்ரெயின் புரபோஸ் சீன் எப்படி எடுக்கப்பட்டது தெரியுமா.. மாதவன் சொன்ன ரகசியம்!

சென்னை: அலைப்பாயுதே படத்தில் பெரும் பிரபலமான ட்ரெயின் புரபோஸல் காட்சியாக்கப்பட்ட ரகசியத்தை நடிகர் மாதவன் தெரிவித்துள்ளார்.

அலைப்பாயுதே படம் கடந்த 2000 ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி வெளியானது. மணிரத்னம் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் தான் நடிகர் மாதவனின் முதல் படமாகும்.

இந்தப் படத்திற்கு இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இசையமைத்திருந்தார். படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் பட்டிதொட்டியெங்கும் ஹிட்டானது.

புரபோஸ் செய்யும் காட்சி

புரபோஸ் செய்யும் காட்சி

இந்தப் படத்தில் இடம் பெற்ற நீ அழகா இருக்கன்னு நினைக்கல என மாதவன், தனது காதலியான ஷாலினியிடம் ட்ரெயினில் பேசி புரபோஸ் செய்யும் டயலாக் பெரும் பிரபலமானது. பல படங்களில் அந்த டயலாக்கை வைத்து பல காட்சிகள் அமைக்கப்பட்டது.

ரிஜிஸ்டர் திருமணம்

ரிஜிஸ்டர் திருமணம்

மாதவனை போன்று மிமிக்ரி செய்யும் ஆர்ட்டிஸ்ட்டுகள் கூட அந்த டயலாக்கைதான் பேசுவார்கள். இன்று வரையும் அந்த டயலாக் பேசப்பட்டு வருகிறது. இந்தப் படம் வெளியான பிறகுதான் பெற்றோருக்கு தெரியாமல் பிள்ளைகள் ரிஜிஸ்டர் திருமணம் செய்து கொள்ளும் சம்பவங்களும் அதிகமானது.

மாதவன் தகவல்

மாதவன் தகவல்

இந்நிலையில் அலைப்பாயுதே படம் ரிலீஸாகி 20 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு பலரும் அப்படத்தை குறித்து தங்களின் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் படத்தின் ஹீரோவான நடிகர் மாதவனும் ஆங்கில பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார்.

ரியல் பார்ட்னர்கள்

ரியல் பார்ட்னர்கள்

அதில் ட்ரெயினில் புரபோஸ் செய்யும் காட்சி அவ்வளவு தத்ரூபமாகவும், அதே ஃபீலிங்ஸுடன் ரொமான்டிக்காக வந்ததற்கான காரணத்தை கூறியிருக்கிறார். அதாவது அப்போதுதான் ஷாலினி - அஜித் காதல் பீக்கில் இருந்த சமயம். ரயிலில் அந்தக் காட்சி படமாக்கப்பட்டபோது ஹீரோவான தானும், ஹீரோயினான ஷாலினியும் தங்களின் ரியல் லைஃப் பார்ட்னர்களை பற்றி நினைத்து கொண்டதாக கூறியிருக்கிறார் மாதவன்.

ஷாலினி அஜித்

ஷாலினி அஜித்

மாதவன் தனது ரியல் காதலியான சரிதாவையும் ஷாலினி தனது ரியல் காதலரான அஜித்தை நினைத்து கொண்டதாகவும் கூறியுள்ளார் மாதவன். அதனால் தான் அந்தக்காட்சி அவ்வளவு ரொமான்ட்டிக்காகவும் அழகாகவும் வந்தது என கூறியிருக்கிறார் மாதவன். இந்த புரபோஸல் காட்சி அலைப்பாயுதே படத்தின் முக்கிய காட்சிகளில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X