Don't Miss!
- Finance
சீனாவின் டாப் 5 ஆன்லைன் மோசடி இவைதான்.. இந்தியாவுக்கும் ஒத்துப்போகும்.. கண்டிப்பாக படிங்க!
- News
90% அமைச்சர்களுக்கு ஆங்கிலம் தெரியாது! மழை பெய்தால் கூட திராவிடமாடல் தான் காரணமாம்! அண்ணாமலை காட்டம்
- Sports
ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை.. ராகுல் திரிபாதி மரண பேட்டிங்.. ஒரே ஓவரில் ஆட்டத்தை மாற்றிய மும்பை
- Automobiles
இதை யாரும் எதிர்பாக்கவே இல்ல... ஹூண்டாய் நிறுவனத்தை பாக்கவே பாவமா இருக்கு... என்ன ஆச்சு தெரியுமா?
- Technology
ரூ.20,000 விலைப்பிரிவு: அறிமுகமான ஒன்பிளஸ் ஏஸ் ரேசிங் பதிப்பு- 12 ஜிபி ரேம், 67வாட்ஸ் சூப்பர் ஃப்ளாஷ் சார்ஜிங்
- Lifestyle
மேங்கோ கிரனிட்டா
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
திடீரென குடும்பத்துடன் துபாய்க்கு குடிபெயர்ந்த நடிகர் மாதவன்.... ஏன் தெரியுமா?
சென்னை: பிரபல நடிகரான மாதவன் திடீரென குடும்பத்துடன் துபாய்க்கு குடி பெயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் மாதவன். கோலிவுட்டின் சாக்லேட் பாய் என்று அழைக்கப்படுகிறார்.
தமிழ் படங்கள் மட்டுமின்றி தெலுங்கு மலையாளம் மற்றும் இந்தி சினிமாவிலும் தனக்கான இடத்தை தக்க வைத்துள்ளார் நடிகர் மாதவன். திரைப்படங்கள் மட்டுமின்றி வெப் சீரிஸ்களிலும் பட்டையை கிளப்பி வருகிறார் மாதவன்.
சூர்யாவை பாராட்டிய மாதவன்... எதுக்குன்னு பாருங்க!

வேதாந்த் என்ற மகன்
நடிகர் மாதவன் தனது மனைவி சரிதாவை கடந்த 1999ஆம் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு வேதாந்த் என்ற மகன் உள்ளார். 16 வயதான வேதாந்த் மாதவன் விளையாட்டுத்துறையில் ஆர்வமாக உள்ளார். நீச்சல் போட்டிகளில் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறார்.

லத்வியன் நீச்சல் போட்டி
கடந்த மார்ச் மாதம் லத்வியன் ஓபன் நீச்சல் போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொண்டார் வேதாந்த். இதில் வெண்கலப் பதக்கத்தை வென்று பெருமை சேர்த்தார் வேதாந்த். இதனை தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதம் பெங்களூருவில் நடைபெற்ற தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் பங்கேற்ற வேதாந்த் 7 பதக்கங்களை வென்று அசத்தினார்.

நீச்சல் குளங்கள் மூடல்
இந்நிலையில் வரும் 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ளார் வேதாந்த். இதற்காக பயிற்சிகளை மேற்கொண்டு வந்தார். ஆனால் தற்போது கொரோனா அச்சம் காரணமாக இந்தியாவில் உள்ள பெரிய நீச்சல் குளங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இதனால், வேதாந்த் ஒலிம்பிக் போட்டிக்கு தயாராவதில் சிக்கல் ஏற்பட்டது.

மகனின் பயிற்சிக்காக..
இந்நிலையில் மகனின் நீச்சல் பயிற்சிக்காக வேண்டி நடிகர் மாதவன் தனது மனைவியுடன் துபாய்க்கு குடி பெயர்ந்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் இதுகுறித்து தெரிவித்துள்ள மாதவன், தங்களின் மகன், உலகம் முழுவதும் நடைபெறும் பல நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை வென்று தங்களுக்கு பெருமை சேர்த்துள்ளதாக கூறியுள்ளார். மேலும் அவரை ஒரு நடிகராக்குவதில் தனக்கும், தன் மனைவிக்கும் விருப்பமில்லை என்றும் நடிகர் மாதவன் கூறியுள்ளார்.