எவ்ளோ சீக்கிரம் முடியுமோ அவ்ளோ சீக்கிரம் கொரோனா தடுப்பூசி போட்டுக்கங்க... மகேந்திரன் கோரிக்கை
சென்னை : நாடு தழுவிய அளவில் அனைவரும் ஆர்வத்துடன் கொரோனா தடுப்பூசிகளை போட்டு வருகின்றனர்.
திரை மற்றும் பல்வேறு துறைகளை சார்ந்த பிரபலங்களும் தங்களது தடுப்பூசிகளை போட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் மாஸ்டர் மகேந்திரன் தன்னுடைய கொரோனா தடுப்பூசியின் முதல் டோசை போட்டுக் கொண்டுள்ளார்.

தொடர் லாக்-டவுன்கள்
கொரோனா வைரஸ் இந்திய அளவில் ஏற்படுத்தியுள்ள இரண்டாவது அலை மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. அதிகமான உயிரிழப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இதற்கென மத்திய, மாநில அரசுகள் தொடர் லாக்டவுன்களை அறிவித்து வருகின்றன.

தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு
இதையடுத்து கொரோனாவின் தாக்கம் தற்போது மட்டுப்பட்டுள்ளது. ஆயினும் இரண்டாவது அலை ஏற்படுத்தியுள்ள பாதிப்புகளை அடுத்து கொரோனா வைரஸ் மற்றும் தடுப்பூசிகள் குறித்த விழிப்புணர்வு மக்களுக்கு அதிகமாக ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் தாமாகவே முன்வந்து கொரோனா தடுப்பூசிகளை போட்டு வருகின்றனர்.

புகைப்படங்கள் பகிர்வு
திரை மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்கள் தங்களது தடுப்பூசிகளின் முதல் மற்றும் இரண்டாம் டோசை போட்டு அதன்மூலம் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். மேலும் தங்களது புகைப்படங்களை சமூக வலை தளங்களில் பதிவிடுவதன்மூலம் மற்றவர்களையும் போட தூண்டி வருகின்றனர்.

தடுப்பூசி போட்ட நடிகர் மகேந்திரன்
இந்நிலையில் தற்போது நடிகர் மாஸ்டர் மகேந்திரன் கொரோனா தடுப்பூசியின் முதல் டோசை போட்டுள்ளார். இதை தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படமாக அவர் வெளியிட்டுள்ளார். மேலும் தடுப்பூசிகள் அனைவரது வாழ்க்கையையும் காப்பாற்றும் என்றும் எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் தடுப்பூசிகளை போட்டுக் கொள்ளுமாறும் மற்றவர்களையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.


Click it and Unblock the Notifications











