பட ரிலீஸுக்கு முன் திடீர் விசிட்... ஷீர்டி சாய்பாபா கோயிலில் குடும்பத்துடன் முகாமிட்ட ஹீரோ
ஐதராபாத்: நடிகர் மகேஷ்பாபு தனது குடும்பத்துடன் ஷீர்டி கோயிலில் நேற்று சாமி தரிசனம் செய்தார்.
பிரபல தெலுங்கு ஹீரோ மகேஷ்பாபு. முருகதாஸ் இயக்கிய ஸ்பைடர் படம் மூலம் இவர் தமிழுக்கும் வந்தார். அவர் நடித்த தெலுங்கு படங்கள் தமிழில் டப் செய்யப்பட்டு ரிலீஸ் ஆகியுள்ளன.
இவர் தற்போது நடித்துள்ள படம், சரிலேரு நீக்கெவ்வரு. இதில் ராணுவ வீரராக மகேஷ் பாபு நடித்துள்ளார். முன்னாள் ஹீரோயின் விஜயசாந்தி, முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.

ராஷ்மிகா மந்தனா
அனில் ரவிபுடி இயக்கியுள்ள இந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடித்துள்ளார். பிரகாஷ்ராஜ், ரோகிணி உட்பட பலர் நடித்துள்ளனர். ரத்னவேலு ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜனவரி மாதம் 11 ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது.

நடிகை தமன்னா
இந்தப் படத்தில் நடிகை தமன்னா ஒரு பாடலுக்கு ஆடியுள்ளார். இந்தப் பாடல் கடந்த சனிக்கிழமை வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

ஷீர்டி சாய்பாபா
இந்நிலையில் இந்தப் படம் வெற்றி பெற வேண்டி, மகேஷ் பாபு, தனது மனைவி நம்ரதா மற்றும் குடும்பத்தினருடன் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள ஷீர்டி சாய்பாபா கோயிலுக்கு நேற்று சென்றார். அங்கு குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.

மூன்று மாதம் ரெஸ்ட்
கோயிலின் அருகே ஏராளமான ரசிகர்கள் அவரை சூழ்ந்துகொண்டு புகைப்படம் எடுத்தனர்.
இந்தப் படத்தை முடித்துவிட்ட மகேஷ்பாபு மூன்று மாதம் ஓய்வெடுக்கப் போகிறார். அதன்பிறகு அடுதத பட வேலைகளில் இறங்க உள்ளதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











