Actor Manikandan: விக்ரம் வேதா டயலாக் ரைட்டர் ஆனது இப்படித்தான்.. மணிகண்டன் கூல் பேட்டி!

சென்னை: கோலிவுட்டில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் அதிகமான கவனத்தை பெற்று வருபவர் நடிகர் மணிகண்டன். Boy next door லுக்கில் காணப்படும் மணிகண்டனுக்கு முன்னதாக வெளியான குட் நைட் படம் மிகச்சிறந்த வரவேற்பை பெற்று தந்தது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மணிகண்டனின் நடிப்பில் வெளியான லவ்வர் படமும் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத் தந்துள்ளது. படத்திற்கு சில கலவையான விமர்சனங்கள் கிடைத்த போதிலும் படத்தில் தன்னுடைய அருண் என்ற கேரக்டரை மணிகண்டன் வலுப்படுத்தியுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

முன்னதாக ஜெய் பீம், காலா உள்ளிட்ட படங்களில் முக்கியமான கேரக்டர்களில் நடித்துள்ள மணிகண்டன், விக்ரம் வேதா உள்ளிட்ட சில படங்களுக்கு டயலாக் ரைட்டிங்கும் மேற்கொண்டுள்ளார். இவரது இயக்கத்தில் நரை எழுதும் சுயசரிதம் என்ற படம் ஓடிடியில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. தொடர்ந்து படங்களில் நடிகராக அடுத்தடுத்து கமிட்டாகிவரும் மணிகண்டன், தன்னுடைய இயக்கத்தில் அடுத்ததாக விஜய் சேதுபதிக்காக ஒரு ஸ்கிரிப்டை எழுதி வருகிறார். விரைவில் அவரது இயக்கத்தில் அந்த படத்தின் அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.

Actor Manikandan opens up about the chance as Dialogue writer in Vikram Vedha movie


நடிகர் மணிகண்டன்: நடிகர் மணிகண்டன் அடுத்தடுத்த படங்களில் ஹீரோவாகவும், கேரக்டர் ரோல்களிலும் நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகிறார். காதலும் கடந்து போகும், காலா, விக்ரம் வேதா போன்ற படங்களில் முன்னணி ரோல்களில் நடித்திருந்த மணிகண்டன், நடிப்பில் அடுத்தடுத்து குட் நைட் மற்றும் லவ்வர் படங்கள் வெளியாகி மாஸ் காட்டியுள்ளன. அவர் நாயகனாக நடித்திருந்த இந்தப் படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ள நிலையில் அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார் மணிகண்டன். இதனிடையே அவரது இயக்குனர் கனவையும் விடாமல் துரத்தி வருகிறார்.

பன்முகத் திறன்: அடுத்ததாக விஜய் சேதுபதிக்காக அவர் ஒரு படத்தின் ஸ்கிரிப்ட்டை உருவாக்கி வருவதாக கூறப்பட்டுள்ளது. முன்னதாக நரை எழுதும் சுயசரிதம் என்ற படம் மணிகண்டன் இயக்கத்தில் ஓடிடியில் வெளியானது. இந்த படத்திற்கு ரசிகர்கள் அதிகமான வரவேற்பை கொடுத்திருந்தனர். நடிப்பு, இயக்கம் மட்டும் இல்லாமல் படங்களில் திரைக்கதை வசனம் எழுதுவதையும் மேற்கொண்டு வருகிறார் மணிகண்டன். முன்னதாக இவரது வசனத்தில் வெளியான விக்ரம் வேதா படம் மிகப்பெரிய வரவேற்பை இவருக்கு பெற்றுக் கொடுத்தது. இந்த படத்தில் காவலராகவும் அவர் ஒரு சிறிய கேரக்டரில் நடித்திருந்தார்.

விக்ரம் வேதா பட வசனகர்த்தா: இந்த படத்தில் விஜய் சேதுபதியின் சிபாரிசில் ஆடிஷனுக்காக தான் சென்றபோது காவலராக தான் நடிக்க கமிட் ஆனதாகவும் தொடர்ந்து வசனங்கள் எழுதுவீர்களா என்று படத்தின் இயக்குநர்கள் புஷ்கர் மற்றும் காயத்ரி தன்னிடம் கேட்டதாகவும் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் தான் படத்தின் இரண்டு காட்சிகளுக்கு வசனம் எழுதி எடுத்துக்கொண்டு போய் கொடுத்ததாகவும் உடனடியாக தன்னை அந்த படத்திற்கு வசனகர்த்தாவாக அவர்கள் பிக்ஸ் செய்ததையும் தற்போது ஒரு பேட்டியில் மணிகண்டன் நினைவு கூர்ந்து உள்ளார்.


வாய்ப்பு குறித்து மணிகண்டன்: முன்னதாக புஷ்கர் காயத்ரி, மாதவன் மற்றும் விஜய் சேதுபதியை வைத்து படம் இயக்குகிறார்கள் என்ற அறிவிப்பை தான் பத்திரிகையில் பார்த்து வியப்புடன் தன்னுடைய நண்பர்களிடம் பேசியதாகவும் தொடர்ந்து இந்தப் படத்தின் காவலர் வேடம் மட்டுமில்லாமல் டயலாக் ரைட்டர் சான்சும் கிடைத்ததை நினைவு கூர்ந்துள்ளார். மேலும் வாழ்க்கையில் எப்படி வேண்டுமானாலும் நமக்கு சான்ஸ் கிடைக்கும் என்பதை இந்தப் பேட்டியில் கூறியுள்ள மணிகண்டன், அதற்கு நாம் நம்மை தயார் படுத்தி வைத்திருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X