Actor Manikandan: தூக்கத்தில் சீண்டிய நாயகி.. அனுபவம் பகிர்ந்த லவ்வர் பாய் மணிகண்டன்!

சென்னை: நடிகர் மணிகண்டனின் குட் நைட் படம் அவருக்கு சிறப்பான வெற்றியை கொடுத்த நிலையில் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார். இதனிடையே இயக்கத்திலும் கவனம் செலுத்தி வருகிறார். நடிகர் விஜய் சேதுபதிக்காக அவர் அடுத்ததாக ஸ்கிரிப்ட் ரெடி செய்து வருவதாகவும் விரைவில் படம் குறித்த அறிவிப்பு வெளியாகவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் அவரது நடிப்பில் தற்போது லவ்வர் படம் திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது. காதலர்களுக்கிடையிலான ஈகோ, பொசசிவ்னெஸ், பாதுகாப்பு என்ற பெயரில் செய்யப்படும் அடக்குமுறைகளை மையமாக கொண்டு படம் வெளியாகியுள்ளது.

நடிகர் ரஜினிகாந்தின் லால் சலாம் படத்துடன் நேற்றைய தினம் திரையரங்குகளில் படம் ரிலீசாகியுள்ளது. இந்தப் படம் இயக்குநர் பிரபுராம் வியாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள நிலையில் படத்தின் கதைக்களம் ரசிகர்களை யோசிக்க வைத்துள்ளது. கல்லூரி காலத்தில் இருந்து ஆண்டுகளாக தொடர்ந்துவரும் காதலில் பொசசிவ்னெஸ் ஏற்படுத்தும் பிரச்சினை, சுதந்திரமாக செயல்பட விரும்பும் நாயகியின் போக்கு இதன் மத்தியில் காதல் படும் பாட்டை இயக்குநர் இந்தப் படத்தில் சொல்ல முற்பட்டுள்ளார். படத்தில் இவர்களது காதல் ஜெயித்ததா என்பதாக கதையை கொண்டு சென்றுள்ளார்.

Actor Manikandan shared his unforgetable memories with Heroine Sri Gouri priya in Lover shooting spot

நடிகர் மணிகண்டன்: நடிகர் மணிகண்டனின் குட் நைட் அவருக்கு சிறப்பாக அமைந்த நிலையில் அடுத்ததாக அவரது நடிப்பில் நேற்றைய தினம் லவ்வர் படம் ரிலீசாகியுள்ளது. இந்தப்படத்தில் கல்லூரி காலத்திலிருந்து தொடரும் காதலில் பொசசிவ்னெஸ் மற்றும் சுதந்திர மனப்பான்மை எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை கதைக்களமாக கொண்டுள்ளார் இயக்குநர் பிரபுராம் வியாஸ். காதல், சண்டை, எச்சரிக்கை, அழுகை என அடுத்தடுத்த உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் படத்தின் திரைக்கதை வடிவமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து சேர்ந்து வாழ்வதற்காக காதலர்கள் செய்யும் முயற்சிகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

லவ்வர் படம்: இடைவேளைக்கு முன்பான கதை வேகம் கூடும் நிலையில் இடைவேளைக்கு பின்பான கதைக்களத்தில் இயக்குநர் இன்னும் அதிகமான கவனத்தை செலுத்தியிருக்கலாம் என்பதே தற்போது விமர்சனமாக முன்வைக்கப்பட்டு வருகிறது. இந்தக் கதையில் பின்பாதியில் அனைத்து காட்சிகளும் முன்னதாகவே யூகிக்க முடிவது படத்தின் தொய்வாக பார்க்கப்படுகிறது. முன்னதாக இந்தப் படத்திற்கான பிரமோஷன்களும் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டன. இதனால் அதிகமான எதிர்பார்ப்புகளை இந்தப் படம் ஏற்படுத்தியிருந்தது. ஆயினும் படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

ஸ்ரீ கௌரி பிரியா லூட்டி: இதனிடையே இந்தப் படத்தின் நாயகி ஸ்ரீ கௌரி பிரியா சூட்டிங்கின்போது தன்னிடம் செய்த குறும்புகளை தற்போது தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் மணிகண்டன் பகிர்ந்துள்ளார். சூட்டிங் இடைவெளியில் தன்னை அறியாமல் மணிகண்டன் தூங்கிக் கொண்டிருக்க, அவர் அசந்து தூங்கிக் கொண்டிருப்பதை பார்த்து சிரிக்கும் ஸ்ரீகௌரி பிரியா, அவரது தாடியை சுரண்டி விட்டு அழிச்சாட்டியம் செய்கிறார். இதனால் அதிர்ச்சியடைந்து மணிகண்டன் விழித்துப் பார்ப்பதை வீடியோவாக அவர் எடுத்த நிலையில், தற்போது அந்த வீடியோவை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த மணிகண்டன், அவருடனான மறக்க முடியாத நினைவுகள் என்று குறிப்பிட்டுள்ளார்.

நம்பிக்கை தான் முக்கியம்: படத்தில் மணிகண்டன், ஸ்ரீ கௌரி பிரியா இவர்களுடன் கண்ணா ரவி, ஹரீஷ்குமார் உள்ளிட்டவர்களும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். ஷான் ரோல்டனின் இசை படத்திற்கு சிறப்பாக அமைந்திருந்தாலும் படத்தின் பாடல்கள் கவனம் ஈர்க்க தவறியுள்ளன. முன்னதாக ஜெய் பீம், குட் நைட் போன்ற வெற்றிப்படங்களை தொடர்ந்து தற்போது இந்தப் படத்தில் மணிகண்டன் நடித்துள்ளார். அவரது நடிப்பால் இந்த கேரக்டருக்கு அவர் சிறப்பாக மற்றும் இயல்பான நடிப்பால் உயிரூட்டியுள்ளார். மொத்தத்தில் காதலில் கண்டிஷன்களை காட்டிலும் நம்பிக்கைதான் முக்கியம் என்பதை இந்தப் படம் வலியுறுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X