ஜெய்பீம் படத்தில் கண்ணில் மிளகாய்பொடி தூவும் சீன் எப்படி எடுத்தோம் தெரியுமா? மணிகண்டன் பேட்டி!
சென்னை: ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, மணிகண்டன், லியோமோஸ் ஜோஸ், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியானத் திரைப்படம் ஜெய்பீம். இப்படத்தை சூர்யா நடித்ததோடு தனது 2டி எண்டெர்டெயிண்ட் நிறுவனம் மூலம் அவரே தயாரித்திருந்தார். இந்த படத்தில் நடித்த மணிகண்டன் கண்ணில் மிளகாய் தூள் காட்சி குறித்து பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
ஜெய்பீம் திரைப்படம் 2021ம் ஆண்டு நேரடியாக ஓடிடியில் வெளியான திரைப்படமாகும். இருளர் சமூகத்தினர் சந்தித்த ஒரு பிரச்சனையையும், அவர்களுக்காக வழக்கறிஞர் சந்துரு என்பவர் எப்படி போராடி நியாயம் பெற்று தந்தார் என்கிற உண்மை கதையை அடிப்படையாக வைத்து இத்திரைப்படம் எடுக்கப்பட்டது.

ஜெய் பீம்: கடலூர் மாவட்டம் கம்மாபுரம் கிராமத்தில் முதனை பகுதியில் வசித்தவர் தான் ராஜாக்கண்ணு என்கிற பழங்குடியினர். ராஜாக்கண்ணு நகை திருடிவிட்டார் என்று காவல்நிலையத்திற்கு அழைத்து செல்லும் போலீஸ், அவரை காவல்நிலையத்தில் கொடூரமாக அடித்து தாக்கிவிடுகிறார்கள். போலீசார் தாக்கியதில் ராஜாக்கண்ணு உயிரிழந்துவிடுகிறார். அடுத்த நாள் போலீஸ் வந்து ராஜாக்கண்ணு விசாரணையின் போது தப்பித்து விட்டார் என்று ராஜாகண்ணு மனைவியிடம் கூறினார்கள்.
கொடூரமான நிகழ்வு: இதையடுத்து, உடலை வேறு ஒரு இடத்தில் புதைத்து உண்மையை மறைத்துவிடுகிறார்கள். இதை அடுத்து ராஜாக்கண்ணு மனைவி நிறைமாத கர்ப்பணியாக இருக்கும் போது நீதி கேட்டு போராடுகிறாள். அவருக்கு சந்துரு என்ற வழக்கறிஞூர் உதவிசெய்து உண்மையை வெளிக்கொண்டு வருகிறார். ஜெய் பீம் படத்தில் ராஜாக்கண்ணுவாக மணிகண்டனும் அவரது மனைவியாக லியோமோஸ் ஜோஸ் நடித்திருந்தார். 28 வருடங்களுக்கு முன் நடந்த ஒரு கொடூர்மான நிகழ்வை தமிழகத்தில் பேசுபொருளாக்கிய ஜெய்பீம் படக்குழுவினருக்கு பலரும் நன்றி தெரிவித்தனர்.
கண்ணில் மிளகாய் பொடி: இந்த படத்தில் ராஜாக்கண்ணுவா நடித்த மணிகண்டனுக்கு பாராட்டுகள் குவித்தன. இந்த படத்திற்கு பிறகு குட் நைட், லவ்வர் என அடுத்தடுத்த படங்களில் நடித்து வரும் மணிகண்டன் ஜெய்பீம் படத்தில் வரும் கண்ணில் மிளகாய் பொடி தூவும் காட்சி குறித்து பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதில், போலீஸ் என்னை எட்டி மிதிப்பார்கள் அப்போது நான் விழுந்து இறந்துவிடுவேன். நான் இறந்துவிட்டேன் என்பதை கண்டுபிடிக்க கண்ணில் மிளகாய் பொடி தூவுவார்கள்.
மணிகண்டன் பேட்டி: அந்த காட்சிக்காக கண்ணை எரிச்சலூட்டி சிவப்பாக்கி கண்ணீர் வர வைக்க என்ன பயன்படுத்தலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தோம். கிளிசரின், சாக் பவுடர் எதை பயன்படுத்தலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தோம். அப்போது , கேமராமேன் எதுவும் செய்ய வேண்டாம் கண்ணை விரிப்பது போல மட்டும் காட்டுகள், ஷாட் எடுப்போம் மீதியை எடிட்டிங்கில் பார்த்துக் கொள்வார்கள் என்று கூலாக சொன்னால், அப்படிதான் அந்த காட்சியை எடுத்தோம். அந்த காட்சித்தான் படத்திற்கு மிகவும் பிளஸாக அமைந்தது என்று மணிகண்டன் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











