வடசென்னை 2 படத்தில் அந்த ஹீரோ நடிக்கிறாரா?.. அட செமயா இருக்குமே பாஸ்

சென்னை: இந்திய அளவில் முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் வெற்றிமாறன். அவரது இயக்கத்தில் கடைசியாக விடுதலை படத்தின் இரண்டாவது பாகம் வெளியானது. பெரிய எதிர்பார்ப்போடு படம் வெளியானாலும் சுமாரான வரவேற்பையே பெற்றது. அதேசமயம் படத்தின் மேக்கிங்கும், வசனங்களும் பெரிய வரவேற்பை பெற்றன. இப்போது அவர் வாடிவாசல் பட வேலைகளில் பிஸியாக ஆரம்பித்திருக்கிறார். இந்தச் சூழலில் வடசென்னை படத்தின் இரண்டாவது பாகம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.

பொல்லாதவன் படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் வெற்றிமாறன். பாலுமகேந்திராவிடம் பாடம் படித்த வெற்றிமாறன் தனது முதல் படமான பொல்லாதவன் படத்திலேயே தான் எப்படிப்பட்ட இயக்குநர் என்பதை நிரூபித்துவிட்டார். கமர்ஷியல் படமாக அது அமைந்தாலும் வடசென்னை குறித்தும், பைக் திருட்டு பற்றியும் டீட்டெயிலாகவே பேசியிருப்பார் வெற்றி. அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. முக்கியமாக தனுஷுக்கு இன்னொரு முகத்தை அறிமுகப்படுத்தியது அந்தப் படம்.

Actor Manikandan Will Act in Vadachennai 2 Movie

ஆடுகளம்: முதல் பட வெற்றிக்கு பிறகு இரண்டாவது படமாக ஆடுகளம் படத்தை இயக்கினார். இதிலும் தனுஷ் நடித்தார். ஆனால் சென்னையை கதைக்களமாக வைத்துக்கொள்ளாமல் மதுரையை தேர்ந்தெடுத்தனர். சேவல் சண்டை குறித்தும், அதனால் எழும் ஈகோ குறித்தும் நுட்பமாக பேசிய ஆடுகளம் படம் 5க்கும் மேற்பட்ட தேசிய விருதுகளை அள்ளியது. மேலும் வெற்றிமாறன் - தனுஷ் கூட்டணிக்கு என்று ரசிகர் கூட்டமும், எதிர்பார்ப்பும் பன்மடங்கு அதிகரித்தது.

ரசிகர்களை மெர்சலாக்கிய வடசென்னை: ஆடுகளம் படத்தைத் தொடர்ந்து விசாரணை படத்தை இயக்கிவிட்டு மீண்டும் தனுஷுடன் இணைந்தார் வெற்றிமாறன். படத்துக்கு வடசென்னை என பெயர் வைக்கப்பட்டது. முதலில் அந்தக் கதை சிம்புவுக்குத்தான் சொல்லப்பட்டது. ஆனால் சில காரணங்களால் படத்தில் அவர் நடிக்காமல் போக உள்ளே வந்தார் தனுஷ். அமீர், சமுத்திரகனி, ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ் என பலர் நடித்திருந்த அந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். படம் அதிரிபுதிரி ஹிட்டடித்தது.

விமர்சனத்தை சந்தித்த வடசென்னை: படத்தில் ஏகப்பட்ட கூஸ்பம்ப்ஸ் சீன்கள் இருந்ததாக ரசிகர்கள் சிலாகித்தனர். அதேசமயம் வடசென்னை மக்கள் குறித்து வெற்றிமாறன் தவறாக சித்தரித்துவிட்டதாக ஒரு சிலர் விமர்சனத்தையும் முன் வைத்தனர். இருப்பினும் பெரும்பாலானோரால் படம் கொண்டாடவேப்பட்டது. மேலும் வடசென்னை படத்தை முடிக்கும்போது அன்புவின் எழுச்சி விரைவில் என வடசென்னை 2க்கு லீடையும் கொடுத்திருந்தார் வெற்றிமாறன்.

Actor Manikandan Will Act in Vadachennai 2 Movie

வடசென்னை 2 எப்போது?: இதனால் வடசென்னை 2 படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எக்கச்சக்கமாக இருக்கிறது. ஆனால் அதுகுறித்த எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெற்றிமாறன் வெளியிடவில்லை. ஒரு மேடையில் தனுஷேகூட வடசென்னை 2 எப்போது என கேட்க அதற்கும் தெளிவான பதிலை சொல்லவில்லை வெற்றிமாறன். இருப்பினும் வடசென்னை 2 படத்தை எடுக்க வேண்டும் என ரசிகர்கள் தொடர்ந்து வலியுறுத்திவருகின்றனர். இதற்கிடையே விடுதலை, விடுதலை 2 ஆகிய இரண்டு படங்களை இயக்கிய வெற்றி இப்போது வாடிவாசல் பட வேலைகளில் பிஸியாகியிருக்கிறார்.

வடசென்னை 2வில் அந்த ஹீரோ?: வெற்றிமாறன் எத்தனை படங்களை இயக்கினாலும் வடசென்னை 2 படத்தின் மீது ரசிகர்கள் உச்சக்கட்ட ஆவலை வைத்திருக்கிறார்கள். கண்டிப்பாக அவர் எடுத்துவிட வேண்டும் என்று வேண்டிகொண்டிருக்கின்றனர் ரசிகர்கள். இந்நிலையில் அந்தப் படம் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி குட் நைட், லவ்வர், குடும்பஸ்தன் என வரிசையாக ஹிட் கொடுத்திருக்கும் ஹீரோ மணிகண்டன் முக்கியமான ரோலில் வடசென்னை 2வில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X