கமல் ஹாசனை கண்டு பயம் எல்லாம் இல்லை.. வெள்ளி விழா நாயகன் மோகன் கொடுத்த தக் ரிப்ளை

சென்னை: மோகன் ஹீரோவாக நடித்திருக்கும் ஹரா படம் சில நாட்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியானது. படத்தை பார்த்த ரசிகர்கள் தங்களது கலவையான விமர்சனங்களையே கொடுத்தனர். அடுத்ததாக விஜய்யுடன் அவர் நடித்திருக்கும் GOAT படம் வெளியாகவிருக்கிறது. இதில் அவருக்கு முக்கியமான ரோல் என்று கூறப்படுகிறது. இந்தச் சூழலில் கமல் ஹாசன் குறித்து மோகன் பேசியிருக்கும் விஷயம் சமூக வலைதளங்களில் பயங்கரமாக ட்ரெண்டாகியிருக்கிறது.


ரஜினிகாந்த், கமல் ஹாசன் ஆகியோர் கோலோச்சியிருந்த காலம் அது. அப்போது பாலுமகேந்திரா கோகிலா என்ற படத்தை இயக்கினார். அந்தப் படத்தில்தான் மோகன் முதன்முறையாக சினிமாவில் அறிமுகமானார். அதில் கமல் ஹாசன், ஷோபா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். படம் மெகா ஹிட்டானது. அதுமட்டுமின்றி மோகனுக்கும் நல்லதொரு அடையாளத்தை பெற்றுக்கொடுத்தது. அந்தப் படத்துக்கு பிறகு மலையாளத்தில் அறிமுகமான அவர்; பின்னர் மூடுபனி படத்தின் மூலம் தமிழில் இண்ட்ரோ ஆனார்.

Mohan Kamal haasan Haraa

பிஸி நடிகர்: மூடுபனி படமும் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. மோகனுக்கும் சிறந்த அடையாளத்தை தந்தது. இதன் காரணமாக முதல் படத்திலேயே கவனம் ஈர்த்த ஹீரோவானார் மோகன். அதனைத் தொடர்ந்து தமிழில் அவர், நெஞ்சத்தை கிள்ளாதே, கிளிஞ்சல்கள், பயணங்கள் முடிவதில்லை, காற்றுக்கென்ன வேலி, லாட்டரி டிக்கெட், கோபுரங்கள் சாய்வதில்லை என்று வரிசையாக படங்களில் நடித்தார். இதனால் அவர் பிஸியான நடிகராகவும் வலம் வர ஆரம்பித்தார்.

முன்னணியில் மோகன்: தொடர்ந்து அவர் நடித்த படங்கள் ஒன்று சூப்பர் ஹிட்டாகின அல்லது சுமார் ஹிட்டாகின. பிறகு லெஜெண்ட் இயக்குநர்களின் பார்வை மோகன் மீது திரும்பியது. தொடர்ந்து பாலுமகேந்திரா இயக்கத்தில் ரெட்டை வால் குருவி, மணிரத்னம் இயக்கத்தில் மௌன ராகம், மணிவண்ணன் இயக்கத்தில் நூறாவது நாள், ஆர்.சுந்தரராஜன் இயக்கத்தில் மெல்ல திறந்தது கதவு என்று அவர் நடித்ததெல்லாம் ஹிட்டாகின. குறிப்பாக நல்ல நடிகர் என்ற பெயரையும் பெற்றார்.

சினிமாவிலிருந்து விலகல்: இப்படி அவரது கரியர் பீக்கில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென அவருக்கு சறுக்கல் ஏற்பட்டு; ஆள் காணாமல் போனார். பல வருடங்கள் கழித்து இப்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அந்தவகையில் விஜய் நடிக்கும் GOAT படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கும் அவர்; ஹரா என்ற படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். படம் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்தச் சூழலில் கமல் ஹாசன் குறித்து மோகன் பேசியிருக்கும் விஷயம் ட்ரெண்டாகியுள்ளது.

மோகன் பேட்டி: அதாவது ஒரு தனியார் யூட்யூப் சேனலுக்காக நடிகை சுஹாசினி மோகனிடம் பேட்டி எடுத்தார். அப்போது மோகனிடம் சுஹாசினி, 'கமல் ஹாசன் வந்தால் மட்டும் நீங்கள் எழுந்து போய்விடுவீர்கள். ஏன் கமல் ஹாசன் மீது பயமா? என்று கேள்வி கேட்டார். அதற்கு பதிலளித்த மோகன், 'அய்யோ கமல் ஹாசன் மீது எனக்கு என்ன பயம். அவர் மீது மரியாதைதான் இருக்கிறது. அவர் எவ்வளவு பெரிய நடிகர். நான் உங்களுடன் ஜாலியாக உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கலாம்; அரட்டை அடிக்கலாம். ஆனால் கமலுடனோ இல்லை அவர் இருக்கும்போதோ அப்படி முடியாது. அதனால்தான் அப்படி செய்கிறேன். அவர் மீது எனக்கு அளவு கடந்த மரியாதை இருக்கிறது” என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X