என்ன வாத்தியாரே சைக்கிள்ள போலாமா.. பாக்ஸர் லுக்கில் மோகன் லால்.. வைரலாகும் போட்டோ!

சென்னை: நடிகர் மோகன் லால் பாக்ஸர் லுக்கில் இருக்கும் போட்டோ இணையத்தை தெறிக்கவிட்டு வருகிறது.

மலையாள சூப்பர் ஸ்டார் நடிகரான மோகன் லால் இளம் நடிகர்கள் பலரும் பொறாமைப்படும் அளவுக்கு கைவசம் அதிக படங்களை வைத்துள்ளார்.

சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ள நடிகர் மோகன் லால் அவ்வப்போது தனது போட்டோக்களையும் வீடியோக்களையும் ஷேர் செய்து வருகிறார்.

பாக்ஸர் லுக்கில் மோகன் லால்

பாக்ஸர் லுக்கில் மோகன் லால்

அந்த வகையில் தற்போது நடிகர் மோகன் லால் ஷேர் செய்துள்ள போட்டோ ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. அதாவது நடிகர் மோகன் லால் கையில் பாக்ஸிங் க்ளவுஸ்களை அணிந்து பாக்ஸர் லுக்கில் உள்ளார்.

பாக்ஸிங் சாம்பியன் கதாப்பாத்திரம்

பாக்ஸிங் சாம்பியன் கதாப்பாத்திரம்

மோகன் லால் தேசிய விருது வென்ற இயக்குநர் பிரியதர்ஷனின் ஸ்போர்ட்ஸ் டிராமா படம் ஒன்றில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தில் ஓய்வு பெற்ற பாக்ஸிங் சாம்பியன் கதாப்பாத்திரத்தில் மோகன் லால் நடிக்கவுள்ளதாக தெரிகிறது.

ஜிம்முக்கு செல்லும் மோகன் லால்

ஜிம்முக்கு செல்லும் மோகன் லால்

இதற்காக உடலை கட்டுக்கோப்புடன் வைத்துக் கொள்ள ஜிம்முக்கு சென்று வருகிறார் நடிகர் மோகன் லால். இதனால் பெருமளவு எடையையும் குறைத்துள்ளார். இந்த பாக்ஸிங் படத்திற்காகதான் மோகன் லால் ஃபிட்னஸுக்காக ஜிம்முக்கு சென்று எடையை குறைத்துள்ளதாக கூறப்படுகிறது.

குத்துச்சண்டை வீரருடன் பயிற்சி

குத்துச்சண்டை வீரருடன் பயிற்சி

61 வயதான சூப்பர் ஸ்டார் நடிகர் முன்னதாக பிரபல கேரள குத்துச்சண்டை வீரர் பிரேம்நாத்துடன் குத்துச்சண்டை பயிற்சி எடுத்த வீடியோவை தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்திருந்தார். பன்முக உடற்பயிற்சிக்காக நடிகர் மோகன் லால் தனது ஷெட்யூலில் இருந்து 2 மணி நேரம் செலவழித்து வருகிறார்.

ஜீத்து ஜோசப்பின் 12th man

ஜீத்து ஜோசப்பின் 12th man

இதில் பாரம்பரிய உடற்கட்டமைப்பு, அதிக தீவிரம் இடைவெளி பயிற்சி, குத்துச்சண்டை மற்றும் யோகா ஆகியவை அடங்கும். இதனிடையே மோகன் லால் தற்போது ஜீத்து ஜோசப்பின் 12th man படத்தில் இணைந்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

அக்டோபர் மாதம் திரைக்கு வருகிறது

அக்டோபர் மாதம் திரைக்கு வருகிறது

சமீபத்தில் தான் பிரித்விராஜ் இயக்கத்தில் புரோ டாடி படத்தில் நடித்து முடித்தார். ஏற்கனவே பிரித்விராஜ் இயக்கத்தில் லூசிஃபர் படத்தில் நடித்துள்ளார் மோகன் லால். இதனிடையே ஷாஜி கைலாஸ் இயக்கத்தில் மோகன் லால் நடித்துள்ள படம் வரும் அக்டோபர் மாதம் திரைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X