உங்க பேர வச்சு கிண்டல் பண்றாங்க... கண்ணீர் விட்ட 80 வயது ரசிகை.. சர்ப்ரைஸ் கொடுத்த மோகன் லால்!
திருவனந்தபுரம்: தன்னைப் பற்றி பேசி கண்ணீர்விட்ட 80 வயது மூதாட்டிக்கு நடிகர் மோகன் லால் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
மலையாள சினிமாவின் பிரபல நடிகர்களில் ஒருவர் மோகன் லால். மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர் என அழைக்கப்படும் மோகன் லால் இதுவரை 350க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
மலையாளம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழி படங்களிலும் நடித்து வருகிறார். மலையாள சினிமா ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற மொழியிலும் ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ளார் நடிகர் மோகன் லால்.

படங்களில் பிஸியான மோகன் லால்
61 வயதான நடிகர் மோகன் லால், மரக்கார்: அரபிக்கடலிண்டே சிம்ஹம், ஆராட்டு, ராம், பரோஸ்: கார்டியன் ஆஃப் டிகாமாஸ் ட்ரெஷர், 12th man, புரோ டாடி, உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். மேலும் பிரியதர்ஷன் இயக்கும் விளையாட்டு சம்பந்தப்பட்ட படம் ஒன்றிலும் நடிக்கிறார் மோகன் லால்.

ஓய்வு பெற்ற குத்துச்சண்டை வீரர்
அந்தப் படத்தில் ஓய்வு பெற்ற குத்துச்சண்டை வீரராக நடிக்கிறார் மோகன் லால். இதற்காக பிரத்யேக பயிற்சி மேற்கொண்டு வருகிறார். தான் பாக்ஸர் லுக்கில் இருக்கும் போட்டோவை அண்மையில் தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்தார் நடிகர் மோகன் லால்.

பிரித்விராஜுக்கு பரிசு
நடிகர் மோகன் லால் சினிமாத்துறை சார்ந்தவர்கள் மட்டுமின்றி தனது ரசிகர்களிடமும் அன்பாக பழக கூடியவர். சமீபத்தில் நடிகரும் இயக்குநருமான பிரித்விராஜுக்கு ஒன்றரை லட்சம் ரூபாய்க்கு சன் கிளாஸ் ஒன்றை பரிசளித்து அவரை திக்குமுக்காட வைத்தார்.

கண்ணீர் விட்ட மூதாட்டி
இந்நிலையில் தனது தீவிர ரசிகையான 80 வயது மூதாட்டி ஒருவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து நெகிழ வைத்துள்ளார் மோகன் லால். அதாவது கேரளாவின் புன்குன்னம் என்கிற பகுதியில் உள்ள முதியோர் இல்லத்தில் இருப்பவர் 80 வயது மூதாட்டி ருக்மணி. மோகன்லாலின் தீவிர ரசிகையான இவர், அழுதபடி பேசிய வீடியோ சமீபத்தில் வைரலானது.

வீடியோ கால் செய்த ருக்மணி
அதில், மோகன்லால் பெயரை வைத்து தன்னைப் பலரும் கிண்டல் செய்வதாகவும், அவரை சந்திக்க முடியவில்லை என்றும் கண்ணீர் விட்டிருந்தார் ருக்மணி. இந்நிலையில் அந்த வீடியோ மோகன் லாலின் கவனத்திற்கு சென்றுள்ளது. இதனை அறிந்த மோகன் லால் ருக்மணியை வீடியோ காலில் அழைத்துப் பேசி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
Recommended Video

கொரோனா முடிந்ததும் சந்திக்கிறேன்
அப்போது உங்களை சந்திக்க வேண்டும் என்று மோகன் லாலிடம் தனது ஆசையை வெளிப்படுத்தினார் ருக்மணி. அதற்கு தற்போது கொரோனா அச்சுறுத்தல் உள்ளதாகவும், கொரோனா அச்சுறுத்தல் முடிந்த பிறகு, நேரில் வந்து சந்திப்பதாகவும் நடிகர் மோகன்லால் உறுதி அளித்துள்ளார். 80 வயது ரசிகையிடம் நடிகர் மோகன் லால் போனில் தொடர்பு கொண்டு பேசிய தவகல் தீயாய் பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications











