ஒட்டுமொத்த படத்தையும் 18நாளில் முடித்த மோகன்லால்... வியந்து பார்த்த திரையுலகம் !
கேரளா : நடிகர் மோகன்லால் அலோன் என்ற படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் வெறும் 18 நாளில் முடிந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இப்படத்தின் படிப்பிடிப்பு செப்டம்பர் 27ந் தேதி பூஜையுடன் தொடங்கிய நிலையில் அக்டோபர் 22ந் தேதியுடன் படத்தின் ஒட்டுமொத்த படபிடிப்பும் முடிந்துள்ளது.
அலோன் படத்தை இயக்குனர் ஷாஜி கைலாஷ் இயக்கி உள்ளார்.

மோகன்லால்
மலையாள சினிமாவில் இன்று வரை உச்ச நட்சத்திரங்களில் ஒருவராகத் திகழ்கிறார் மோகன்லால். இவர், மரைக்காயர், அரபிக்கடலின் சிம்ஹம், ப்ரோ டாடி, 12Th மேன், ஆராட்டி என ஏராளமான திரைப்படங்களை கையில் வைத்துக்கொண்டு பிஸியாக நடித்து வருகிறார்.

வெறும் 18 நாளில்
இந்நிலையில், அலோன் திரைப்படத்தின் ஒட்டுமொத்த படத்தின் படப்பிடிப்பையும் வெறும் 18 நாளில் எடுத்து முடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த தகவல்கள் ஒட்டுமொத்த திரையுலகை ஆச்சரியத்தில் உள்ளது. ஆசிர்வாத் சினிமாஸ் தயாரித்து வரும் இப்படத்தின் கதையை ராஜேஷ் ஜெயராம் எழுதியுள்ளார். ஒளிப்பதிவாளராக அபிநந்தன் ராமானுஜமும், இசையமைப்பாளராக ஜேக்ஸ் பிஜாயும், எடிட்டராக டான் மேக்ஸ் ஆகியோரும் இப்படத்தில் பணிபுரிந்துள்ளனர்.

ஓடிடி உரிமை
மேலும், மோகன்லாலில் நடிப்பில் உருவாகியுள்ள மரைக்காயர் படத்தின் ஓடிடி உரிமையை அமெசான் நிறுவனம் பெற்றுள்ளது. இப்படத்தை முன்னணி இயக்குநர் ப்ரியதர்ஷன் இயக்கியுள்ளார். கீர்த்தி சுரேஷ், பிரபு, அர்ஜுன், மஞ்சு வாரியர், அசோக் செல்வன், சுஹாசினி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படம் குன்ஹாலி மரைக்காயரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.

தேசிய விருதை வென்றது
ஒளிப்பதிவாளராகவும், சாபுசிரில் கலை இயக்குனராகவும் பணியாற்றியுள்ள இந்த படம் முழுக்க முழுக்க ஐதராபாத்தில் உள்ள ராமோஜீ பிலிம் சிட்டியில் அமைக்கப்பட்ட பிரமாண்ட செட்டில் தான் படமாக்கப்பட்டது. இப்படத்தின் ட்ரைலர் கடந்த ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்றது. சிறந்த படம், சிறந்த ஆடை வடிவமைப்பு, சிறந்த கிராஃபிக்ஸ் உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் தேசிய விருதுகளை மரக்காயர் படம் குவிந்தது.


Click it and Unblock the Notifications











