மரக்கார் படத்தில் மகனின் கேரக்டரை வெளிப்படுத்திய மோகன்லால்
திருவனந்தபுரம் : நடிகர் மோகன்லால் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் மரக்கார்.
இந்தப் படம் டிசம்பர் 2ம் தேதி உலகளவில் பிரம்மாண்டமான அளவில் திரையரங்குகளில் திரையிடப்பட உள்ளது.
படத்தில் மோகன்லாலின் மகன் ப்ரணவ் மோகன்லாலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

நடிகர் மோகன்லால்
நடிகர் மோகன்லால், மஞ்சு வாரியர், கீர்த்தி சுரேஷ், சுனில் ஷெட்டி, பிரபு, அர்ஜூன், ப்ரணவ் மோகன்லால் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் மரக்கார். இந்தப் படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழிகளில் ரிலீசாக உள்ளது.

பிரியதர்ஷன் இயக்கம்
பிரியதர்ஷன் இயக்கத்தில் மலையாளத்தில் பிரம்மாண்டமான வகையில் உருவாகியுள்ள இந்தப் படம் மிகுந்த பொருட்செலவிலும் உருவாகியுள்ளது. வரும் டிசம்பர் 2ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. நீண்ட நாட்களாக ரிலீசுக்காக காத்திருந்த இந்தப் படம் முன்னதாக ஓடிடியில் ரிலீசாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

சூட்டிங் வீடியோ வெளியீடு
இந்தப் படத்தின் ப்ரமோஷன் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. நேற்றைய தினம் படத்தின் சூட்டிங்கின்போது எடுக்கப்ப்டட காட்சிகள் வெளியிடப்பட்டன. இதில் படப்பிடிப்பின்போது நடிகர் விஜய் சேதுபதியின் விசிட்டும் இடம் பெற்றிருந்தது. அவர் மோகன்லாலுடன் நட்பு பாராட்டியதும் இருந்தது.

கீர்த்தி சுரேஷ் போஸ்டர்
தொடர்ந்து ப்ரமோஷன் பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது சில தினங்களுக்கு முன்பு படத்தின் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ள கீர்த்தி சுரேஷின் போஸ்டரை மோகன்லால் வெளியிட்டிருந்தார். வீணை வாசித்தபடி கேரளாவின் பாரம்பரிய உடையில் கீர்த்தி அந்த போஸ்டரில் காணப்பட்டார்.

ப்ரணவ் மோகன்லால் கேரக்டர்
படத்தில் மோகன்லாலின் மகன் ப்ரணவ் மோகன்லாலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாகியுள்ளார் கல்யாணி பிரியதர்ஷன். இந்நிலையில் இன்றைய தினம் இவர்கள் இருவரும் இணைந்துள்ள போஸ்டரை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் மோகன்லால்.

குஞ்சாலி கேரக்டர்
மேலும் படத்தில் பிரணவ் மோகன்லால் குஞ்சாலி என்ற கேரக்டரிலும் கல்யாணி பிரியதர்ஷன் ஆயிஷா என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளதையும் குறிப்பிட்டுள்ள மோகன்லால், டிசம்பர் 2ம் தேதி இந்த வரலாற்றுப் படம் திரையரங்குகளில் காணக் கிடைக்கும் என்பதையும் வெளிப்படுத்தியுள்ளார்.
Recommended Video

போஸ்டர் வெளியீடு
இதே போல ப்ரணவ் மோகன் லால் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் இருவரும் இதே போஸ்டரை வெளியிட்டு மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். மலையாளத்தில் மிகுந்த பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள முதல் படமாக மரக்கார் காணப்படுகிறது. இதேபோல இந்தப் படத்தின் பிரம்மாண்டம் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள சூட்டிங் வீடியோ மூலம் தெரியவருகிறது.


Click it and Unblock the Notifications











