5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் புலிமுருகன் டீம்... மோகன்லால் மகிழ்ச்சி!
திருவனந்தபுரம் : மோகன்லால், கமலினி முகர்ஜி உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த 2016ல் வெளியான படம் புலிமுருகன்.
மிகுந்த பொருட்செலவில் உருவான இந்தப் படம் அதிக வசூலையும் பெற்று சாதனை படைத்தது.
இந்நிலையில் வைஷாக் -மோகன்லால் டீம் மீண்டும் மான்ஸ்டர் என்ற படத்தின்மூலம் இணைந்துள்ளது.

நடிகர் மோகன்லால்
மலையாளத்தில் நடிகர் மோகன்லால் நடிப்பில் வைஷாக் இயக்கத்தில் கடந்த 2016 அக்டோபர் மாதத்தில் வெளியானது புலிமுருகன் படம். தமிழிலும் அதே பெயரில் டப்பிங் செய்யப்பட்டு வெளியான இந்தப் படம் கோலிவுட்டிலும் சிறப்பான வரவேற்பை பெற்றது.

புலிமுருகன் படம்
மிகுதியான பொருட்செலவில் உருவான இந்தப் படம் அதேபோன்று அதிக வசூலையும் வாரிக் குவித்தது. மல்லுவுட்டில் அதிக வசூலை பெற்ற படம் என்ற பெருமையையும் பெற்றது. படத்தில் கமலினி முகர்ஜி, ஜெகபதிபாபு, நமீதா உள்ளிட்டவர்கள் சிறப்பான கேரக்டர்களில் நடித்திருந்தனர்.

மான்ஸ்டர் படம்
இந்நிலையில் புலிமுருகன் டீம் மீண்டும் ஒரு படத்தில் இணைந்துள்ளது. இந்தப் படத்திற்கு மான்ஸ்டர் என்று பெயரிடப்பட்டுள்ளது. வைஷாக் இயக்கத்தில் மோகன்லால் இந்தப் படத்தின்மூலம் மீண்டும் இணைந்துள்ளார். படத்திற்கு உதய்கிருஷ்ணா கதை எழுதியுள்ளார்.

பர்ஸ்ட் லுக் போஸ்டர்
இந்நிலையில் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்றைய தினம் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். சதீஷ் குருப் ஒளிப்பதிவை மேற்கொள்ள, தீபக் தேவ் இசையமைப்பை மேற்கொள்ளவுள்ளார். ஆசிர்வாத் சினிமாஸ் இந்தப் படத்தை தயாரிக்கவுள்ளனர். இந்தப் படத்தின் சூட்டிங் நேற்றைய தினம் துவங்கியுள்ளது.
Recommended Video

ஓடிடியில் வெளியீடு
இந்தப் படத்தின் சூட்டிங்கை ஒரேகட்டமாக எடுத்து முடித்து நேரடியாக ஓடிடியில் வெளியிடவும் படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து மோகன்லால் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அப்டேட் தெரிவித்துள்ளார். இதனுடன் வெளியிடப்பட்டுள்ள பர்ஸ்ட் லுக் போஸ்டரில் அவர் சிங் வேடத்தில் காணப்படுகிறார்.

அடுத்தடுத்த படங்கள்
மேலும் லக்கி சிங்காக அவர் மாறியுள்ளதையும் இந்த போஸ்டர் மூலம் அறிய முடிகிறது. மோகன்லாலின் அடுத்தடுத்த படங்கள் ஓடிடியில் ரிலீசாக உள்ளன. இதில் வரலாற்றுப் பின்புலத்தில் எடுககப்பட்டுள்ள மரக்கார் படமும் ஒன்று. இந்நிலையில் இந்தப் படமும் ஓடிடி ரிலீசுக்காக தயாராக உள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











