தமிழ் படங்களில் நடிப்பதை தவிர்க்கும் நானி.. காரணம் என்னன்னு அவரே சொல்லியிருக்காரு!
ஐதராபாத் : தமிழில் வெப்பம் படம் மூலம் என்ட்ரி கொடுத்தவர் நடிகர் நானி. தொடர்ந்து நானி, ஆஹா கல்யாணம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
Recommended Video
இந்தப் படங்களின் மூலம் இவருக்கு தமிழிலும் ஏராளமான ரசிகர்கள் உருவாகிய நிலையில் தொடர்ந்து தமிழில் ஒரு வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் தொடர்ந்து இவரை தமிழ் படங்களில் பார்க்க முடியவில்லை. தெலுங்கில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.

நடிகர் நானி
நடிகர் நானி வெப்பம் படத்தில் தமிழில் என்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து சமந்தாவுடன் இணைந்து நானி, வாணி கபூருடன் இணைந்து ஆஹா கல்யாணம் போன்ற படங்களிலும் இவரை தமிழில் பார்க்க முடிந்தது. இந்தப் படங்களின்மூலம் ஏராளமான தமிழ் ரசிகர்கள் இவருக்கு கிடைத்தனர். இவரது அழகான அடுத்த வீட்டு பையன் லுக், இவருக்கு தமிழில் அதிக ரசிகர்களை பெற்றுத் தந்தது.

அன்டே சுந்தரானிகி படம்
இதையடுத்து தொடர்ந்து தமிழில் அதிகமான படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவ்வாறு இல்லாமல் தெலுங்கில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார் நானி. தற்போது நஸ்ரியாவுடன் இணைந்து விவேக் ஆத்ரேயா இயக்கத்தில் அன்டே சுந்தரானிகி என்ற படத்தில் நடித்துள்ளார்.

அடடே சுந்தரா படம்
இந்தப்படம் தற்போது அடடே சுந்தரா என்ற பெயரில் தமிழில் வெளியாகவுள்ளது. படம் 10ம் தேதி வெளியாகவுள்ளது. முன்னதாக படத்தின் ட்ரெயிலர், பாடல்கள், போஸ்டர்கள் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. முன்னதாக நானி நடிப்பில் ஷாம் சிங்கா ராய் என்ற படம் வெளியாகி சிறப்பான விமர்சனங்களை பெற்றது.

காதல் + காமெடி படம்
இந்தப் படத்தில் அவருக்கு சாய் பல்லவி மற்றும் க்ரீத்தி ஷெட்டி ஆகியோர் ஜோடியாகியிருந்தனர். இந்நிலையில் தற்போது வெளியாகவுள்ள அடடே சுந்தரா படம் காதல் கலந்த காமெடி படமாக வெளியாகவுள்ளது. ஷாம் சிங்கா ராய் போன்ற ஆக்ஷன் படத்தில் நடித்துவிட்டு முற்றிலும் மாறுபட்ட இந்தப் படத்தில் நடிப்பது மகிழ்ச்சியாக உள்ளதாக நானி தெரிவித்துள்ளார்.

தமிழ் பேச திணறல்
இந்நிலையில், முன்னதாக சில படங்களில் தமிழில் நடித்திருந்தாலும் தன்னால் தமிழ் படங்களில் தொடர்ந்து கமிட்டாக முடியவில்லை என்று நானி தெரிவித்துள்ளார். தமிழ் தனக்கு சரளமாக பேச வரவில்லை என்றும் தப்பாக பேசிவிடுவோமோ என்ற பயம் இருப்பதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

தமிழில் நடிக்க ஆர்வம்
முதலில் தமிழில் தெளிவாக பேச கற்றுக் கொண்டு தொடர்ந்து தமிழ்ப் படங்களில் நடிக்க ஆர்வத்துடன் காத்திருப்பதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார். விரைவில் தமிழ் படங்களில் நானி தொடர்ந்து நடிப்பார் என்று எதிர்பார்க்கலாம். நானி, ஆஹா கல்யாணம் போன்றே தற்போது வெளியாகவுள்ள அடடே சுந்தரா படத்திலும் கலகலப்பான நானியை பார்க்க ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











