இந்த செய்தியால் மிகுந்த வேதனை அடைகிறேன்.. விவாகரத்து குறித்து முதல் முறையாக மனம் திறந்த நாக சைதன்யா!

ஹைத்ராபாத்: விவாகரத்து குறித்து தகவல் பரவி வரும் நிலையில் அதுகுறித்து முதல் முறையாக மனம் திறந்து பேசியுள்ளார் நடிகை சமந்தாவின் கணவரான நடிகர் நாக சைதன்யா.

Recommended Video

Chaitanya First statement on His divorce | Samantha Naga Chaitanya Divoce | Love Story

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் நாக சைதன்யா. இதேபோல் தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் டாப் நடிகையாக வலம் வருபவர் சமந்தா.

இவர்கள் இருவரும் பல ஆண்டு காதலுக்கு பிறகு கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். சினிமா இண்டஸ்ட்ரியில் ரொமான்டிக் தம்பதிகளாக சமந்தா - நாக சைதன்யா தம்பதியினர் வலம் வருகின்றனர்.

அதிக ஃபாலோயர்ஸ்

அதிக ஃபாலோயர்ஸ்

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இருவரும் அவ்வப்போது தங்களின் ரொமான்டிக் போட்டோக்களை வெளியிட்டு வருகின்றனர். படங்களை தாண்டி இந்த ஜோடிக்கு என பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது. சமூக வலைதளங்களில் இருவரையும் அதிகம் ஃபாலோ செய்து வரும் ரசிகர்கள் இவர்கள் என்ன பதிவு போட்டாலும் அதனை வைரலாக்கி வருகின்றனர்.

ரூ. 50 கோடி ஜீவனாம்சம்?

ரூ. 50 கோடி ஜீவனாம்சம்?

இந்நிலையில் கடந்த சில நாட்களாக இருவரும் விரைவில் விவாகரத்து செய்துகொள்ள போவதாக தகவல் வெளியாகி வருகிறது. விவாகரத்தின் போது நாக சைதன்யாவின் குடும்பத்தினர் ஜீவனாம்சமாக நடிகை சமந்தாவுக்கு 50 கோடி ரூபாய் கொடுக்கவுள்ளதாகவும் தகவல் பரவியது.

சமந்தா மீது கோபம்

சமந்தா மீது கோபம்

மேலும் நடிகை சமந்தா, திருமணத்திற்கு பிறகும் சினிமாவில் தொடர்ந்து நடிப்பது மாமனார் நாகார்ஜூனாவுக்கு பிடிக்கவில்லை என்றும் சமந்தா சினிமாவில் இருந்து விலக வேண்டும் என்று நாகார்ஜூனா விரும்பியதாகவும் கூறப்படுகிறது. அதோடு திருமணத்திற்கு பிறகு சில வெப் சீரிஸ்களில் நடிகை சமந்தா படுக்கையறை காட்சிகளில் நடித்ததும் குடும்பத்தினரை கோபப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

அறிவு இருக்கா?

அறிவு இருக்கா?

இந்நிலையில் சமூக வலைதளங்களில் தனது பெயருக்கு பின்னால் இருந்த குடும்பப் பெயரான அக்கினேனியை நீக்கிய சமந்தா வெறும் எஸ் என்று மட்டும் வைத்திருந்தார். இதனால் குடும்பத்தில் ஏதோ பிரச்சனை என்று யூகித்த ரசிகர்கள் அது குறித்து கேள்வி எழுப்பி வந்தனர். அண்மையில் திருப்பதி கோவிலில் விவகாரத்து குறித்து கேள்வி எழுப்பிய பத்திரிக்கையாளரை அறிவு இருக்கா என கேட்டு விளாசினார் சமந்தா.

மவுனம் கலைத்த நாக சைதன்யா

மவுனம் கலைத்த நாக சைதன்யா

இந்நிலையில் விவாகரத்து குறித்து கடந்த சில மாதங்களாக தகவல் பரவி வரும் நிலையில் நடிகரும் சமந்தாவின் கணவருமான நாக சைதன்யா தற்போது மவுனம் கலைத்துள்ளார். இதுதொடர்பாக ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் பேசியிருப்பதாவது, "நான் சிறுவயதில் இருந்தே சினிமா வாழ்க்கை வேறு, தனிப்பட்ட வாழ்க்கை வேறு என்பதை பார்த்து வளர்த்தவன்.

மிகுந்த வேதனையாக இருக்கிறது

மிகுந்த வேதனையாக இருக்கிறது

இந்த பழக்கம் என்னுடைய அப்பா அம்மாவிடம் இருந்து எனக்கு வந்தது. அவர்கள் இருவரும் படப்பிடிப்பு முடிந்து வீட்டுக்கு வந்த பின்னர், சினிமா பற்றி எதுவும் பேச மாட்டார்கள். அதையே நானும் கடைபிடித்து வருகிறேன்.

சமந்தாவுடனான விவாகரத்து என்ற செய்தி பரவி வருவது, எனக்கு மிகுந்த வேதனையாக இருக்கிறது.

பழைய செய்திகள் மறந்துவிடும்

பழைய செய்திகள் மறந்துவிடும்

இன்றைய காலகட்டத்தில் ஒரு செய்தியை மறக்கடிக்க இன்னொரு செய்தி உடனே வந்து விடுகிறது. இன்று ஒரு செய்தி பரபரப்பாக பேசப்பட்டால், நாளை இன்னொரு செய்தி மிகவும் பரபரப்பாக பேசப்படும், பழைய செய்திகள் மறந்து விடுகின்றன. இதனை நான் புரிந்து கொண்டதால் இதுபோன்ற செய்திகள் குறித்து கவலைப்படுவதில்லை. இவ்வாறு நாக சைதன்யா தெரிவித்துள்ளார்.

வதந்தியாகவே இருக்கட்டும்

வதந்தியாகவே இருக்கட்டும்

நாக சைதன்யாவின் இந்த தெளிவான பதிலை பார்த்த ரசிகர்கள், அப்போ விவாகரத்து என பரவி வரும் தகவல் வெறும் வதந்திதானா என கேட்டு வருகின்றனர். மேலும் விவாகரத்து செய்தி வெறும் வதந்தியாகவே இருந்துவிட்டால் மகிழ்ச்சி தான் என்றும் ரசிகர்கள் தங்களின் கருத்தை பதிவிட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X