1000 ஏக்கர் காடுகளை தத்தெடுத்த நடிகர் நாகார்ஜுனா... பிக்பாஸ் தெலுங்கு சீசன் 5 மேடையில் அறிவிப்பு!
ஹைதராபாத் : நடிகர் நாகார்ஜுனா தெலுங்கு பட உலகின் சிறப்பான ஹீரோவாக தொடர்ந்து நடித்து வருகிறார்.
அவர் தற்போது 1000 ஏக்கர் காடுகளை தத்தெடுத்து அதை சிறப்பான வகையில் மேம்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளார்.
பிக்பாஸ் தெலுங்கு சீசன் 5 மேடையில் தோன்றிய அவர் இதனை அறிவித்துள்ளார்.

நடிகர் நாகார்ஜுனா
நடிகர் நாகார்ஜுனா தொடர்ந்து தெலுங்கு பட உலகின் சூப்பர் ஸ்டாராக இருந்து வருகிறார். இவரது பல்வேறு படங்கள் சிறப்பான வகையில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டுள்ளன. தொடர்ந்து அவர் நடித்து வருகிறார்.

நாகார்ஜுனா க்ரேஸ்
அவரது மகன்கள் நாக சைதன்யா மற்றும் அகில் இருவரும் தெலுங்கு படவுலகில் தற்போது முன்னணி நட்சத்திரங்களாக திகழ்ந்து வருகின்றனர். ஆயினும் நாகார்ஜூனாவிற்கு தெலுங்கு பட உலகில் உள்ள மதிப்பும் கிரேஸும் சற்றும் குறையவில்லை.

பிக்பாஸ் தெலுங்கு சீசன் 5
தெலுங்கில் சிறப்பாக நடந்து வரும் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்றுள்ளார். சிறப்பான வகையில் நிகழ்ச்சியை அவர் கொண்டு செல்கிறார். ஏராளமான ரசிகர்கள் இதற்கு உள்ளனர்.

ஆயிரம் ஏக்கர் காடுகள் தத்தெடுப்பு
இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் ஆயிரம் ஏக்கர் காடுகளை தத்தெடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மூன்று வாரங்களில் மூன்று மரங்கள்
அடுத்த மூன்று வாரங்களில் மூன்று மரங்களையாவது நட உள்ளதாக அவர் உறுதி செய்துள்ளார். மேலும் தனது ரசிகர்களையும் மரங்களை நட்டு சூழ்நிலையை பாதுகாக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். தமிழகத்தில் நடிகர் விவேக் இவ்வாறு மரங்களை நடுவதை சிறப்பான வகையில் கொண்டு சென்ற நிலையில் தற்போது நாகார்ஜுனா அந்த முயற்சியை ஆந்திராவில் மேற்கொண்டு வருவது சிறப்பானது.

மகனின் விவாகரத்து முடிவு
நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யா மற்றும் மருமகள் சமந்தா இருவரும் சமீபத்தில் விவாகரத்து முடிவை எட்டியுள்ளனர். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து நாகார்ஜுனா வருத்தம் தெரிவித்திருந்தார். மேலும் அவர்கள் சிறிது தங்களது விவாகரத்து முடிவு குறித்து மறுபரிசீலனை செய்து இருக்கலாம் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
Recommended Video

பிஸியான நாகார்ஜுனா
ஆயினும் சினிமா மற்றும் இத்தகைய பிக்பாஸ் உள்ளிட்ட நிகழ்வுகளில் அவர் மிகவும் பிஸியாக காணப்படுகிறார். தொடர்ந்து சிறப்பான பல படங்களை தன்னுடைய ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறார். தொடர்ந்து பல கதைகளை கேட்டும் வருகிறார். தயாரிப்பிலும் அவர் ஈடுபட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











