அவருக்கும் உனக்கும் நைட் நிச்சயம் ஆயிடுச்சாமே? நாக சைதன்யாவிடம் கேட்ட நாகார்ஜூனா... ஷாக்கான ஃபேன்ஸ்!

சென்னை: நடிகர் நாகார்ஜூனா தனது மகன் நாக சைதன்யாவிடம் பிரபல நடிகையுடன் நிச்சயதார்த்தம் முடிந்தவிட்டதா என்று கேட்ட தகவல் வெளியாகியுள்ளது.

தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் நாகார்ஜூனா. அவருடைய மகன்கள் நாக சைதன்யா மற்றும் அகில் ஆகிய இருவரும் இளம் ஹீரோக்களாக வலம் வரும் நிலையில் அவர்களுடன் நாகார்ஜூனாவும் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்.

மனதில் பட்டதை பட்டென பேசி வரும் நாகார்ஜூனா தனது மகன்களிடம் நண்பர் போல பழகி வருகிறார். நடிகை சமந்தாவை நாக சைதன்யா காதல் திருமணம் செய்ய சம்மதம் தெரிவித்த நாகார்ஜூனா அவர்களுடன் நட்பாக பழகி வந்தார்.

சமந்தா நாக சைதன்யா விவாகரத்து

சமந்தா நாக சைதன்யா விவாகரத்து

இந்நிலையில் நாக சைதன்யாவும் நடிகை சமந்தாவும் சமீபத்தில் தங்களின் திருமண பந்தம் முறிவதாக சமூக வலைதள பக்கத்தில் அறிவித்தனர். அவர்களின் இந்த முடிவு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இருப்பினும் அவர்கள் இருவரும் தங்களின் வேலைகளில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

அனுஷ்காவுடன் நிச்சயதார்த்தம் வதந்தி

அனுஷ்காவுடன் நிச்சயதார்த்தம் வதந்தி

இந்நிலையில் நாகார்ஜூனா 2017 ஆம் ஆண்டு அளித்த பேட்டி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அதில் நடிகர் நாகார்ஜூனா தனது மகன் நாக சைதன்யா அனுஷ்கா ஷெட்டியுடன் நிச்சயதார்த்தம் செய்தார் என்று பரவி வதந்தி குறித்து பேசியுள்ளார். அப்போது இப்படி ஒரு தகவல் பரவியதுமே ​​சுவிட்சர்லாந்தில் ஒரு படத்தின் படப்பிடிப்பில் இருந்த சைதன்யாவை உடனடியாக அழைத்து பேசியது குறித்து கூறியுள்ளார்.

நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாமே

நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாமே

அதிகாலையில் நாக சைதன்யாவுக்கு போன் செய்து, நேற்றிரவு உனக்கும் அனுஷ்கா ஷெட்டிக்கும் திருமண நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாமே.. என்கிட்ட கூட சொல்லவில்லை என்று கேட்டுள்ளார். அதற்கு நாக சைதன்யா, ஓ அப்படியா.. உண்மையாவா.. என கேட்டு சத்தமாக சிரித்துள்ளார்.

தயாரிப்பாளர் பார்த்த வேலை

தயாரிப்பாளர் பார்த்த வேலை

மேலும் அனுஷ்காவுக்கு நான் போன் செய்தேன் இதுகுறித்து பேசி இருவரும் சிரித்தோம் என கூறியுள்ளார் நாக சைதன்யா. இதனை நாகார்ஜூனா தனது பேட்டியில் கூறியுள்ளார். இந்த வதந்தியால் நாகார்ஜூனா , நாக சைதன்யா மட்டுமின்றி அனுஷ்காவும் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளார். மேலும் இந்த வதந்தியை பரப்பியது ஒரு தயாரிப்பாளர்தான் என்றும் அவர் கூறியுள்ளார்.

வைரலாகும் பேட்டி

வைரலாகும் பேட்டி

கடந்த காலங்களில் நடிகர் நாகார்ஜூனாவும் அனுஷ்கா மற்றும் சார்மி கவுர் உட்பட பல நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்டுள்ளார். தற்போது நாக சைதன்யாவும் சமந்தாவும் விவாகரத்து அறிவித்துள்ள நிலையில் நாகார்ஜூனாவின் இந்த பேட்டி வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X