கூலி படத்தில் நடிக்க நாகார்ஜுனா வாங்கிய சம்பளம்.. ரஜினி காம்பினேஷனில் செம சம்பவம் இருக்கு!
சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் கூலி படத்தின் சூட்டிங் சென்னை மற்றும் ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் அடுத்தடுத்து நடத்தப்பட்டு வருகிறது. தங்கக் கடத்தலை மையமாக வைத்து உருவாகி வரும் இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். முன்னதாக படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
கூலி படத்தில் ரஜினியுடன் இணைந்து நடித்துள்ள சத்யராஜ், நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன் உள்ளிட்டவர்களின் கேரக்டர் போஸ்டர்களையும் அடுத்தடுத்து லோகேஷ் கனகராஜ் வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார். படத்தில் நடிகர் நாகார்ஜுனா ரஜினிக்கு வில்லனாக நடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. அவரது கேரக்டர் மிகவும் பவர்ஃபுல்லாக அமைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடிகர் ரஜினிகாந்த்: நடிகர் ரஜினிகாந்தின் 171வது படமாக உருவாகி வருகிறது கூலி. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் இணைந்துள்ள இந்த படத்தில் மேலும் அட்ராக்ஷனை கூட்டும் வகையில் சத்யராஜ், நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலரும் இணைந்து லீட் கேரக்டர்களில் இணைந்துள்ளனர். படத்தின் கேரக்டர்கள் குறித்து தொடர்ந்து அடுத்தடுத்த நாளில் பதிவுகளை வெளியிட்டிருந்தார் லோகேஷ் கனகராஜ். இந்நிலையில் இந்த படத்தின் சூட்டிங் சென்னை மற்றும் ஹைதராபாத் ஆகிய இடங்களில் அடுத்தடுத்து நடந்து வருகிறது. அதிரடி ஆக்ஷன் களத்தில் உருவாகி வரும் இந்த படம் ரஜினிகாந்தின் கேரக்டரில் பெஸ்ட்டாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாகார்ஜுனா சம்பளம்: இந்த படத்தில் நடிகர் நாகார்ஜுனா முதன் முறையாக ரஜினியுடன் கூட்டணி அமைத்துள்ளார். படத்தில் அவர் சைமன் என்ற வில்லன் கேரக்டரில் நடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. லோகேஷ் வெளியிட்டிருந்த நாகார்ஜுனாவின் கேரக்டர் போஸ்டரும் மாஸ் காட்டியது. இந்நிலையில் அவர் இந்த படத்தில் நடிப்பதற்காக 24 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது. வில்லன் கேரக்டரில் நடிக்கும் நடிகருக்கு இவ்வளவு பெரிய தொகையை சன் பிக்சர்ஸ் வழங்கியுள்ளது. படத்தில் ரஜினிக்கு டஃப் கொடுக்கும் வகையில் அதிரடி வில்லனாக நாகார்ஜுனா இருப்பார் என்று எதிர்பார்க்கலாம்.
முன்னணி நடிகர்: நடிகர் நாகார்ஜுனா தொடர்ந்து 30 ஆண்டுகளை கடந்து திரைத்துறையில் பயணித்து வருகிறார். தெலுங்கில் மாஸ் ஹீரோவாக காணப்படும் இவரது மகன்களும் ஹீரோக்களாக நடித்து வருகின்றனர். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் 100 படங்களுக்கும் மேலாக நாகார்ஜுனா நடித்துள்ளார். பல வெற்றிப் படங்களை கொடுத்து டோலிவுட்டில் மாஸ் ஹீரோவாக வலம்வந்துக் கொண்டிருக்கும் நாகார்ஜுனா தெலுங்கு பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியிலும் தொகுப்பாளராக உள்ளார். இந்த நிகழ்ச்சியை அவர் தொகுத்து வழங்க 100 கோடி ரூபாய்க்கும் மேலாக சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ரசிகர்கள் ஆச்சர்யம்: இதனிடையே, முன்னதாக தோழா படத்தில் நடிகர் கார்த்தியுடன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்த நாகார்ஜுனா, தற்போது தனுஷுடன் குபேரா படத்திலும் நடித்து வருகிறார். இந்தப் படத்திலும் நாகார்ஜுனாவின் கேரக்டர் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்நிலையில் அடுத்ததாக சூப்பர்ஸ்டார் படத்தில் இணைந்துள்ளார் நாகார்ஜுனா. இந்தப் படத்திற்காக அவருக்கு இவ்வளவு பெரிய தொகை சம்பளமாக பேசப்பட்டுள்ளது ரசிகர்களை வாயடைக்க வைத்துள்ளது.


Click it and Unblock the Notifications











