மனைவி குறித்து மோசமான கமெண்ட்… நெட்டிசனை லெப்ட் ரைட் வாங்கிய நகுல்!
சென்னை : மனைவியை மோசமாக விமர்சித்த நபரை கடுமையாக விமர்சித்துள்ளார் நடிகர் நகுல்.
தமிழ் சினிமா நட்சத்திரமான நகுல் தற்போது சின்னத்திரையில் பல ரியாலிட்டி ஷோவில் நடுவராக அலங்கரித்து வருகிறார்.
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் நகுல், அவ்வப்போது விதவிதமான புகைப்படத்தை இணையத்தில் பகிர்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.

நகுல்
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் உருவான பாய்ஸ் படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர் பிரபல நடிகை தேவயானியின் தம்பியான நகுல். அந்த படத்தில் ஓவராக எடை போட்டு செம்ம குண்டாக இருந்தவர், அதன் பின்னர் தீவிர உடற்பயிற்சிகளை செய்து ஸ்லிம் லுக்கிற்கு மாறினார்.

ஏராளமான படங்களில்
அதன் பின்னர் இவர் நடித்த காதலில் விழுந்தேன் படத்தில் இடம் பெற்ற நாக்கு முக்க பாடல் பட்டி, தொட்டி எல்லாம் ஹிட்டடித்து இளம் நடிகர்கள் பட்டியலில் இடம் பிடித்தார் நகுல். அதன்பின் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், மாசிலாமணி, நான் ராஜவாகப் போகிறேன், வல்லினம் ஆகிய படங்களில் நடித்தார்.

மோசமான கருத்து
நடிகர் நகுல் 2016ம் ஆண்டு சுருதி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அகிரா என்ற மகளும் உள்ளார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் நகுல், மனைவி மற்றும் குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துஇருந்தார். இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன் ஒருவர், உங்கள் மனைவி திருநங்கை போல இருக்கிறார் என மோசமாக விமர்சித்துள்ளார்.

நீ கண்டிப்பா கஷ்டப்படுவ
இதனால் கடுப்பான நகுல், அந்த நெட்டிசனை கமெண்டிலேயே லெப்ட் ரைட் வாங்கிவிட்டார். அதில் அவர், நீ யாரு என்ன ப்ரோன்னு கூப்பிடுறதுக்கு? உனக்கும் எனக்கும் காமனா என்ன இருக்கு? நீ பேசினத்துக்கு கண்டிப்பா கஷ்டப்படுவ. இந்த மாதிரி பேசுறவங்க லைப்ல எதுவுமே சாதிக்காம அடுத்தவங்கள குறை சொல்ற சீப்பான கேரக்டரா தான் இருக்க முடியும் என அந்த நபரை விமர்சித்து பதில் கமெண்ட் அளித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











