'டேய் கம்பெனி கொடுடா'.. உடற்பயிற்சிக்கு "அதை" அழைத்த நகுல் !
சென்னை : உடற்பயிற்சி செய்யும் வீடியோவை நகுல் வெளியிட்டுள்ளார்.
நகுல் மற்றும் அவரது மனைவி இணைய ரசிகர்களுக்கு பிடித்த ஜோடியாக தற்போது வலம் வந்து கொண்டிருக்கின்றனர். இவர்கள் சமூக வலைத்தளத்தில் பதிவிடும் அனைத்து வீடியோக்களும் வைரல் தான். இதே போல் தற்போதும் ஒரு காணொளியை பதிவிட்டுள்ளனர் நகுல் மற்றும் அவரது மனைவி.

நகுல் தான் வளர்க்கும் செல்லபிராணிகளான நாய்களுக்கு அருகே உடற்பயிற்சி செய்ய அவரது மனைவி ஸ்ரூபி வீடியோ எடுக்கிறார். தான் செய்யும் உடற்பயிற்சியின் பலன்கள் பற்றி கூறும் நகுல் தனது செல்லபிராணியில் ஒன்றை 'டேய் கம்பெனி கொடுடா' என்று கூறுகிறார் இவர் கூறியதும் சட்டென்று சிரித்து கிண்டல் செய்கிறார் அவரது மனைவி. பின் இந்த உடற்பயிற்சியை செய்து விட்டு மனைவியை கிண்டலடித்து நகர்ந்து விடுகிறார் நகுல். இதை அனைத்தையும் சிரித்த படியே வீடியோ எடுக்கிறார் ஸ்ரூபி.
நகுலும் அவரது மனைவியும் இணைந்து செய்யும் காதல் கலந்த சேட்டைகளை ரசிகர்கள் வெகுவாக ரசித்து பகிர்வார்கள். அவர்கள் இணைந்து செய்யும் சேட்டைகள் மற்றும் இணைந்து பாடும் பாடல்களுக்கு நான் அடிமை என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது
பல பிரபலங்களும் இவர்களை போலவே நகுல் மற்றும் அவரது மனைவி இணைந்து பாடும் பாடல்களுக்கு நாங்கள் ரசிகர்கள் என்றே தொடர்ந்து கூறி வருகின்றனர். நகுல் நன்றாக கித்தார் வாசிப்பார் இதனால் பெரும்பாலும் நகுல் மெட்டமைக்க அதை தன் அழகான குரலால் பாடி அசத்துவார் ஸ்ரூபி .

இவர்கள் இனைந்து பாட்டு பாடுவதை தாண்டி பல இயல்பான செயல்களையும் அதிகபடியாக இன்ஸ்டாகிராமில் பகிர்வது வழக்கம். இவர்கள் இருவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை இதற்காகவே பல இணைய ரசிகர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர்.

கொரோனா பாதிப்பு காரணமாக பல உடற்பயிற்சி கூடங்களும் மூடியிருக்கின்றன. இந்த நிலையில் பொது மக்கள் மட்டுமின்றி பல பிரபலங்களும் உடற்பயிற்சி கூடத்திற்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் பலரும் தங்கள் வீடுகளில் இருந்த படியே தங்களால் முடிந்த உடற்பயிறச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











