twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஃப்ளிப்கார்டில் ரூ. 1.25 லட்சம் ஐபோன் ஆர்டர் செய்து ஏமாந்த நடிகர் நகுல்

    By Siva
    |

    Recommended Video

    ஃப்ளிப்கார்டில் ஐபோன் ஆர்டர் செய்து ஏமாந்த நகுல் - வைரல் வீடியோ

    சென்னை: ஃப்ளிப்கார்ட்டில் ரூ. 1.25 லட்சத்திற்கு ஐபோன் ஆர்டர் செய்த நடிகர் நகுலுக்கு போலி போன் வந்துள்ளது.

    நடிகர் நகுல் தனது மூன்றாவது திருமண நாள் அன்று மனைவிக்கு ஐபோன் ஒன்றை பரிசளிக்க விரும்பினார்.இதையடுத்து அவர் ஃப்ளிப்கார்டில் ரூ. 1.25 லட்சத்திற்கு ஐபோன் எக்எஸ் மேக்ஸ்(256ஜிபி) ஒன்றை ஆர்டர் செய்தார். ஆனால் அவருக்கு போலி ஐபோன் வந்துள்ளது.

    இது குறித்து அவர் சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது,

    ஐபோன்

    ஐபோன்

    நவம்பர் மாதம் 29ம் தேதி தேதி நான் ஃப்ளிப்கார்ட்டில் ஐபோன் எக்எஸ் மேக்ஸ்(256ஜிபி) ஆர்டர் செய்தேன். 3வது ஆண்டு திருமண நாள் பரிசாக மனைவிக்கு கொடுக்க நினைத்தேன். போன் நவம்பர் 30ம் தேதி டெலிவரி செய்யப்பட்டது. நான் ஊரில் இல்லாததால் டிசம்பர் 1ம் தேதி அந்த பாக்கெட்டை பிரித்து பார்த்தபோது அதில் போலி ஐபோன் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்.

    பணம்

    பணம்

    உடனே ஃப்ளிப்கார்ட் கஸ்டமர் கேருக்கு போன் செய்தால் நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது, நீங்கள் தான் அருகில் உள்ள ஆப்பிள் ஸ்டோருக்கு போக வேண்டும் என்றார்கள். அதன் பிறகு நிறைய பேசிய பிறகு போனை திருப்ப பெற மறுநாள் ஒருவரை அனுப்புவதாகவும், எனக்கு பணத்தை வாபஸ் தருவதாகவும் கூறினார்கள். ஆனால் போனை வாங்க யாரும் வரவில்லை.

    வாக்குறுதி

    பின்னர் இமெயில் அனுப்பி போனை திரும்பப் பெற்றுக் கொள்ள 12 நாட்கள் ஆகும் என்றார்கள். அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை என்பதும், ஒருவர் ரூ. 1.25 லட்சத்தை ஏமாந்து நிற்கும்போது அவர்கள் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் இருப்பதும் எரிச்சல் அடைய வைக்கிறது. ஃப்ளிப்கார்ட் இதை சீரியஸாக எடுத்துக் கொண்டு மக்களை ஏமாற்ற மாட்டோம் என்று வாக்குறுதி அளிக்கும் என்று நம்புகிறேன் என நகுல் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

    வீடியோ

    போலி ஐபோனை வீடியோ எடுத்து அதை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் நகுல்.

    ட்விட்டர்

    நகுலின் ட்வீட்டுகளை பார்த்த ஃப்ளிப்கார்ட் நிறுவனம் போனை திரும்பப் பெற்றுக் கொண்டு பணம் வாபஸ் அளிக்கப்படும் என்று வாக்குறுதி அளித்துள்ளது.

    English summary
    Actor Nakul is irritated with Flipkart after he received a fake phone while he ordered iphone XS MAX worth Rs. 1.25 lakh.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X