இந்தியன் 2 செட்டில் கமல் ஹாசன் அப்படித்தான் இருந்தார்.. நடிகர் ஜெகன் பெருமிதம்
சென்னை: ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடித்திருக்கும் திரைப்படம் இந்தியன் 2 வரும் 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. அனிருத் இசையமைத்திருக்கிறார். இதில் கமலுடன் சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட ஏராளமானோர் நடித்திருக்கிறார்கள். மிகப்பெரிய எதிர்பார்ப்போடு உருவாகியிருக்கிறது படம். இந்தச் சூழலில் இந்தியன் 2வில் கமலுடன் நடித்த அனுபவத்தை நடிகர் ஜெகன் ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டிருக்கிறார். அது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்திருக்கிறது.
உலக நாயகன் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் கமல் ஹாசன் விக்ரம் படத்தின் மூலம் சினிமாவில் மீண்டும் ரீ எண்ட்ரி கொடுத்தார். அந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து உற்சாகமடைந்த அவர்; இந்தியன் 2 பட பணிகளை தூசு தட்டினார். ஏற்கனவே சில வருடங்களுக்கு முன்பு இந்தியன் 2 ஷூட்டிங் தொடங்கி படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்தின் காரணமாக நிறுத்தப்பட்டது. பிறகு லைகாவுடன் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்துகொள்ள படத்தின் பணிகள் துரிதப்படுத்தப்பட்டன.

முடிந்த ஷூட்டிங்: அதனையடுத்து இந்தியா, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் படத்தின் ஷூட்டிங் நடந்தது. இந்தப் படத்தின் முதல் பாகம் எப்படி மிகப்பெரிய வெற்றி பெற்றதோ அதேபோல் இதனையும் வெற்றி பெற வைக்க வேண்டும் என்று ஷங்கரும், கமல் ஹாசனும் மும்முரமாக உழைத்தார்கள். இடையே வசந்தபாலனும் படத்தின் சில காட்சிகளை ஷூட் செய்தார்.
இந்தியன் 2 ரிலீஸ்: படத்தின் ட்ரெய்லர் சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. அதனைப் பார்த்த ரசிகர்கள் வழக்கமான ஷங்கர் டெம்ப்ளேட்டுக்குள்தான் படம் இருக்குமோ என்ற சந்தேகத்தை எழுப்பினார்கள். அதேசமயம் படம் மிகவும் அருமையாக வந்திருக்கிறது என்றும்; நிச்சயம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகும் என்றும் கமலின் ரசிகர்களும், ஷங்கரின் ரசிகர்களும் ஓபன் ஸ்டேட்மெண்ட்டை சமூக வலைதளங்களில் விட ஆரம்பித்திருக்கின்றனர். படமானது இந்த மாதம் 12அம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. அதனையொட்டி படத்தின் ப்ரோமோஷன் பணிகள் சூடு பிடித்திருக்கின்றன.
ஜெகன் பேட்டி: இந்தியன் 2வில் நடித்திருக்கும் நடிகர் ஜெகன் கமல் ஹாசன் குறித்து ஒரு பேட்டியில் பேசுகையில், "ஷூட்டிங்கின்போது ஒருநாள்கூட பாலசந்தர் மற்றும் நாகேஷ் குறித்து கமல் ஹாசன் பேசாமல் இருந்ததே இல்லை. தூங்காவனம் படத்தில் நடித்தபோது கமலுடன் 18 நாட்கள் இருந்தேன். அப்போதும் பாலசந்தர் பற்றி பேசாமல் இருந்ததே இல்லை. அப்படியே அவர் மறந்துவிட்டாலும்; ஷூட்டிங் ஸ்பாட்டில் இருப்பவர்கள், 'மணி 5 ஆகிடுச்சு.. இன்னும் பாலசந்தர், நாகேஷ் பற்றி பேசவில்லையா' என்று விளையாட்டாக கேட்பார்கள். அந்த அளவுக்கு கமலுக்கு குரு பக்தி அதிகம்.
நடை தளர்ந்துவிட்டது: இந்தியன் 2 செட்டுக்கு சேனாபதி கெட்டப் போட்டு நடந்து வந்தார் கமல். அவரை பார்த்தபோது சரி கமலுக்கு வயதாகிவிட்டது அவரது நடையில் ரொம்பவே தளர்ச்சி ஏற்பட்டுவிட்டதுபோல என்று நினைத்தேன். பிறகு ஒரு சீன் எடுத்தார்கள். மூன்றாவது டேக்கில் டைரக்டர் ஓகே சொல்லிவிட்டார். ஆனால் கமல் ஹாசனோ இல்லை நடையை மிஸ் செய்துவிட்டேன். இன்னொரு டேக் போகலாம் என்று சொன்னார். அப்போதுதான் தெரிந்தது; கமலுக்கு வயதாகவில்லை; கெட் அப் போட்டு நுழையும்போதே சேனாபதியாக மாறிவிடுகிறார் என்று. அதனை நான் தவறாக புரிந்துகொண்டேன்" என்றார்.


Click it and Unblock the Notifications











