நடிகர் சங்க கட்டடப் பணிகளுக்கு நெப்போலியன் நிதி உதவி.. அடேங்கப்பா! இவ்வளவு பெரிய தொகையா?

சென்னை: நடிகர் சங்க கட்டிட பணி மீண்டும் தொடங்கி இருக்கும் நிலையில் பல்வேறு நடிகர்கள் தங்களால் முடிந்த அளவிற்கு பண நிதி உதவி செய்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் நெப்போலியன் புதியதாக கட்டப்பட்டு வரும் நடிகர் சங்கத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிதி உதவி வழங்கியிருக்கிறார்.

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு புதியதாக கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட கட்டுமான பணிகள் நிதி பற்றாக்குறை காரணமாக நிறைவு பெறாமல் இருந்தது. இந்த பணி நிறைவு பெற வங்கியில் 40 கோடி கடன் வாங்க ஒப்புதல் வாங்கி இருப்பதாக சங்கப் பொருளாளர் கார்த்தி 67வது சங்கப் பொதுக்குழு கூட்டத்தின் போது தெரிவித்திருந்தார்.

Actor Napoleon Donated One Crore Fund for Actors sangam Building

இதை தொடர்ந்து நடிகர் சங்க கட்ட புதிய கட்டிடம் முழுமையாக கட்டி முடிக்க அமைச்சர் உதயநிதி நடிகர் சங்க ஆயுட்கால உறுப்பினர் என்ற முறையில் ஒரு கோடிக்கான காசோலை வழங்கினார். அதைத் தொடர்ந்து சங்கத்தின் அறக்கட்டளை உறுப்பினர் கமல்ஹாசன் ஒரு கோடி நிதி உதவி வழங்கினார். அதைத் தொடர்ந்து விஜய் ஒரு கோடி நன்கொடை அளித்ததாகவும், சிவகார்த்திகேயன் 50 லட்சம் கொடுத்துள்ளதாகவும் நடிகர் சங்கம் அறிவிக்கை வெளியிட்டு இருந்தது.

இடைத்தொடர்ந்து கடந்த 22 ஆம் தேதி சங்கத்தின் புதிய கட்டிடப்பணிகள் மீண்டும் பூஜை உடன் தொடங்கப்பட்டது. பூஜை விழாவில் சங்கத்தின் தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி, துணை தலைவர் பூச்சி முருகன் உட்பட பல முக்கிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். இந்த நிலையில் நடிகர் நெப்போலியன் நடிகர் சங்க புதிய கட்டிட பணிகளை தொடருவதற்காக ஒரு கோடி நிதி உதவி அளித்துள்ளதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

இது தொடர்பாக நடிகர் சங்கம் சார்பில் தலைவர் நாசர் அறிக்கை ஒன்று வெளியிட்டு இருக்கிறார். "அதில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் மூத்த உறுப்பினரும் 2000- 2006ம் காலகட்டத்தில் சங்கத்தில் உப தலைவராக பொறுப்பேற்று செயலாற்றியவருமான நெப்போலியன் சங்க கட்டிட வளர்ச்சிக்காக ஒரு கோடி வைப்பு நிதியாக வழங்கினார்.." அவருக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் மனமார்ந்த வாழ்த்து கூறி நன்றியை தெரிவித்துள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Actor Napoleon Donated One Crore Fund for Actors sangam Building

நடிகர் நெப்போலியன் நடிகராக மட்டுமல்லாமல் அரசியல் தலைவராகவும் இருந்து வந்தார். ஆனால் தற்போது தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளோடு அமெரிக்காவில் செட்டில் ஆகி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல ஆட்டிசம் பாதித்த தன்னுடைய மகனைப் போல இருக்கும் குழந்தைகளுக்காக நெப்போலியன் தன்னுடைய சொந்த செலவில் பிரம்மாண்டமான மருத்துவமனை ஒன்றையும் கட்டி அதில் பலருக்கு இலவசமாக மருத்துவம் பார்த்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X