விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு பிரபல நடிகர்... யார் தெரியுமா ?

சென்னை : கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் விக்ரம் படத்தில் மேலும் ஒரு நடிகர் இணைந்துள்ளார்.

கமலஹாசன் மற்றும் விஜய் சேதுபதி இருவரும் ஒரே படத்தில் நடித்து வருவதால் கோலிவுட் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

விக்ரம்

விக்ரம்

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ராஜ்கமல் பில்ம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் விக்ரம். இந்தத் திரைப்படத்தில் விஜய் சேதுபதி,பகத் பாசில் நரேன்,அர்ஜுன் தாஸ்,காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் நடிக்கின்றனர்.

பிரம்மாண்ட வெற்றி

பிரம்மாண்ட வெற்றி

லோகேஷ் கனகராஜ் திரைக்கதையை விறுவிறுப்பாக அமைப்பதில் கெட்டிக்காரர். மேலும் வித்தியாசமானக் கதைகளை வைத்து படம் இயக்குபவர். இவரின் இயக்கத்தில் விஜய் சேதுபதி ஏற்கனவே மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருப்பார். இவரின் பவானி என்கிற கதாபாத்திரம் ரசிகர்களிடையே பெருமளவில் பேசப்பட்டது. மேலும் இவரின் இயக்கத்தில் உருவான மாநகரம்,கைதி,மாஸ்டர் என அனைத்துத் திரைப்படங்களும் பிரம்மாண்ட வெற்றி பெற்றன.

ஃபர்ஸ்ட் லுக் நல்ல வரவேற்பு

ஃபர்ஸ்ட் லுக் நல்ல வரவேற்பு

மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்த விக்ரம் படத்திலும் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகி வருகின்றனர். இருப்பினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகாததால் வெறும் யூகங்களில் அடிப்படையிலேயே விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது. இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஜூலை மாதம் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில், நல்ல வரவேற்பை பெற்றது. காரைக்குடியில் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகி தற்போது விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஷிவானி உறுதியாகவில்லை

ஷிவானி உறுதியாகவில்லை

அதேபோல, விஜய் சேதுபதிக்கு ஜோடியாக பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்களின் மனங்களை வென்ற ஷிவானி நடிக்கவிருக்கிறார் என்ற தகவலும் வெளியானது. ஆனால், அந்த தகவலை படக்குழு அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.

விக்ரம் படத்தில் இணைந்த நரேன்

விக்ரம் படத்தில் இணைந்த நரேன்

இந்த நிலையில், இந்த படத்தில் நடிகர் நரேன் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவலை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அறிவித்துள்ளார். நரேனும் விக்ரம் படப்பிடிப்பு தளத்தில் கமலுடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். ஏற்கனவே நடிகர் நரேன் லோகேஷ் கனகராஜ் இயக்கிய கைதி படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

காளிதாஸ் ஜெயராம் மகனாக

காளிதாஸ் ஜெயராம் மகனாக

இதேபோல, உலக நாயகன் கமல் ஹாசனுக்கு மகனாக மலையாள நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் ஜெயராம் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளியானது. இருவரும் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு இதை உறுதிப்படுத்தினார். இதே போல ஆண்ட்ரியாவின் பெரும் இந்த படத்தில் அடிபட்டு வருகிறது. படக்குழு தரப்பிலிருந்து எந்த தகவலும் இதுவரை உறுதியாகவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X