சூர்யாவுக்கு குரல் கொடுத்தது சவாலாக இருந்தது… நடிகர் நரேன் !
சென்னை : ஜெய்பீம் மலையாளத் திரைப்படத்திற்கு சூர்யாவுக்கு நடிகர் நரேன் டப்பிங் கொடுத்துள்ளார்.
அவருக்கு குரல் கொடுத்ததில் மகிழ்ச்சியும் பெருமையும் அடைவதாக நரேன் கூறியுள்ளார்.
ஜெய் பீம் திரைப்படம் அமேசான் பிரைமில் வெளியாகி அனைத்து தரப்பு மக்களின் பாராட்டையும் பெற்றது. இத்திரைப்படத்தில் சூர்யா, லியோ மோல் ஜோஸ், மணிகண்டன் மற்றும் பிரகாஷ்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

உண்மை சம்பவம்
தா.செ.ஞானவேல் இயக்கியுள்ள ஜெய் பீம், உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டது. இருளர்களின் இருண்ட பக்கங்கங்களை ஆழ ஆராய்ந்து காட்சிப்படுத்தியது ஜெய்பீம். 1995 ஆம் ஆண்டின் பின்புலத்தில் உருவாக்கப்பட்டுள்ள ஜெய் பீம், திருட்டு வழக்கில் மூன்று இருளர் ஆண்கள் கைது செய்யப்படுவதில் தொடங்குகிறது கதை.

பலரின் பாராட்டு
அவர்கள் மீது பொய் வழக்குகள் போடப்பட்டு கற்பனைக்கும் எட்டாத வகையில் சிக்க வைக்கப்படுகின்றனர். வழக்கறிஞராக வந்த சூர்யா வாதாடி பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றுகிறார். பலரின் பாராட்டை பெற்ற இத்திரைப்படம் தற்போது பல விதமான சர்ச்சைகளை சந்தித்து வருகிறது.

சவாலாக இருந்தது
இந்நிலையில்,நடிகர் நரேன், ஜெய்பீம் மலையாள படத்திற்கு சூர்யாவுக்கு நடிகர் நரேன் குரல் கொடுத்துள்ளதாக கூறியுள்ளார். ஜெய்பீம் படத்துக்கும் டப்பிங் பேச அழைத்தபோது ஒப்புக்கொண்டேன். சந்துரு கதாபாத்திரத்திற்கு குரல் கொடுப்பது சவால் நிறைந்ததாக கூறியுள்ளார்.

பெருமை அடைகிறேன்
சூர்யா சாரின் நடிப்பு, வசன உச்சரிப்பு மிக நுட்பமாக இருந்ததால் ஒவ்வொரு பிரேமையும் கவனித்து பேசினேன் இது ஒரு நல்ல அனுபவமாக இருந்தது. சூரியாவுக்கு குரல் கொடுத்ததில் பெருமை அடைகிறேன் என்றார். தமிழைப்போல மலையாளத்தில் இத்திரைப்படத்திற்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. வாய்ப்பு அளித்த சிபு பற்றும் ஜாலி ஆகியோருக்கு நன்றி' என்றார்.

தமிழ் படங்களில்
மலையாள நடிகரான நரேன், கத்துக்குட்டி திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் ஆனார். இதையடுத்து, அஞ்சாதே ,பள்ளிக்கூடம், சித்திரம் பேசுதடி போன்ற திரைப்படங்களிலும் கடைசியாக கார்த்தி நடித்து மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற கைதி திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.


Click it and Unblock the Notifications











