எங்க படத்துக்கு இயற்கை உதவுது.. தேவைப்படும் போதெல்லாம் மழை பெய்யுது.. பேட்ட வில்லன் நடிகர் ஹேப்பி!
சென்னை: தங்களின் படத்திற்கு மழை உதவி செய்வதாக பிரபல நடிகர் தெரிவித்துள்ளார்.
பிரபல பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக். பாலிவுட் மட்டுமின்றி ஹாலிவுட் படங்களிலும், டிவி தொடர்களிலும் நடித்து வருகிறார் நவாசுதீன்.
வெப் சீரிஸ்களிலும் நடித்து வருகிறார். தமிழில் பேட்ட படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

மனைவி குற்றச்சாட்டு
இவரது மனைவி ஆலியா சித்திக் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவருக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பினார். கையோடு டிவிட்டரில் இணைந்த அவர், கணவர் குடும்பத்தினர் மீது குற்றச்சாட்டுக்களை அள்ளி வீசினார். இதனால் நவாசுதீன் சித்திக் அடிக்கடி செய்திகளில் அடிப்பட்டு வந்தார்.

லண்டனில் படப்பிடிப்பு
இந்தப் படத்தின் படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் நவாசுதீன் சித்திக் வில்லனாக நடிக்கிறார். இந்நிலையில் தங்களின் படம் குறித்து ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் அவர் பேசியிருப்பதாவது, நாங்கள் இங்கே ஒரு ரயில் காட்சிக்காக படப்பிடிப்பு நடத்தி வருகிறோம்.

உங்களால் நம்ப முடிகிறதா?
அந்த குறிப்பிட்ட படப்பிடிப்புக்கு எங்களுக்கு மழை தேவைப்பட்டது. நாங்கள் அதை மூன்று வெவ்வேறு நாட்களில் படம் பிடித்தோம், ஒவ்வொரு முறையும் எங்களுக்கு தேவைப்படும் போது இயற்கை மழை பெய்யும்.. இதை உங்களால் நம்ப முடிகிறதா? ஒவ்வொரு முறையும் நாங்கள் இருப்பிடத்தை அடையும்போது, மழை பெய்து கொண்டிருந்தது.

விரைவில் வீடு திரும்புவார்
வானிலை எங்கள் படப்பிடிப்பு ஷெட்யூலை ஆதரிப்பது போல் தெரிகிறது என்று சிரித்தப்படியே கூறியுள்ளார் நவாசுதீன் சித்திக். 'ஹீரோபண்டி 2' இல் தனது காட்சிகளின் படப்பிடிப்பை முடித்துவிட்டு விரைவில் வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தை அகமது கான் இயக்கியுள்ளார். டைகர் ஷெராஃப் மற்றும் தாரா சுதாரியா ஆகியோர் லீடிங் ரோலில் நடிக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











