என் முதல் சம்பளம் ... ‘’ 7 ரூபாய் 50 காசு’’ … பார்த்திபன் உருக்கமான பேச்சு !

சென்னை : இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் படத்திற்கு படம் வித்தியாசமான கதையையும், கதைக் களத்தையும் தேர்வு செய்து இயக்கி வருகிறார்.

கல்லூரி விழா ஒன்றில் கலந்து கொண்டுபேசி பார்த்திபன், மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் பேச வேண்டும் என்று என்னை அழைத்துள்ளார்கள்.

வேறு யாரையும் உதாரணமாக நான் கூறவில்லை, என்னைப் பற்றியே கூறுகிறேன் என்று தனது வாழ்க்கையில் கடந்து வந்த பாதை குறித்து உருக்கமாக பேசினார்.

ஏழு ரூபாய் 50 காசு

ஏழு ரூபாய் 50 காசு

ஒருவன் பத்து பைசா வைத்துக்கொண்டு பத்து கோடி ரூபாயை சம்பாதித்து விடலாம், ஆனால், சம்பாதித்த பரம்பரியத்தை காப்பாற்றுவது என்பது மிகவும் கஷ்டமான விஷயம் என்று தனது பேச்சை தொடங்கிய பார்த்திபன், இதே ராணி சீதை ஹாலில் நான் நாடகம் நடித்திருக்கிறேன். அப்போது என்னுடைய சம்பளம் ஏழு ரூபாய் 50 காசு ஒரு நாடகத்திற்கு நான் வாங்கிய சம்பளம் என்றார்.

ஒத்த செருப்பு சைஸ் 7

ஒத்த செருப்பு சைஸ் 7

ஒத்த செருப்பு சைஸ் 7 என்ற படத்திற்கு தேசிய விருது கிடைத்தது. இப்படம் பல விருதுகளை பெற்ற போதும், ஆஸ்கரை பெறவில்லை. கனவை நோக்கித்தான் வாழ்க்கை நகர வேண்டும் என்பதால் ஆஸ்கர் என் கனவாக உள்ளது. மேலும், ஒத்த செருப்பு சைஸ் 7 இந்தியில் ''8887'' என்ற பெயரில் உருவாகி உள்ளது. இதில் அபிஷேக் பச்சன் நடித்துள்ளார். விரைவில் இத்திரைப்படம் வெளியாகும் என்றார்.

எப்போதும் பயம் இல்லை

எப்போதும் பயம் இல்லை

எனக்கு எப்போதும் பயமும் இல்லை, அதிகம் சம்பாதிச்சதும் இல்லை. நிறைய சம்பாதிப்பவர்களுக்கு எப்போதும் ஒரு பயம் இருக்கும் சம்பாதித்தை பணத்தை பத்திரமாக பாதுகாக்க வேண்டும் என்று, ஆனால் நான், சினிமாவில் சம்பாதித்த பெயரையும், புகழை காப்பாற்ற வேண்டும் என்று நினைக்கிறேன்.

இரவின் நிழல்

இரவின் நிழல்

ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட இரவின் நிழல் அடுத்து வெளியாக உள்ளது. உலகத்திலேயே முதல் முறையாக நான் லீனியரில் சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம் இதுவாகும். லீனியர் சிங்கிள் ஷாட்டில் பல படங்கள் வந்துள்ளன. ஆனால், ஒட்டுமொத்த காட்சியையும் புறட்டிப்போட்டு "நான் லீனியர்" சிங்கிள் ஷாட்டில் படம் எடுப்பது கஷ்டம் அந்த படத்தை நான் தற்போது எடுத்து முடித்துள்ளேன். இரவின் நிழல் திரைப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். அவர் இதுபோன்ற ஒரு படத்தை பார்த்ததே இல்லை என்று கூறுவதை கேட்கும் போது பெருமையாக உள்ளது என்று நடிகர் பார்த்திபன் பெருமித்துடன்பேசினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X