படப்பிடிப்பில் திடீரென மயங்கி விழுந்த பவர் ஸ்டார் சீனிவாசன்.. மருத்துவமனையில் அனுமதி தீவிர சிகிச்சை!
சென்னை: பிரபல நடிகரான பவர் ஸ்டார் சீனிவாசன் திடீர் உடல்நலக் குறைவால் படப்பிடிப்பு தளத்தில் மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் நீதான அவன் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன்.
மருத்துவரான பவர் ஸ்டார் சீனிவாசன், சினிமா மீது கொண்ட ஆர்வத்தால் திரைத்துறையில் என்ட்ரி கொடுத்தார்.

சொந்தப் படத்தில் ஹீரோ
நடிகர், மருத்துவர், நகைச்சுவை நடிகர், அரசியல்வாதி, பாடகர், தயாரிப்பாளர், தொழில் அதிபர் என பல முகங்களை கொண்ட பவர் ஸ்டார் சீனிவாசன், 2011ஆம் ஆண்டு வெளியான லத்திகா படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இந்தப் படத்தை பவர் ஸ்டார் சீனிவாசனே தயாரித்திருந்தார்.

கண்ணா லட்டு தின்ன ஆசையா
அதனை தொடர்ந்து நடிகர் சந்தானத்துடன் கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற படத்தில் நடித்திருந்தார் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன். இந்தப் படத்தின் மூலம் பெரும் பிரபலமானார் பவர் ஸ்டார் சீனிவாசன். தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன்.

நாங்க ரொம்ப பிஸி
கடைசியாக எஸ்ஏ சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான கேப்மாரி படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தார் பவர் ஸ்டார் சீனிவாசன். அவரது நடிப்பில் உருவான நாங்க ரொம்ப பிஸி திரைப்படம் கடந்த ஆண்டு தொலைக்காட்சியில் ரிலீஸ் ஆனது.

வனிதாவுடன் பிக்கப் டிராப் படம்
தற்போது இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன். வனிதா விஜயக்குமாரை வைத்து பிக்கப் டிராப் படத்தை இயக்கும் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன், அந்தப் படத்தில் வனிதாவுக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்தப் படத்திற்காக இருவரும் திருமணக் கோலத்தில் இருப்பது போன்ற போட்டோக்கள் வெளியானது.

திடீர் உடல் நலக்குறைவு
இந்த போட்டோக்கள் பெரும் வைரலானது. இந்நிலையில் படப்பிடிப்பில் பங்கேற்றிருந்த நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. படப்பிடிப்பு தளத்தில் திடீரென மயங்கி விழுந்துள்ளார் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன்.

ரத்த அழுத்தத்தில் ஏற்பட்ட மாறுபாடு
உடனடியாக படக்குழுவினர் அவரை மீட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ரத்த அழுத்தத்தில் ஏற்பட்ட மாறுபாடு காரணமாக நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் மயக்கமடைந்ததாக தெரிகிறது. அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











