ஹாலிவுட்டுக்கு போகும் பாகுபலி ஹீரோ... மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

ஐதராபாத் : ராஜமௌலியின் பாகுபலி படங்களில் நடித்ததன்மூலம் சர்வதேச அளவில் ரசிகர்களுக்கு பிடித்தமான ஹீரோவாக மாறியுள்ளார் பிரபாஸ். சமீபத்தில் பூஜா ஹெக்டேவுடன் பிரபாஸ் நடித்திருந்த ராதே ஷ்யாம் படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது.

நடிகர் பிரபாஸ்

நடிகர் பிரபாஸ்

நடிகர் பிரபாஸ் தெலுங்கின் முன்னணி ஹீரோவாக உள்ளார். இவர் தெலுங்கில் மட்டுமின்றி இந்திய அளவில் மற்றும் சர்வதேச அளவில் ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளார். இதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக அமைந்தது பாகுபலி படங்கள். ராஜமௌலி இயக்கத்தில் ஒரு சாம்ராஜ்யத்தின் சரிவும், வாழ்வும் இந்தப் படத்தில் கதைக்களமாக கொள்ளப்பட்டிருந்தன.

மிரட்டலான நடிப்பு

மிரட்டலான நடிப்பு

இந்தப் படங்களில் தன்னுடைய இயல்பான மற்றும் மிரட்டலான நடிப்பால் பின்னிப் பெடலெடுத்திருந்தார் பிரபாஸ். முன்னதாக சராசரி ஹீரோவாக வலம்வந்த இவர் தெலுங்கின் முன்னணி ஹீரோவாக இந்தப் படம் மூலம் மாறியுள்ளார். தமிழ் உள்ளிட்ட மற்ற மொழிகளிலும் இவரது ரசிகர்கள் அதிகரித்துள்ளனர்.

சம்பளத்தை உயர்த்திய பிரபாஸ்

சம்பளத்தை உயர்த்திய பிரபாஸ்

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியிலும் இவரது படங்கள் ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றன. இவர் தனது சம்பளத்தையும் கணிசமாக உயர்த்தியுள்ளார். தற்போது இவரது சம்பளம் 100 கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது. ஆயினும் சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ராதே ஷ்யாம் கலவையான விமர்னங்களையே பெற்றது.

ராதே ஷ்யாம் படம்

ராதே ஷ்யாம் படம்

இந்தப் படத்தில் பிரபாசுடன் ஜோடி சேர்ந்திருந்தார் பூஜா ஹெக்டே. இவர்களுக்கு இடையிலான கெமிஸ்ட்ரி சிறப்பாக அமைந்ததாக விமர்சனங்கள் எழுந்தன. ஆயினும் படம் திரைக்கதை சொதப்பலாக இருந்ததாக விமர்சனங்கள் வைக்கப்பட்டுள்ளன. இதையடுத்து சலார், ஆதிபுருஷ் ஆகிய படங்களில் பிரபாஸ் நடித்து வருகிறார்.

ராமாயண படத்தில் பிரபாஸ்

ராமாயண படத்தில் பிரபாஸ்

சலார் படத்தில் ஷ்ருதி ஹாசனும், அதேபோல ஆதிபுருஷ் படம் ராமாயணத்தையொட்டி எடுக்கப்பட்டு வருகிறது. இதில் சாயிப் அலிகான் ராவணனாக நடித்து வருகிறார். கிருத்தி சனோன் சீதையாக நடித்து வருகிறார். இந்நிலையில் பிரபாஸ் குறித்த மற்றொரு தகவல் தற்போது வெளியாகி வருகிறது. இது அவரது ரசிகர்களை வெகுவாக உற்சாகமடைய செய்துள்ளது.

ஹாலிவுட்டுக்கு போகும் பிரபாஸ்

ஹாலிவுட்டுக்கு போகும் பிரபாஸ்

பிரபாஸ் ஹாலிவுட் படமொன்றில் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதற்கான இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நிறைவு பெற்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. பிரபாசுக்கு சர்வதேச அளவில் அதிகமான ரசிகர்கள் உள்ளதையே இது காட்டுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X