இந்தியாவிலேயே அதிக சம்பளம்... உச்ச நடிகர்களை முந்திய நடிகர் பிரபாஸ்... எத்தனை கோடிகள்னு பாருங்க!

சென்னை: பாகுபலி நடிகர் பிரபாஸ் இந்திய நடிகர்களில் எவரும் பெறாத அளவுக்கு தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் பிரபாஸ். 2002ஆம் ஆண்டு வெளியான ஈஸ்வர் படத்தின் மூலம் சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்தார்.

தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்த நடிகர் பிரபாஸ், எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான பாகுபலி சீரிஸ் படங்களின் மூலம் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பிரபலமானார்.

பாகுபலி படத்திற்கு பிறகு

பாகுபலி படத்திற்கு பிறகு

பாகுபலி சீரிஸ் படங்கள் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பட்டையை கிளப்பியது. இதனால் பாலிவுட் நடிகர்களே மிரண்டு போயினர். பாகுபலி படத்தின் மூலம் கிடைத்த வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்த தனது படங்களுக்கு சம்பளத்தை 100 கோடிகளாக உயர்த்தினார் நடிகர் பிரபாஸ்.

ரூ. 100 கோடி சம்பளம்

ரூ. 100 கோடி சம்பளம்

பாகுபலி தி கன்க்லூஷன் படத்தை தொடர்ந்து சாஹோ படத்தில் நடித்த பிரபாஸ் அந்தப் படத்திற்காக 100 கோடி ரூபாய் சம்பளம் பெற்றதாக கூறப்பட்டது. தற்போது ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் ராதே ஷ்யாம், கேஜிஎஃப் இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் சலார், ஓம் ராவுத் இயக்கத்தில் ஆதி புருஷ் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் பிரபாஸ்.

பல மொழிகளில் வெளியீடு..

பல மொழிகளில் வெளியீடு..

மேலும் தெலுங்கு மற்றும் இந்தியில் உருவாகும் மற்றொரு படத்திலும் நடித்து வருகிறார் நடிகர் பிரபாஸ். தொடர்ந்து பெரிய பட்ஜெட் படங்களில் நடிக்கும் பிரபாஸின் படங்கள் தெலுங்கு மட்டுமின்றி தமிழ், இந்தி, கன்னட மொழிகளிலும் வெளியிடப்பட்டு வருகிறது. இதனால் பிரபாஸின் படங்கள் மற்ற மொழிகளிலும் வசூலை குவித்து வருகிறது.

ரூ. 150 கோடிகளாக உயர்ந்த சம்பளம்

ரூ. 150 கோடிகளாக உயர்ந்த சம்பளம்

தற்போது ஆதிபுருஷ், ராதே ஷியாம், ஸ்பிரிட் ஆகிய படங்களில் நடித்து வரும் நடிகர் பிரபாஸ் அந்த படங்களுக்காக பெறும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ஆதிபுருஷ், ஸ்பிரிட் படங்களுக்காக நடிகர் பிரபாஸுக்கு 150 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டாப் நடிகர்களை முந்திய பிரபாஸ்

டாப் நடிகர்களை முந்திய பிரபாஸ்

இதுவரை அதிக சம்பளம் பெறும் இந்திய நடிகர்கள் பட்டியலில் சல்மான்கான், அக் ஷய்குமார் ஆகியோர் இருந்தனர். அவர்கள் ஒரு படத்துக்கு ரூ.100 கோடி வாங்கியதாக கூறப்பட்டது. கடந்த 10 வருடங்களாக இவர்கள் சம்பளத்தை யாரும் முந்தாத நிலையில் இப்போது பிரபாஸ் இருவரையும் பின்னுக்கு தள்ளி அதிக சம்பளம் பெறும் நடிகர்களின் பட்டியலில் டாப்பராக உள்ளார்.

ராமாயண கதையை மையமாக..

ராமாயண கதையை மையமாக..

பிரபாஸின் சம்பளம் குறித்த தகவலை கேட்ட திரையுலகம் வாயை பிளந்துள்ளது. ஆதிபுருஷ் படம் ராமாயண கதையை மையமாக வைத்து தயாராகிறது. இதில் பிரபாஸ் ராமராகவும், சயீப் அலிகான் ராவணனாகவும் நடிக்கின்றனர். கிரித்தி சனோன் சீதையாக வருகிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னட மொழிகளில் உருவாகி வரும் இப்படம் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X